இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது நூற்றாண்டு. அதை வெகு சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ-வுக்கு, இது பொன்விழா ஆண்டு. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் உயிர்நாடியே தொழிற்சங்கங்கள்தான். சி.ஐ.டி.யூ-வின் தற்போதைய மாநிலத் தலைவரான அ.சவுந்தரராஜனை சென்னை சேப்பாக்கம் சி.ஐ.டியூ அலுவலகத்தில் சந்தித்தோம். தொழிற்சங்கப் பணிகளுக்கிடையிலும் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு மிக நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார்.

‘‘சி.ஐ.டி.யூ, எப்போது... எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?’’

‘‘சென்னை பி அண்ட் சி மில்லில் 1918-ம் ஆண்டில் உருவான தொழிற்சங்கம்தான் அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட முதல் தொழிற்சங்கம். அதற்குப் பிறகு பல தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டன. தனித்தனியாக இருந்த சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, 1920-ம் ஆண்டு ஒரே சங்கமாக அகில இந்திய அமைப்பாக ஏ.ஐ.டி.யூ.சி உருவானது. அந்தச் சங்கத்துக்கு லாலா லஜபதிராய் தலைவராகவும், ஜவஹர்லால் நேரு பொதுச் செயலாளராகவும் இருந்தனர். அந்தச் சங்கம், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஓர் அங்கமாகவே இருந்தது. அதே நேரத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவானது. ஏ.ஐ.டி.யூ.சி-வில் முக்கிய பொறுப்பில் இருந்த என்.எம்.ஜோஷி, கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆனார்.

ஏ.ஐ.டி.யூ.சி-யில் காங்கிரஸ் காரர்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைவரும் உறுப்பினர்களாக இருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய முதலாளிகளை எதிர்க்கக் கூடாது என்ற கோரிக்கையோடு, ஐ.என்.டி.யூ.சி எனும் தனித் தொழிற் சங்கத்தை காங்கிரஸ்காரர்கள் தொடங்கினர். முதல் பிளவு அப்போதுதான் ஏற்பட்டது.

1964-ம் ஆண்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டாலும், 1970-ம் ஆண்டு வரை ஏ.ஐ.டி.யூ.சி-யில்தான் அங்கம்வகித்தது. அந்தச் சங்கம், தனியார் முதலாளிகள் செய்யும் அராஜகங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கலாம்; பொதுத்துறை நிறுவனங்களை நாம் அப்படி அணுகத் தேவையில்லை போன்ற கொள்கைகளைக் கடைப்பிடித்தது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் பக்கம் நிற்கவேண்டுமே தவிர, ஒடுக்குவது அரசா, தனியாரா என்று பார்ப்பது தவறு எனக் கருதினோம். எங்களுக்காக தனிச்சங்கமான சி.ஐ.டி.யூ-வை 1970-ம் ஆண்டு மே 30-ம் தேதி உருவாக்கினோம். முதல் மாநாடு அப்போதைய கல்கத்தாவில் நடந்தது. அதில், ஏ.ஐ.டி.யூ.சி-விலிருந்து பலர் பிரிந்து சி.ஐ.டி.யூ-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.’’

‘‘சி.ஐ.டி.யூ-வுக்கு எவ்வளவு கிளைகள் இருக்கின்றன... எவ்வளவு பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?’’

‘‘இந்தியா முழுவதும் 4,634 சங்கங்கள் இருக்கின்றன. 60 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் 600 சங்கங்கள் இருக்கின்றன. ஆறு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நேரடியாக இல்லாமல், அரசு ஊழியர் சங்கங்களாக 40 சங்கங்கள் இடதுசாரி ஆதரவுத்தன்மையில் இயங்குகின்றன.’’

‘‘இந்த 50 ஆண்டுக்காலத்தில் சி.ஐ.டி.யூ சாதித்ததாக நீங்கள் எதைச் சொல்வீர்கள்?’’

