அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஆள்வைத்து அடித்தாரா மாவட்ட தலைவர்? - கோவை பா.ஜ.க குஸ்தி

கோவை பா.ஜ.க
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை பா.ஜ.க

கட்சி வளரும்போது இது போன்ற பிரச்னைகள் நிலவுவது இயல்புதான். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்” என்றார் தத்துவமாக.

கோவை மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை அணித் தலைவரும், அவரின் மகனும் தாக்கப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி யிருந்த நிலையில், அதன் பின்னணி யில் பா.ஜ.க மாவட்டத் தலைவரே இருப்பதாக `பகீர்’ கிளப்புகின்றனர் அந்தக் கட்சியினர்!

கடந்த செப்டம்பர் மாதம் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள பப்பீஸ் ஹோட்டலுக்குச் சென்ற மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை அணித் தலைவர் ஜான்சன், அவர் மகன் டேவிட் உள்ளிட்டோரை பவுன்சர்கள் சிலர் தாக்கிய வீடியோ வைரலானது. இது தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், அவர்களைத் தாக்கியதாக பா.ஜ.க மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ரெயின்போ ரமேஷ் என்பவரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

பாலாஜி உத்தம ராமசாமி
பாலாஜி உத்தம ராமசாமி

இது குறித்து நம்மிடம் பேசிய கோவை பா.ஜ.க நிர்வாகிகள், “கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கும், பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலா ளர் ஏ.பி.முருகானந்தத்துக்கும் இடையேயான கோஷ்டிப்பூசல் ஊரறிந்தது. எனவே, முருகானந்தம் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சி யிலும் மற்ற அணி நிர்வாகிகள் கலந்துகொள்ளக் கூடாது என உத்தரவு போட்டார் பாலாஜி. ஆனால், கோவை அரசு மருத்துவ மனைக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியில், முருகானந்தத்துடன் ஜான்சன் கலந்துகொண்டார். இதில் ஜான்சன் மீது கடுப்பான பாலாஜி, ஹோட்டலில் பவுன்சராகப் பணியாற்றிவந்த தன் ஆதரவாளர் ரெயின்போ ரமேஷ் மூலம் ஜான்சன் தரப்பைத் தாக்கிவிட்டார். செப்டம்பர் 10-ம் தேதி ஜான்சன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிரதி பலனாகத் தான், செப்டம்பர் 15-ம் தேதி ரமேஷை கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார் பாலாஜி” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஜான்சனிடம் கேட்டபோது, “இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னணியில் அரசியல் இருப்பது உண்மைதான். ஆனால், அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. எங்கள் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று நழுவிக்கொண்டார்.

ஆள்வைத்து அடித்தாரா மாவட்ட தலைவர்? - கோவை பா.ஜ.க குஸ்தி

பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்திடம் பேசினோம். “கட்சி வளரும்போது இது போன்ற பிரச்னைகள் நிலவுவது இயல்புதான். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்” என்றார் தத்துவமாக.

கோவை மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியிடமே குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டுப் பேசியபோது, “இது முழுக்க முழுக்க பொய்யான கட்டுக்கதை. ஜான்சன் எனக்கு நல்ல நண்பர். இந்தச் சம்பவம் நடந்தபோது அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்பதுதான் உண்மை” என்றார்.

ஜான்சன்
ஜான்சன்
ரமேஷ்
ரமேஷ்

ஒருவர், ‘கருத்துக்கூற விரும்பவில்லை’ என்கிறார்; இன்னொருவர், ‘காலப்போக்கில் சரியாகிவிடும்’ என்கிறார்; மற்றொருவர், ‘கட்டுக்கதை’ என்கிறார். என்னதான் நடக்கிறது கோவை பா.ஜ.க-வில்?!