Published:Updated:

"கிறிஸ்துவர்களும் தமிழர்களே!”

பெ.மணியரசன்
பிரீமியம் ஸ்டோரி
News
பெ.மணியரசன்

பெ.மணியரசன் பேட்டி

‘தமிழில் குட முழுக்கு நடத்த வேண்டும்’ என்று சட்டப்போராட்டம் நடத்தியவர் களில் முக்கியமானவர், தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இவர் ஒரு கிறிஸ்துவர் என்றெல்லாம் சித்திரித்து பா.ஜ.க-வினர் தகவல் வெளியிட்டனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கும் நிலையில் மணியரசனிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கருவறையில், கலசத்தின் அருகே தமிழே பயன்படுத்தக் கூடாது என்றிருந்த சூழல் மாறி, கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரம், கலசம் ஆகிய ஐந்து இடங்களிலும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றி இது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆனால், குடமுழுக்கில் தமிழுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’’

‘‘கலசத்துக்கு அருகில்தான் நான் நின்றேன். அங்கே தமிழ், சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டன. தமிழ் ஓதுவார்களும் கலசத்தில் நீர் ஊற்றினார்கள். நான் பார்த்தது அதுதான்.’’

‘‘பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் எங்கு சென்றாலும் தமிழை முதன்மைப்படுத்திதானே பேசிவருகிறார்கள். பிறகு ஏன் அவர்களை விமர்சிக்கிறீர்கள்?’’

“தமிழைப் பாராட்டுவதுபோல் பாராட்டி, தமிழர்களின் கவனத்தை திசைதிருப்பி அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான முன்னோட்டம் இது. ஐ.நா மன்றத்தில் பிரதமர் தமிழ்மொழியில் பேசுகிறார். ஆனால், தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் வழிபடுவதற்கு ஆதரவாக பிரதமர் மோடியோ, தமிழக பா.ஜ.க-வோ ஏன் ஓர் அறிக்கைகூட வெளியிட வில்லை?”

“தமிழில் வழிபாடு நடத்துவதற்கு எதிராக பா.ஜ.க மட்டும்தான் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க-வும் இந்த விஷயத்தில் மௌனம்தானே சாதித்தது?”

“நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லையே தவிர, அ.தி.மு.க-வும் இந்த விஷயத்தில் தமிழுக்கு ஆதரவு என்ற நிலையில் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

காரணம், இவ்வளவு காலம் தஞ்சை பெரிய கோயிலில் ஓர் ஓரத்தில்தான் தமிழ் ஓதுவார்கள் நின்றுகொண்டிருந்தனர். அ.தி.மு.க அரசு ஜனவரி 29-ம் தேதி நீதிமன்றத்தில் கூடுதலாக தாக்கல் செய்த ஒரு மனுவின் காரணமாகத்தான் கருவறை முதல் கலசம் வரை தமிழ் வந்திருக்கிறது.”

“உங்களின் உண்மையான பெயர் டேவிட் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ஹெச்.ராஜா ஆகியோர் சொல்லிவருகிறார்களே?”

“மனிதர்களை வர்ணாசிரம முறையில் சாதிரீதியாகப் பிரிப்பதை ஏற்றுக்கொண்டவர்கள்தான் ஹெச்.ராஜா, கே.டி.ராகவன் போன்றோர். அதனால், என்னை சித்தாந்தரீதியாக விமர்சிக்காமல், பிறப்பால் நான் யார் எனத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது, ஒரு வருடம் தலைமறைவாகச் செயல்பட வேண்டிய சூழல். கட்சியில் எனக்கு `டேவிட்’ என்று பெயர் சூட்டினார்கள். அப்போதுதான் எனக்கு திருமணமும் நடந்தது. அதுகுறித்து என் மனைவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதைத்தான் கே.டி.ராகவன் பகிர்ந்துவருகிறார். அவர்கள் சொல்வதுபோல் நான் கிறிஸ்துவராக இருந்தாலும் என் மொழிக்காக நான் போராடுகிறேன். கிறிஸ்துவர்களும் தமிழர்கள்தானே!”