வெற்றிக்கனியைப் பறிக்க, அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அலைமோதுகிறார்கள். ஆனால், அ.திமு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பி.ஜே.பி., பிரசாரக் களத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறது. அவர்கள் வராமல் இருப்பதே நல்லது என்ற தோரணையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். என்னதான் நடக்கிறது?

பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஆரம்பத்தில் ‘காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துவிடுவோம்’ என்று சொன்னீர்களே... ஐந்து வருட ஆட்சியில் ஊழலை ஒழித்துவீட்டீர்களா?”

``மோடி ஆட்சியில் ஊழல் ஒழிந்திருக்கிறது. இன்றைக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் எல்லா திட்டங்களும் நிறைவேறுகின்றன. நான்கு லட்சம் போலி நிறுவனங்களை மோடி அரசு ஒழித்துக் கட்டியிருக்கிறது. வருமானவரி கட்டுபவர்கள் இரு மடங்காகியிருக்கிறார்கள்.”

“முத்தலாக் மசோதாவுக்கு, அ.தி.மு.க மக்களவையில் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?”

“மாநிலங்களவையில் அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது தவறு. வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க இந்த முடிவு எடுத்துள்ளதாக நினைக்கிறேன். ஓட்டுக் காக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பது தவறு.’’

“அதனால்தான், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பி.ஜே.பி பிரசாரம் செய்யவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் முணுமுணுக்கிறார்களா?”

“முற்றிலும் தவறு. அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் நிர்வாகிகள் அங்கு மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெறுகிறது. இதில் நானும் முக்கிய தலைவர்களும் பிஸியாக இருக்கிறோம்.’’

“வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?”

“நிச்சயமாக ஏ.சி.சண்முகம்தான் வெற்றி பெறுவார். தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மோடிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால்தான் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். ஏ.சி.சண்முகமும் ‘என் வெற்றியை, மோடிக்குக் காணிக்கையாக்கு கிறேன்’ என்றே பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.”