‘‘சி.ஐ.டி.யூ-வின் முழக்கம் ‘ஒன்றுபடு மற்றும் போராடு’ என்பதுதான். அதன்படி அனைத்து சங்கங்களுடன் ஒன்றிணைந்து, கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அளவில் 18 பொது வேலைநிறுத்தங்கள் நடத்தியிருக்கிறோம். அவற்றில் சி.ஐ.டி.யூ-வின் பங்கு மிக முக்கியமானது. அதன்மூலம், தொழிலாளர் நலனுக்கு எதிராக அரசு செய்ய நினைத்த பல விஷயங்களைத் தடுத்திருக்கிறோம். பி.எஃப் பணத்தைக் குறைப்பது, அதை வேறு எதிலாவது முதலீடுசெய்வது போன்ற அரசின் திட்டங்களை போராட்டங்களின் வாயிலாகத் தடுத்து நிறுத்தியதில் சி.ஐ.டி.யூ-வின் பங்கு மிக முக்கியமானது. போனஸ், பஞ்சப்படி, வாழ்வதற்கு வீடு ஆகியவற்றை போராட்டங்கள் மூலம் பெற்றுத் தந்திருக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ‘450 நாள்களுக்குமேல் ஒருவர் பணியாற்றினால், அவரை பணிநிரந்தம் செய்ய வேண்டும்’ என்ற பணிநிரந்தர சட்டத்திருத்தம் கொண்டுவந்ததில் எங்களின் பங்கு மிக முக்கியமானது. நிரந்தரத்தன்மையுடைய வேலைகளில், கான்ட்ராக்ட் தொழிலாளர்களைப் பணியமர்த்தக் கூடாது என்பதற்காக, போராட்டங்கள் வாயிலாகவும் சட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறோம். நிறுவனங்கள் மூடப்படும்போது பணியாளர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத்தொகையை அதிகப்படுத்தியதில், சி.ஐ.டி.யூ-வின் பங்கு முக்கியமானது. தொழிலாளர்களுக்காக, நூற்றுக்கணக்கான முழு நேர ஊழியர்களைவைத்து தொடர்ந்து மிகச் சிறப்பாகப் போராடிவருகிறது சி.ஐ.டி.யூ.’’

அரசியல் கட்சிகளின் வாலாக சி.ஐ.டியூ நிச்சயம் இருக்காது. ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் எங்கள் கட்சி கூட்டணியில் இருந்தாலும், தொழிலாளர் நலனுக்காக சி.ஐ.டி.யூ நிச்சயம் போராடும். மற்ற சங்கங்கள் அப்படியல்ல. ‘தங்கள் கட்சி ஆட்சி’ என்று சிலர் பின்வாங்கும்போது, அது தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கிறது.

‘‘ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தொழிற்சங்கம்... அப்படி இயங்குவதில் ஏதும் பின்னடைவு இருக்கிறதா?’’

‘‘நிச்சயம் இருக்கிறது. உதாரணமாக தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 1949-ம் ஆண்டில் தி.மு.க ஆரம்பிக்கப்பட்டாலும் 1967-ம் ஆண்டு வரை சி.ஐ.டி.யூ-வில்தான் பெரும்பாலான தி.மு.க-வினர் உறுப்பினர்களாக இருந்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் தனியாக தொழிற்சங்கத்தைத் தொடங்க முடிவுசெய்தது. தனித்தனிச் சங்கங்கள் வேண்டாம் என நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தி.மு.க தனக்கென தனியான தொழிற்சங்கத்தை உருவாக்கிக்கொண்டது. அதே வழியில் அ.தி.மு.க, பா.ம.க என மற்ற கட்சிகளும் தங்களுக்காகத் தொழிற்சங்கங்களை அமைத்துக் கொண்டன. இது தொழிற்சங்கத்தின் வலிமையைப் பிளவுபடுத்தியது.

எங்கள் சங்கத்தில் ஆறு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தாலும், அதில் ஐந்து சதவிகிதம் பேர்தான் எங்கள் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் வாலாக சி.ஐ.டியூ நிச்சயம் இருக்காது. ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் எங்கள் கட்சி கூட்டணியில் இருந்தாலும், தொழிலாளர் நலனுக்காக சி.ஐ.டி.யூ நிச்சயம் போராடும். மற்ற சங்கங்கள் அப்படியல்ல. ‘தங்கள் கட்சி ஆட்சி’ என்று சிலர் பின்வாங்கும்போது, அது தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கிறது. உதாரணமாக, போக்கு வரத்துத் துறை வேலைநிறுத்தத்தில், ஆளுங்கட்சி உறுப்பினர்களை வைத்து பேருந்துகளை இயக்கிவிடுகிறார்கள். அது, எங்களின் கோரிக்கையைச் சிதைத்துவிடுகிறது.

தெலங்கானாவில் ஆளுங்கட்சியை எதிர்த்து ஸ்டிரைக் நடைபெற்றது. அதில் அந்தக் கட்சியின் யூனியனும் கலந்து கொண்டது. உத்தரப் பிரதேசத்திலும் பா.ஜ.க-வின் சங்கமே போராட்டத்தில் ஈடுபட்டது. அதுபோல் கட்சி விசுவாசத்தையும் மீறி தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய தேவை தமிழகத்தில் இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங் களையும் ஒன்றிணைத்து மகா சம்மேளனத்தை உருவாக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம். அதை சி.ஐ.டி.யூ நிச்சயமாகச் சாதிக்கும்.’’

‘‘தனியார் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் வேலையிழப்புகள் தொடர்கின்றன. அவர்களை ஒன்றிணைத்து அமைப்பாக்குவதில் சி.ஐ.டி.யூ ஆர்வம் காட்டுவதில்லையே... ஏன்?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது. நாங்கள் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ‘யூனியன் ஆரம்பித்தால் வேலை பறிபோய்விடும்’ என அச்சப்படுகிறார்கள். அதே நேரம், வேலையை இழந்த பிறகு எங்களைத்தான் தேடி வருகிறார்கள். நாங்கள்தான் அவர்களுக்காகப் பேசிவருகிறோம். ஹூண்டாய், யமஹா, ராயல் என்ஃபீல்டு போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து பிரசாரங்கள் செய்துவருகிறோம். இது போதாதுதான். இனிவரும் காலங்களில் வேகப்படுத்துவோம்.’’

‘‘வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வேலைக்காக வரும் தொழிலாளர்களை சி.ஐ.டி.யூ கண்டுகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?’’

‘‘அது தவறான குற்றச்சாட்டு. அவர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறோம். அவர்களுக்காக தனியாகவும் அமைப்புகளை நடத்திவருகிறோம். கோவையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகவே தனிச் சங்கம் இயங்குகிறது. அவர்களுக்காக அவர்களின் மொழியில் துண்டறிக்கைகள் தயாரித்து விநியோகிப்பது போன்ற பல விஷயங்களையும் செய்து வருகிறோம். வட மாநிலங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் உயிரிழந்து விட்டால், அவரைச் சார்ந்தோர் எங்களிடம் தான் வருகிறார்கள். உயிரிழந்தவர்கள் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து அவர்களுக்கான நஷ்டஈட்டை நாங்கள்தான் பெற்றுத் தருகிறோம். அவர்கள் மாநில சி.ஐ.டி.யூ சங்கத்துடன் தொடர்புகொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்கிறோம்.’’

‘‘சி.ஐ.டி.யூ-வின் அடுத்தகட்ட இலக்கு?’’

‘‘வரும் ஜனவரி 8-ம் தேதி, இந்தியா முழுவதும் அனைத்து சங்கங்களும் இணைந்து 19-வது பொது வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதற்கான பணிகளை தற்போது செய்துவருகிறோம். எங்களின் அகில இந்திய மாநாடு, வரும் ஜனவரி மாதம் நடக்கவிருக்கிறது. அதில் பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இணைத்து பல போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம்.’’