Published:Updated:

கோஷ்டிப் பூசல்: பாஜக கூட்டத்தில் பறந்த சேர்கள், சுழன்ற ராடுகள் - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பாஜக கூட்டத்தில் அடிதடி
News
பாஜக கூட்டத்தில் அடிதடி

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், கோஷ்டி மோதலால் ஏற்பட்ட அடிதடியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோஷ்டிப் பூசல்: பாஜக கூட்டத்தில் பறந்த சேர்கள், சுழன்ற ராடுகள் - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், கோஷ்டி மோதலால் ஏற்பட்ட அடிதடியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
பாஜக கூட்டத்தில் அடிதடி
News
பாஜக கூட்டத்தில் அடிதடி

கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில், நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் பா.ஜ.க-வின் முக்கியப் பிரிவான 'சக்தி கேந்திரா'வுக்கு துணைத் தலைவர் பதவிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதத்தில், பா.ஜ.க கிழக்கு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது.

பாஜக கூட்டத்தில் கோஷ்டி மோதல்
பாஜக கூட்டத்தில் கோஷ்டி மோதல்

அதில் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து தாக்கிக்கொண்டனர். அதேபோல அங்கிருந்த நாற்காலிகளை எடுத்தும் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். அதையடுத்து, உருட்டுக் கட்டைகள் மற்றும் இரும்பு ராடுகளாலும் தாக்கிக்கொண்டனர். அதில் இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தகவல் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த சங்கராபுரம் போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட பலத்த காயத்துடன் இருந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகாரளிக்காததால் இதுவரை வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை.