Published:Updated:

அண்ணாசிலை அகற்றப்படுகிறதா?! - கொதித்த திமுக கவுன்சிலர்கள்... தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்தது என்ன?

தஞ்சாவூரில் உள்ள அண்ணாசிலை

சிறப்புமிக்க அண்ணாசிலையை அதிமுக ஆட்சியில் எடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த கலைஞர் கருணாநிதி, `அண்ணாசிலையை அகற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் நானே களத்தில் இறங்கிப் போராடுவேன்’ எனக் கூறினார்.

அண்ணாசிலை அகற்றப்படுகிறதா?! - கொதித்த திமுக கவுன்சிலர்கள்... தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்தது என்ன?

சிறப்புமிக்க அண்ணாசிலையை அதிமுக ஆட்சியில் எடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த கலைஞர் கருணாநிதி, `அண்ணாசிலையை அகற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் நானே களத்தில் இறங்கிப் போராடுவேன்’ எனக் கூறினார்.

Published:Updated:
தஞ்சாவூரில் உள்ள அண்ணாசிலை

`தஞ்சாவூரின் மையப்பகுதி’ என சொல்லப்படும் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால், சிலையை அகற்றி அருகிலேயே உள்ள சுதர்சன சபா இடத்தில் மாற்றியமைக்கலாம் என திமுக மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த திமுக கவுன்சிலர்கள் அண்ணாசிலையை அகற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாசிலை
அண்ணாசிலை

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் விரிவாக்கமும், கோடிக்கணக்கில் மதிப்புடைய மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தனி நபர்களிடமிருந்து மீட்கப்பட்டும் நடைபெற்றுவருகின்றன. மாநகராட்சி ஆணையர் இதைத் திறம்பட செய்துவருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேயர் சண்.ராமநாதன் தலைமையில் முதல் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவற்றில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் அண்ணாசிலை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் மாற்றியமைப்படும் என அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஒன்று. அண்ணாசிலையை அகற்றுவதற்கு திமுக கவுன்சிலர்களான நீலகண்டன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம்
திமுக மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம்

இது குறித்து 40-வது வார்டு திமுக கவுன்சிலரான நீலகண்டனிடம் பேசினோம். ``1968-ல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது உடல்நிலை முடியாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது பொதுப்பணிதுறை அமைச்சராக இருந்த கருணாநிதி, தஞ்சாவூரில் அண்ணாசிலையைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்போதைய கல்வித்துறை அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன், மன்னை நாராயணசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள கலைஞர் கருணாநிதி சிலையைத் திறந்துவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலை திறக்கப்பட்டபோது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அண்ணாவை நினைத்து அப்போது பலரும் கண்ணீர்விட்டு அழுததாக திமுக சீனியர்கள் இன்றைக்கும் பேசிவருகின்றனர். அண்ணா புத்தகம் படிப்பதுபோல் வைக்கப்பட்ட முதல் சிலையும் இதுதான். சிறப்புமிக்க இந்த அண்ணாசிலையை அதிமுக ஆட்சியில் எடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அண்ணாசிலை
அண்ணாசிலை

இதையறிந்த கலைஞர் கருணாநிதி, அண்ணாசிலையை அகற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் நானே களத்தில் இறங்கிப் போராடுவேன் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து சிலை அகற்றுவதைக் கைவிட்டனர். தற்போது திமுக ஆட்சி நடக்கிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களான சண்.ராமநாதன் மேயராகவும், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதியும் பதவி வகித்துவருகின்றனர். திமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்று மாநகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

இந்தச் சூழலில் அண்ணாசிலையை அகற்றுவதற்கு அவசரத் தீர்மானம் போடப்பட்டிருப்ப திமுக கவுன்சிலர்களை மட்டுமல்ல, அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நம்பர்களை வாசித்துக்கொண்டிருக்கும்போதே நாங்கள் அண்ணாசிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் எழுந்து சென்றுவிட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு அண்ணாசிலை அகற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

தஞ்சாவூர்
மாநகராட்சி மாமன்ற கூட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

சமூக ஆர்வலரான வீரசேனன், ``தஞ்சாவூர் ரயில் நிலையம் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருவதும் தொடர்கிறது. ரயில் நிலையத்துக்கு எதிரேதான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் உள்ளன. அண்ணாசிலையை அகற்ற நினைப்பதைப்போல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அவர்களால் அகற்ற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

சண்.ராமநாதன்
சண்.ராமநாதன்

மேயர் சண்.ராமநாதனிடம் பேசினோம். ``பேரறிஞர் அண்ணா உயிருடன் இருக்கும்போதே மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களால் வரலாற்று சிறப்புமிக்க வகையில் திறக்கப்பட்ட சிலை. அதைச் சுற்றி அழகுபடுத்தி ரவுண்டானா அமைக்கப்படவிருக்கிறது. தீர்மானத்தில் சிலையை அகற்றி சில மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்தில் வைக்கப்படவிருப்பதாகத் தவறுதலாக வந்துவிட்டது. அண்ணாசிலை இருக்கும் இடத்தைவிட்டு ஒரு இஞ்ச்கூட நகராது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism