Published:Updated:

மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!

மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!
பிரீமியம் ஸ்டோரி
மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!

தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ‘வாயாடி’ அமைச்சர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். எந்நேரமும் தன் அரசியல் எதிரிகளை காலிசெய்வது பற்றியே அவரது சிந்தனை இருக்கும் என்கிறார்கள்

மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!

தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ‘வாயாடி’ அமைச்சர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். எந்நேரமும் தன் அரசியல் எதிரிகளை காலிசெய்வது பற்றியே அவரது சிந்தனை இருக்கும் என்கிறார்கள்

Published:Updated:
மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!
பிரீமியம் ஸ்டோரி
மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் ஆரம்பமாகிவிட்டது. வாக்காளர்களை வளைக்க அரசியல் கட்சித் தலைவர்கள் பல வழிகளைக் கையாண்டாலும், அவர்களில் பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இப்போதும் இருப்பது... மாந்திரீகம், தாந்திரீகம், பிரசன்னம் உள்ளிட்டவையே. சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பார்ப்போம்...

* புகழ்பெற்ற நகைக்கடை அதிபரின் வீட்டுக்கு சமீபத்தில் எதிர்க்கட்சி வி.ஐ.பி-யின் குடும்பத்தினர் அடிக்கடி விசிட் அடித்திருக்கிறார்கள். ‘வி.ஐ.பி-யின் வெற்றிக்கும் எதிரிகளை வீழ்த்தவும்’ தொடர்ந்து 48 நாள்கள் உக்கிர தெய்வங்களுக்கு அங்கு யாகங்கள் நடத்தப்பட்டதுதான் இந்த விசிட்களுக்குக் காரணம். இந்த விஷயத்தை அரைகுறையாக மோப்பம் பிடித்த உளவுத்துறையோ, ‘அங்கு பணப்பரிமாற்றம் நடக்கிறது’ என்று கொளுத்திப்போடவே, சமீபத்தில் அங்கு ரெய்டு அடித்தது வருமான வரித்துறை. தனக்கு ஏற்பட்ட சேதாரத்தால் நொந்துபோன நகைக்கடை ஓனர், ‘இதென்னடா வேண்டாத வம்பு’ என்று தலையைத் தடவிக்கொண்டிருக்கிறார்.

* தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ‘வாயாடி’ அமைச்சர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். எந்நேரமும் தன் அரசியல் எதிரிகளை காலிசெய்வது பற்றியே அவரது சிந்தனை இருக்கும் என்கிறார்கள். இப்போதும் தேர்தல் களத்தில் தன் எதிரிகளை வீழ்த்த திருப்பத்தூர் அருகேயுள்ள வெட்டுடையார் காளி கோயிலில் குறி கேட்டு, யாகங்களையும் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதுகூடப் பரவாயில்லை... சென்னையில் ஒரு ஜோதிடர், சொந்த மாவட்டத்தில் இருவர் என்று, தான் எங்கு சென்றாலும் கூடவே மூன்று ஜோதிடர்களையும் அழைத்துச் செல்கிறாராம்!

* கொங்கு ஏரியாவின் மாண்புமிகுவான இவரை, ஜெயலலிதா இருந்தபோதே கொஞ்சம் அச்சத்துடன்தான் சக அமைச்சர்களே பார்ப்பார்கள். காரணம்... வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது பாக்கெட்டில் அம்மன் சிலை, சிவப்புக் கயிறு சுற்றப்பட்ட எலுமிச்சைப்பழம், காட்டுமாட்டின் பல் எனச் சில மாந்திரீகப் பொருள்களையும் எடுத்துப்போட்டுக் கொண்டு கிளம்புவாராம். இப்போதும் அந்தப் பழக்கத்தைக் கைவிடாதவர், லேட்டஸ்ட்டாக கேரள மாந்திரீகர்கள் சிலரை தனது வீட்டிலேயே தங்கவைத்து மாந்திரீக வேலைகளை வேகப்படுத்தியிருக்கிறாராம்.

மாந்திரீகம்... தாந்திரீகம்... பிரசன்னம்!

* இவரும் கொங்கு மண்டல மாண்புமிகுதான்... இவருக்குத் தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் எழ, கேரள மாந்திரீகர் ஒருவரைச் சந்தித்துள்ளார். இரண்டு நாள்கள் தொடர்ந்து பிரசன்னம் பார்த்த அந்த கேரள மாந்திரீகர், ‘இம்முறை நீங்கள் தோல்வியடைவது உறுதி’ என்று சொல்லிவிட்டாராம். ‘கோட்டை’யே சரிந்ததுபோல விரக்தியடைந்தவர், “பரிகாரம் ஏதுமில்லையா சாமி?’’ என்று பரிதாபமாகக் கேட்க, “பெண்களுக்குச் சிவப்பு கலரில் சேலை கொடுப்பதே பரிகாரம்” என்று சொல்லியிருக்கிறார் மாந்திரீகர். இதனால், ஏற்கெனவே தொகுதியில் தேர்தல் பரிசாக கொடுப்பதற்கு ஆர்டர் செய்திருந்த பச்சை கலர் சேலைகளுக்கு பதிலாக சிவப்பு கலர் சேலைகளை ஆர்டர் செய்திருக்கிறாராம்!

* அ.தி.மு.க-வின் அதிகார மையத்துக்கு ஜோதிடராக இருந்த ஒருவர்தான், இப்போது எதிர்க்கட்சி வாரிசுகளுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருக்கிறார். இவர் தரும் வட்ட வடிவத் தகடு அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம். இப்போது அந்தத் தகடு இல்லாமல் எதிர்க்கட்சி வாரிசு பிரமுகர்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதில்லையாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism