Published:Updated:

தஞ்சை : `ஒரே தெருவிலிருந்து இரண்டு ஆளுநர்கள்' - சுவாரஸ்யப் பின்னணி!

இல.கணேசன்
இல.கணேசன்

தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்துள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இல.கணேசன். தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். பாஜக-வினர் மிகுந்த உற்சாகத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சண்முகநாதன்
சண்முகநாதன்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவில் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் இல.கணேசன். 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். தற்போது மணிப்பூர் ஆளுநராகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா

இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்துள்ளார்கள். இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது ‘’மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு. இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார். இவரோட மூத்த அண்ணன் ராமசேஷன், இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் கோயங்காவிடம் பி.ஏ-வாகப் பணியாற்றினார்.

இல.கணேசன்: `அரசு ஊழியர் டு மணிப்பூர் ஆளுநர்' - அரசியல் பயணம் ஒரு பார்வை!
இல.கணேசன்
இல.கணேசன்

இன்னொரு அண்ணன் இல.நாரயணன் டெலிஃபோன் டிபார்ட்மெண்ட்ல சூப்பர்வைசர். இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க. அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன். சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். 1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க. தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் மிக நீண்டகாலமாக பணியாற்றி வரும் இல.கணேசனுக்கு ஏதேனும் முக்கிய பதவி வழங்கப்படும் என கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சியினர் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பா.ஜ.க தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இல.கணேசனைவிட மிகவும் ஜூனியரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பாண்டிச்சேரி ஆளுநராகப் பதவி வகித்த கிரண்பேடிக்கு பதிலாக, இல.கணேசன் நியமிக்கப்பட்ட இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் பரவியது. ஆனால் அந்தப் பொறுப்பு தமிழிசைக்கு வழங்கப்பட்டது. இதனால் இல.கணேசன் ஆதரவாளர்கள் மிகுந்த ஆதங்கமடைந்தார்கள். தற்போது மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz
`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு