Published:Updated:

கயத்தார் பேரூராட்சி: ஆதிக்கம் செலுத்தும் சுயேச்சைகள்... காரணம் திமுக உள் பஞ்சாயத்து?!

கயத்தார் பேரூராட்சி அலுவலகம்

கயத்தார் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க போன்ற அரசியல் கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

கயத்தார் பேரூராட்சி: ஆதிக்கம் செலுத்தும் சுயேச்சைகள்... காரணம் திமுக உள் பஞ்சாயத்து?!

கயத்தார் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க போன்ற அரசியல் கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

Published:Updated:
கயத்தார் பேரூராட்சி அலுவலகம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். ஆங்கிலேயரை எதிர்த்து கேள்வி கேட்ட வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிடப்பட்ட ஊர் இது. கயத்தார் தாலுகாவுக்கு உட்பட்டது கயத்தார் பேரூராட்சி. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 19 பேரூராட்சிகளில் 16-வது பேரூராட்சியாக உள்ளது. இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில், 8 வார்டுகளில் சுயேச்சையும், 5 வார்டுகளில் தி.மு.க-வும், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தலா ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன.

கயத்தார்
கயத்தார்

இதில், 14-வது வார்டு சுயேச்சை வேட்பாளரான தங்கப்பாண்டியன் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலேயே சுயேச்சை வேட்பாளர்கள் மெஜாரிட்டி எண்ணிக்கையில் வெற்றிபெற்றிருப்பது ஆச்சர்த்தையும், அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருந்தாலும் சுயேச்சைகள் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறுவதற்கு தி.மு.க கட்சிக்குள் நிலவிய கோஷ்டிப்பூசலும் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து கயத்தார் தி.மு.க-வினர் தரப்பில் பேசினோம். ``கயத்தாரில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சம பலத்துலதான் இருக்கு. கயத்தார் பேரூராட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க-வோட கட்டுப்பாட்டுல இருக்கு. வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவனின் கட்டுப்பாட்டுல இருக்கு. இந்த உள்ளாட்சித் தேர்தல்ல போனமுறை வெற்றிபெற்ற சிலருக்குக்கூட மீண்டும் வாய்ப்பு தரலை. கீதா ஜீவனோட ஆதரவாளர்களுக்கு மட்டும்தான் சீட் கொடுக்கப்பட்டிருக்கு.

கீதா ஜீவன் - அனிதா ராதாகிருஷ்ணன்
கீதா ஜீவன் - அனிதா ராதாகிருஷ்ணன்

ஆனா, கயத்தார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவரான கோதண்டராமனோட மகன் அய்யாத்துரைக்கு சீட் கேட்டு கிடைக்கலை. இவர், தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அனிதாவின் ஆதரவால் கயத்தார் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் சுயேச்சையாக வேட்பாளர்களைப் போட்டியிடவெச்சார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவங்களோட வெற்றிக்காக கோதண்டராமனே செலவும் செஞ்சார். அதனாலதான் 7 பேர் ஜெயிச்சாங்க. போட்டியில்லாம வெற்றிபெற்ற தங்கப்பாண்டியன் கட்சி சாராதவர். அவருக்கு வார்டுக்குள்ள மக்கள் மத்தியில செல்வாக்கு இருக்கு. அதனாலதான், அவரை எதிர்த்து மனுத்தாக்கல் செஞ்ச அ.ம.மு.க வேட்பாளர்கூட வேட்புமனுவை வாபஸ் வாங்கிட்டார்.

கயத்தார் பேரூராட்சி, பேருந்து நிலையம்
கயத்தார் பேரூராட்சி, பேருந்து நிலையம்

தங்கப்பாண்டியனைச் சேர்த்து மெஜாரிட்டி 8 பேர் இருந்தாலே சேர்மனைத் தேர்வு செஞ்சுடலாம். இருந்தாலும், சேர்மன் பதவியை எப்படியாவது கைப்பத்திடணும்னு அனிதா தரப்பு உறுதியா இருக்கு. அதேநேரத்துல கீதா ஜீவன் தரப்பும் சேர்மன் பதவியைக் கைப்பத்திடணும்னு வியூகம் வகுத்துட்டு இருக்காங்க. இதுல ஜெயிக்கப் போறது அனிதாவா, கீதாவாங்கிறதைப் பொறுத்திருந்து பார்க்கணும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism