Published:Updated:

பயிர்க்கடனை நேர்மையாகக் கட்டி முடித்தவர்களுக்கு வட்டியில்லாக் கடன் - அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி
News
அமைச்சர் ஐ.பெரியசாமி

``வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் அட்டைகளைப் பெற்று நகை அடமானக் கடைக்காரர்களே கடன்களைப் பெற்றுள்ளனர். திருவண்ணாமலையில் ரத்தன்லால் என்பவர் 672 நகைக்கடன்களைப் பெற்றுள்ளார்." - அமைச்சர் பெரியசாமி

`தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுடி செய்யப்படும்' என அறிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் அதற்கான கணக்கீடுப் பணிகள் நடந்தன. அதில், பல்வேறு வங்கிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், தள்ளுபடி பெறப்போகும் பயனாளிகளை இறுதி செய்வதில் குழப்பமே ஏற்பட்டது. இது தொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

அதில், ``சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், இது தொடர்பாக எந்த நிபந்தனைகளையும் தி.மு.க தலைவர் விதிக்கவில்லை. நகைக்கடன் பெற்றவர்களில் 75 சதவிகித பயனாளிகளுக்குத் தள்ளுபடி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்தச் செயலின் மூலமாக 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கடனாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு அரசுதான் காரணம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விரிவான விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ``இந்தியாவில் எந்த மாநிலமும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்யாத நிலையில், கடுமையான நிதி நெருக்கடியிலும்கூட தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நமது தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். ஆனால், தமிழக அரசு குறைவாக கொடுத்துள்ளதாக அறிக்கை மற்றும் சமூக வலைதளங்களில் சித்தரித்து வருவது உண்மைக்குப் புறம்பானது.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்பட்ட மொத்த நகைக் கடன்களின் எண்ணிக்கை 48 லட்சம். 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும். இதுப் புரியாமலே சிலர் பேசி வருகிறார்கள். `அந்தியோதயா அன்னயோஜனா’ திட்டத்தின் படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் 2 லட்சம் பேர், கோடிக் கணக்கில் நகைக்கடன்கள் பெற்றுள்ளனர். ’AAY அட்டையைப் பயன்படுத்தி குறுக்குவழியில் சிலர் கடன் பெற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் அட்டைகளைப் பெற்று நகை அடமானக் கடைக்காரர்களே கடன்களைப் பெற்றுள்ளனர். திருவண்ணாமலையில் ரத்தன்லால் என்பவர் 672 நகைக்கடன்களைப் பெற்றுள்ளார். அனைத்தும் 5 சவரனுக்குக் கீழ்தான் கடன் பெற்றுள்ளார். மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு சிலர் திருட்டுத்தனமாக கடனாகப் பெற்றுள்ளது எப்படி சரியாகும்? தூத்துக்குடி மாவட்டத்தில் நகையே இல்லாமல் வெறும் பைகளை மட்டும் வைத்து 203 நகைப் பொட்டலங்கள் இருப்பதாக கணக்கு காட்டி ரூ.2 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

அதேபோல கவரிங் நகைகளை வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இதைப் போல தமிழகம் முழுவதிலும் பல வழிகளில் முறைகேடாக கடன் பெற்றுள்ளனர். கடன் பெற வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் கடன் பெற்றால் எப்படி கடனை தள்ளுபடி செய்ய முடியும்? அந்த வகையில் மொத்தமுள்ள 48 லட்சம் நகைக்கடன்களை ஆய்வு செய்ததில் 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படவில்லை.

முழுமையாக ஆய்வு செய்து 5 சவரன், அதாவது 40 கிராமிற்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10,18,000 பேர் பயனடைகிறார்கள். முந்தைய ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் நகைக்கடன்களைப் போல பயிர்க்கடன்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஒரு ஏக்கர் நெல் சாகுபடி நிலத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், ஒரு ஏக்கர் நிலம் இருப்பவர்கள், 7 ஏக்கர் நிலம் உள்ளதாகக் காட்டியும் கடன் பெற்றுள்ளனர்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

அந்த வகையில், 2,000 கோடிக்கு மேல் கடன் பெறப்பட்டுள்ளது. பெரும்பாலான சொசைட்டிகளின் நிர்வாகக்குழுவில் அ.தி.மு.க-வினரே உள்ளனர். ஒரே நபர் ரூ.5.85 கோடி நகைக்கடன் பெற்ற சம்பவமும் நடந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 170 கூட்டுறவு சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன்களை நேர்மையாகக் கட்டி முடிக்கப்பட்ட நபர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்” எனக் கூறினார்.