Published:Updated:

பெண்கள் கூட்டமைப்பில் பி.ஜே.பி-க்கு இடமில்லை: மஞ்சுளா திட்டவட்டம்!

மஞ்சுளா
மஞ்சுளா

நிச்சயமாக. மத்திய பா.ஜ.க அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்த்து மிகப்பெரிய பிரசார இயக்கத்தை சமீபத்தில் நடத்தினோம்

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடிவருபவர் மஞ்சுளா. இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளராக சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்ட மஞ்சுளா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். அவரோடு உரையாடியதில்... விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2JUJq2d

தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் கூட்டணி தவிர்க்க முடியாது. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கு உகந்ததா?

முதலாளித்துவக் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் கூட்டணி வைக்கின்றன. அதனால் சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது முதலாளித்துவக் கட்சிகளின் தாக்கமும் ஏற்படுகிறது. இது கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது என்றுதான் பார்க்கிறேன்.

பா.ஜ.க என்பது பெண்களுக்கு எதிரான கருத்தியலைக்கொண்ட ஒரு கட்சி. எனவே, அவர்களை ஏற்க முடியாது!

பெண்களின் பிரச்னைகளுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் பெண்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறீர்களா?

நிச்சயமாக. மத்திய பா.ஜ.க அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்த்து மிகப்பெரிய பிரசார இயக்கத்தை சமீபத்தில் நடத்தினோம். ஐந்து ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தோம். இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட 25 பெண் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பையே ஏற்படுத்தியுள்ளோம்.

இந்தக் கூட்டமைப்பில் பா.ஜ.க-வின் பெண்கள் அமைப்பும் இருக்கிறதா?

வகுப்புவாதத்தை அடிப்படையாகக்கொண்ட, மதவெறியைத் தூண்டுகிற எந்தவோர் அமைப்பையும் நாங்கள் ஏற்பதில்லை. பா.ஜ.க என்பது பெண்களுக்கு எதிரான கருத்தியலைக்கொண்ட ஒரு கட்சி. எனவே, அவர்களை ஏற்க முடியாது!

- இந்தப் பேட்டியின் முழுமையான வடிவத்தை அவள் விகடன் இதழில் வாசிக்க > ஜி.மஞ்சுளா... பெண்களுக்கு எதிரான கருத்தியலைக் கொண்டது பா.ஜ.க! https://www.vikatan.com/news/politics/interview-with-j-manjula

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

திவ்யா ஐ.ஏ.எஸ்... சகலகலாவல்லவி!

"திருவனந்தபுரம் சப் கலெக்டரா இருந்தப்ப அமைச்சர் கூட்டிய அலுவலக மீட்டிங்ல அரசு அதிகாரிங்கிற முறையில நானும், எம்.எல்.ஏ என்கிற முறையில் இவரும் கலந்துக்கிட்டோம். அதுக்கப்புறம் அலுவல் சம்பந்தமா தொடர்ந்து பேசினார். அப்புறம் கொஞ்சம் பேசி, பழகினப்ப அவர் நல்ல மனிதர்னு தெரியவந்தது. 'கல்யாணம் பண்ணிக்கலாம்'னு முதல்ல சபரிதான் சொன்னார்" என்கிற திவ்யாவிடம் "அரசியல்வாதிகிட்ட எச்சரிக்கையா இருக்கணும்னு தோணலியா" என்று கேட்டால், வெடித்துச் சிரிக்கிறார்கள் இருவரும்.

பெண்கள் கூட்டமைப்பில் பி.ஜே.பி-க்கு இடமில்லை: மஞ்சுளா திட்டவட்டம்!

சகலகலாவல்லவி... இப்படித்தான் கேரளமே கொண்டாடுகிறது திவ்யாவை. தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா. இப்போது திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட இயக்குநராகப் பணிபுரிகிறார். திருவனந்தபுரம் சப் கலெக்டராக இருந்தபோது, அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சபரிநாதனுடன் காதல் வயப்பட, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இருவர் அன்பின் வெளிப்பாடாக 'மல்ஹார்' என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏழு மாதமே ஆன மல்ஹாரின் முதல் ஓணம் பண்டிகையை ஆகோஷித்த ஆனந்தத்தில் இருந்த திவ்யா ஐயர் - சபரிநாதன் தம்பதியை திருவனந்தபுரத்தில் சந்தித்தோம். - விரிவான பேட்டியை அவள் விகடன் இதழில் வாசிக்க > திவ்யா ஐ.ஏ.எஸ்... அரசுப் பணியும் அரசியல் பணியும் https://www.vikatan.com/lifestyle/women/interview-with-mla-sabarinathan-and-divya-iyer-ias

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு