Published:Updated:

ஜி.மஞ்சுளா... பெண்களுக்கு எதிரான கருத்தியலைக் கொண்டது பா.ஜ.க!

ஜி.மஞ்சுளா
பிரீமியம் ஸ்டோரி
ஜி.மஞ்சுளா

அரசியல் பெண்கள்: ஆறு கேள்விகள்

ஜி.மஞ்சுளா... பெண்களுக்கு எதிரான கருத்தியலைக் கொண்டது பா.ஜ.க!

அரசியல் பெண்கள்: ஆறு கேள்விகள்

Published:Updated:
ஜி.மஞ்சுளா
பிரீமியம் ஸ்டோரி
ஜி.மஞ்சுளா

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடிவருபவர் மஞ்சுளா. இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளராக சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்ட மஞ்சுளா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். அவரோடு உரையாடியதில்...

இன்றைய சூழலில் பெண்கள் சந்திக்கிற மிகப்பெரிய பிரச்னை என்ன?

கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் முன்னேறினாலும், அவர்கள் மீதான வன்முறை முன்பைக்காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது. பாலியல் ரீதியான வன்முறை, குடும்ப வன்முறை என இரண்டுமே அதிகரித்துள்ளன. காரணம், பெண்கள் அடங்கி ஒடுங்கி இருந்த காலம் மாறி, இன்றைக்குக் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறார்கள். அதை இந்தச் சமூகத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்கள் அடங்கி ஒடுங்கி இருந்த காலம் மாறி, இன்றைக்குக் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறார்கள். அதை இந்தச் சமூகத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்வுசெய்யப் பட்டுள்ளீர்கள். என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் போன்ற அமைப்புசாரா துறைகளில் பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் உள்ளது; உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. கவனம் செலுத்தப்படாத, கண்டுகொள்ளப்படாத பிரச்னையாகவும் இது இருக்கிறது. இதுகுறித்து மாநிலம் முழுவதும் விரிவான ஓர் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். மேலும், இளம்பெண்களுக்கு அரசியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெண்ணிய நோக்கில் மார்க்சியம் குறித்த வகுப்புகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. நூற்றாண்டு கண்ட ஓர் இயக்கம், பெரிய அரசியல் சக்தியாக ஏன் வளரவில்லை?

கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோதே, அது தடை செய்யப்பட்டது. பல அடக்குமுறைகளை எதிர்கொண்டது. அதில் ஏராளமான தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள். அந்தக் காலம் தொடங்கி இன்றுவரை மக்களின் பிரச்னைகளுக்காகச் சமரசமின்றி களத்தில் நின்று போராடுவது கம்யூனிஸ்ட்டுகள்தாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் நம் சமூகத்துக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் அளப்பரியவை. ஆனால், நம் நலனுக்காகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் போராடுகிறார்கள் என்கிற உணர்வை மக்களிடம் ஏற்படுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறியுள்ளன. சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்கள்கூட மக்களிடம் கொண்டுசெல்லப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் கூட்டணி தவிர்க்க முடியாது. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கு உகந்ததா?

முதலாளித்துவக் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் கூட்டணி வைக்கின்றன. அதனால் சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது முதலாளித்துவக் கட்சிகளின் தாக்கமும் ஏற்படுகிறது. இது கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது என்றுதான் பார்க்கிறேன்.

ஜி.மஞ்சுளா
ஜி.மஞ்சுளா

பெண்களின் பிரச்னைகளுக் காக அனைத்து அரசியல் கட்சி களின் பெண்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறீர்களா?

நிச்சயமாக. மத்திய பா.ஜ.க அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்த்து மிகப்பெரிய பிரசார இயக்கத்தை சமீபத்தில் நடத்தினோம். ஐந்து ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தோம். இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட 25 பெண் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பையே ஏற்படுத்தியுள்ளோம்.

இந்தக் கூட்டமைப்பில் பா.ஜ.க-வின் பெண்கள் அமைப்பும் இருக்கிறதா?

வகுப்புவாதத்தை அடிப்படையாகக்கொண்ட, மதவெறியைத் தூண்டுகிற எந்தவோர் அமைப்பையும் நாங்கள் ஏற்பதில்லை. பா.ஜ.க என்பது பெண்களுக்கு எதிரான கருத்தியலைக்கொண்ட ஒரு கட்சி. எனவே, அவர்களை ஏற்க முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism