Election bannerElection banner
Published:Updated:

ஸ்டாலினிடம் ஐபேக் அளித்த `லிஸ்ட்'... தெலுங்கு மக்களைக் கவர தி.மு.க வியூகம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த முறை கூட்டத்தில் அனைவரும் பேசிய பிறகே தீர்மானங்களை ஸ்டாலின் இறுதி செய்திருக்கிறார்.

கையில் நுங்குடன் வந்தமர்ந்த கழுகார், ''ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லத்தை' நினைவிடமாக மாற்ற தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது. `தீபா, தீபக்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்...' என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்லவிருப்ப தாகவும் தகவல். இது தொடர்பான ஆலோசனையின்போது பன்னீர் தரப்பில், 'அம்மா பெயரைச் சொல்லி பல பேரும் பல கோடி ரூபாய் சம்பாதிச்சுட்டுப் போயிட்டாங்க. அம்மா சொத்துக்கு அவர் ரத்த சொந்தங்கள்தானே உரிமை கேக்குறாங்க... எடுத்துக்கிட்டுப் போகட்டுமே... எதுக்கு மேல்முறையீடு' என்றாராம்.

பன்னீரின் பெருந்தன்மையைப் பார்த்து, எடப்பாடியே ஆச்சர்யத்தில் அமைதியாகி விட்டதாகத் தகவல். அப்புறம்தான் முதல்வரிடம், 'யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். சிறுதுரும்பும் நமக்கு எதிர்காலத்தில் உதவலாம்' என்று பன்னீர் தரப்பில் ஆலோசனையும் கொடுக்கப்பட்டதாம். எனவே, விரைவில் ஜெ. நினைவு இல்லம் தொடர்பாக தீபா, தீபக்கிடம் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.''

தி.மு.க தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்ததாம்?''

''கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. 'பிற்படுத்தப்பட்டோர் விஷயத்தில் நடந்ததுபோன்ற சிக்கல் நாளை பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டிலும் வரலாம். அதற்கு முன்னதாகச் சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்' என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதை மற்ற தலைவர்களும் ஆமோதித்துள்ளனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த முறை நடந்த கூட்டத்தில், 'தி.மு.க தலைவர் ஸ்டாலின் யாரையும் கலந்து ஆலோசிக்காமலேயே தீர்மானங்களை தயார் செய்துவிட்டார்' என்று கூட்டணித் தலைவர்களிடம் குமுறல் இருந்தது. இந்த முறை கூட்டத்தில் அனைவரும் பேசிய பிறகே தீர்மானங்களை ஸ்டாலின் இறுதி செய்திருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமல்லாமல், `கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்' என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஜூன் 6-ம் தேதிக்குப் பிறகு அடுத்த கட்டமாகக் கூட்டம் நடத்தவும் முடிவெடுத்திருக்கிறார்கள்."

''ஓஹோ!''

''சமீபத்தில் ஸ்டாலினிடம் ஐபேக் நிறுவனத்தினர், 'தி.மு.க-வில் தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் சிலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை; அவர்களை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது ஆபத்து' என்று ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு மாற்றத்துக்குத் தயாராகிவிட்டாராம் ஸ்டாலின். மற்றொருபுறம் மாவட்ட வாரியாக தெலுங்கு பேசும் நிர்வாகி ஒருவரையும் பொறுப் புக்குக் கொண்டுவர தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது என்கிறார்கள்."

''இதென்ன புதுக்கதை?''

''தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகத் தான் இந்தத் திட்டமாம். அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பொறுப்பில் தெலுங்கு பேசும் நபர் ஒருவர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று பல மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம். இந்தத் திட்டத்தின் பின்னணியில் எ.வ.வேலு இருப்பதாகக் கட்சியினர் நினைக்கிறார்கள்.''

"பா.ம.க-வுக்குள் புகைச்சலோ?''

"ஆமாம்... `நாளுக்கொரு அறிக்கைவிடும் மருத்துவர் ராமதாஸ், கொரோனா விவகாரத்தில் அ.தி.மு.க அரசை இதுவரை ஏன் விமர்சிக்கவில்லை?' என்று அவர் கட்சிக்குள் இருப்பவர் களே வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்களாம். காடுவெட்டி குரு மகன்மீது நடந்த தாக்குதலும் பா.ம.க-வினரிடம் மனக் கொதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறதாம்.''

''கொரோனாவைவிடக் கொடுமையான 'கட்டிங்' பார்க்கும் திட்டமாக, படைவெட்டுக்கிளியை ஒட்டி அரங்கேற்றப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றையும் விரிவாக பகிர்ந்தார் கழுகார். அதை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > வெட்டுக்கிளிகள் பெயரில் 'கட்டிங்'... 'வாரிசு கிளி'யின் பலே திட்டம்! https://bit.ly/2UaQ9dB

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு