எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று முதல்வர்களுடனும் நல்ல தொடர்பிலிருந்தவர், ‘கானா’ என்கிற கருப்பசாமி பாண்டியன். அரசியலில் நீண்டகாலம் பயணித்தவரான கருப்பசாமி பாண்டியன், இதுவரை விமானத்திலேயே பயணித்ததில்லை என்கிற ஆச்சர்யமான விஷயம் தெரியுமா?

எம்.ஜி.ஆரால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டவர்களில் ஒருவரான கருப்பசாமி பாண்டியன், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தனது 25-வது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானார். எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பிறகு கருப்பசாமி பாண்டியனுக்கு அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுத்தார் ஜெயலலிதா. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க-வுக்குத் தாவியவர், தற்போது மீண்டும் அ.தி.மு.க-வுக்குத் தாவி அமைப்புச் செயலாளராக இருக்கிறார்.

1977-ல் தென் மாவட்டங்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்டபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., கருப்பசாமி பாண்டியனையும் அழைத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்று வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டார். நடுவானில் திடீரென்று கருப்பசாமி பாண்டியனின் கோலத்தைப் பார்த்து எம்.ஜி.ஆரே ஒருகணம் ஆடிப்போனார். கண்விழிகள் சொருக, தலைசுற்றி, வாந்தியெடுத்து, மயங்கிவிழுந்தாராம் கருப்பசாமி பாண்டியன். ஒருவழியாக அவசரமாகத் தரையிறக்கி, அவருக்கு முதலுதவி செய்திருக்கிறார்கள். அதன் பிறகு வான்வழிப் பயணம் என்றாலே, பதறிப்போய் ‘நோ’ என்று சொல்லிவிடுவாராம் கருப்பசாமி பாண்டியன். அதையும் மீறி யாரேனும் வற்புறுத்தினால், “ஏலே... கீழே விழுந்துட்டா என்னலே பண்றது...” என்பாராம்! அதனால்தான், இதுவரை அவர் விமானத்தில் ஏறியதே இல்லை.

இடையே கருப்பசாமி பாண்டியன் தி.மு.க-வில் இருந்தபோது ஒரு சம்பவம்... 2006-ல் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த ஆவுடையப்பனைச் சபாநாயகராக நியமித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஆவுடையப்பன் வகித்த மாவட்டச் செயலாளர் பொறுப்பை கருப்பசாமி பாண்டியனுக்கு வழங்குவதற்காக, அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்தது கட்சித் தலைமை. அவசரப் பயணம் என்பதால், கருப்பசாமி பாண்டியனுக்கு வேண்டியவர்கள் அனைவரும் விமானத்தில் சென்னைக்குப் பறந்து, முன்னேற்பாடு வேலைகளைப் பார்க்க... கருப்பசாமி பாண்டியன் மட்டும் காரில்தான் பயணித்தார்.

இப்படி எவ்வளவு அவசரமான பயணமாக இருந்தாலும், ரயில் அல்லது கார் மார்க்கமாக மட்டுமே பயணிக்கிறார் கருப்பசாமி பாண்டியன். பயணத்தின்போது பேனா, பணம், பர்ஸ் என எதையும் அவர் வைத்துக்கொள்வதில்லை. உதவியாளர் ஒருவர் கட்டாயம் தேவை. இன்னோர் ஆச்சர்யம் தெரியுமா... அலைபேசியால் உலகமே கைப்பிடிக்குள் வந்துவிட்டது. ஆனாலும், கருப்பசாமி பாண்டியனின் உலகமே வேறு. அலைபேசியை அவர் வைத்துக்கொள்வதில்லை. அவரைத் தொடர்புகொள்ள விரும்பினால், அவரின் உதவியாளரின் அலைபேசி மூலமாகவே அழைக்க வேண்டும். வேண்டுமெனில், நீங்களும் ஒருமுறை அழைத்துத்தான் பாருங்களேன்!