Published:Updated:

உள்ளே கடுப்பு... வெளியே சிரிப்பு... சிக்கலிலே தொடர்கிறதா அதிமுக - பாஜக உறவு?!

அ.தி.மு.க - பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்

அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் பாஜக-வைக் கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஏதோ ஒரு காரணம் அதிமுக தலைவர்களைத் தடுக்கிறது.

உள்ளே கடுப்பு... வெளியே சிரிப்பு... சிக்கலிலே தொடர்கிறதா அதிமுக - பாஜக உறவு?!

அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் பாஜக-வைக் கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஏதோ ஒரு காரணம் அதிமுக தலைவர்களைத் தடுக்கிறது.

Published:Updated:
அ.தி.மு.க - பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது. அதையொட்டி திமுக, அதிமுக கூட்டணி இடப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க - பா.ஜ.க நிர்வாகிகள் வாய்த்தகராறில் ஈடுபடுவதும், தேர்தல் நெருக்கத்தில் ஒன்றாக கூடிக்கொள்வதுமாக உறவு சென்று கொண்டிருக்கிறது.

எடப்பாடி... பன்னீர்!
எடப்பாடி... பன்னீர்!

இது குறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ``ஜனவரி 28-ம் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ், முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்-அஃபிஷியல் கூட்டம் என்பதால் வேறு யாரும் பங்கேற்கவில்லை. இங்கிருந்து பா.ஜ.க சென்று, இன்று எம்.எல்.ஏ-வாகி இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுகவினரைப் பற்றிப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகிடலாம் என்று சிலர் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எடப்பாடியிடம் போனில் பேசி வருத்தம் தெரிவித்ததால் வேறு வழியின்றி அதைக் கடந்து செல்வதாக தலைவர்கள் கூறினார்கள். திமுக கூட்டணியில் எப்படி மா.செ-க்கள் கூட்டணிக் கட்சியினரை நடத்துகிறார்களோ அதுபோன்றுதான் பாஜகவை நடத்த வேண்டும் என்றும், தேடி வந்தால் சீட் பங்கீடு கொடுக்கலாம் என்றும் சிலர் பேசினர். தலைவர்களும் இதற்கு ஆமோதிக்கவே கூட்டம் முடிந்தது.

அண்ணாமலை - எடப்பாடி
அண்ணாமலை - எடப்பாடி

தேடி வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தபோது, மறுநாள் காலையிலேயே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தனர். மீண்டும் ஒருமுறை நயினார் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தவர்கள், '50 சதவிகித இடங்களைக் கேட்டு பெற வேண்டும் என்று எண்ணியிருந்தோம். அதற்கேற்ப வேட்பாளர்களையும் தயார் செய்து வைத்திருந்தோம். காலம் குறைவாக இருப்பதால் 30 சதவிதிக இடங்கள் கொடுத்தால்கூட போதும்’ என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தி.மு.க கூட்டணி போல இங்கும் மாவட்டச் செயலாளர்களிடம் லோக்கலில் பேசுங்கள். நாகை மாவட்டத்தில் மொத்த இடங்களிலும் அ.தி.மு.க-வினரே போட்டியிடுவார்கள், பா.ஜ.க-வினர் சீட் கேட்கவில்லை என்று ஓ.எஸ்.மணியன் சொல்லியிருந்தார். இதே நிலைதான் மற்ற மாவட்டங்களிலும் நடக்கிறது. அதனால், உடனடியாக மாவட்டக் குழுக்களை அனுப்பிப் பேசுங்கள். நாங்கள் தலைமையில் இருந்து சொல்கிறோம்’ என்று அனுப்பி வைத்தோம்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்

ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சித் தொண்டர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டாம் என்று தான் சொல்லி வருகிறார்கள். இது பொருந்தாக் கூட்டணி என்பது எங்களுக்கும் தெரிகிறதுதான். தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து தமிழகம் முழுவதும் கெட்டப் பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறது பாஜக. இந்த நேரத்தில் கூட்டணி அமைப்பது தற்கொலைக்குச் சமம்! இருந்தபோதும் இரட்டைத் தலைவர்கள் தைரியமான முடிவினை எடுக்க மறுக்கிறார்கள். அவர்களும் கூட உள்ளே கடுப்பை வைத்துக்கொண்டு, வெளியே சிரிப்பை உதிர்க்கிறார்கள். இருவரது குடுமியும் டெல்லியில் ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை அதிமுக பாஜக-வை விட்டு பிரிய முடியாது என்பதுதான் எழுதப்படாத விதி!" என்று முடித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism