Published:Updated:

புதுச்சேரி: ``எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?" – முன்னாள் முதல்வர் நாராயணசாமியை சீண்டிய கந்தசாமி

தர்ணா போராட்டத்தில் நாராயணசாமி

`தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. அதேநிலை புதுவைக்கு ஏற்படக்கூடாது.' - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரி: ``எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?" – முன்னாள் முதல்வர் நாராயணசாமியை சீண்டிய கந்தசாமி

`தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. அதேநிலை புதுவைக்கு ஏற்படக்கூடாது.' - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி

Published:Updated:
தர்ணா போராட்டத்தில் நாராயணசாமி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை இன்று 3-வது நாளாக விசாரணைக்கு அழைத்திருக்கிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது மத்திய பா.ஜ.க அரசு பொய் வழக்கு போட்டிருப்பதாகக் கூறி புதுச்சேரி காங்கிரஸார் கடந்த 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸார் தர்ணா போராட்டம் நடத்தினர். அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நீலகங்காதரன், அனந்தராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கந்தசாமி, “காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க ஆட்சியின்மீது மக்கள் அதிருப்தியில்தான் இருகின்றனர்.

தர்ணா போராட்டத்தில் வாக்குவாதம்
தர்ணா போராட்டத்தில் வாக்குவாதம்

புதுவையில் ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த காங்கிரஸார் பலர் இருக்கின்றனர். அவர்களின் வாரிசுகள் வேறு கட்சிகளுக்கு சென்றிருக்கலாம். அவர்களையெல்லாம் அழைத்துப் பேச வேண்டும். புதுவையில் தனித்தனியே கமிட்டி போட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும். அதற்கு தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர். தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. அதேநிலை புதுவைக்கு ஏற்படக்கூடாது. புதுவையில் காங்கிரஸ் யாரையும் சார்ந்திராமல் தனித்துப் போட்டியிட வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்னை முதலமைச்சர் எனக் கூறினீர்கள், பின்னர் நீங்கள் முதலமைச்சராகிவிட்டீர்கள். கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம் ஆகியோருக்கெல்லாம் வயதாகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கவர்னர், அம்பாசிடர், துணை ஜனாதிபதி என வேறு பதவிகளை வாங்கிக்கொண்டு சென்று விடுங்கள். புதுவையில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். நானும் அந்த வயதுக்கு வந்தால் பதவியில் இருக்கமாட்டேன்” என்றார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வர் நாராயணாசாமி, “ஏம்பலம் தொகுதி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், கந்தசாமிகூட முதலமைச்சர் ஆகலாம் என்றுதான் கூறினேன். நீங்கள்தான் முதலமைச்சர் எனக் கூறவில்லை. கட்சித் தலைமை யாரை கைகாட்டுகிறதோ அவர்கள்தான் பதவிக்கு வருவார்கள்” என்றார். உடனே, “இதையே சொல்லி எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள்?” என கந்தசாமி கேள்வி எழுப்ப, நாராயணசாமியின் ஆதரவாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கும், கந்தசாமியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ``போராட்டத்தை அலுவலகத்துக்குள் நடத்துவதில் என்ன பயன்? மக்களுக்கு தெரியப்படுத்துவோம். ரயில் மறியல் செய்யலாம், சாலை மறியல் செய்யலாம்" என்று அழைத்தார் முன்னாள் அமைச்சர் கந்தசாமி. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கட்சி அலுவலகத்தில்தான் போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்த எதிர்தரப்பினர், கட்சி அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். அதையடுத்து அலுவலகத்தைவிட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சாலையில் சேரை போட்டு அமர்ந்து தர்ணா செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism