Published:Updated:

அதிமுக-வை ஆட்டம் காணவைக்க, சசிகலாவை வளைக்கப் பார்க்கிறதா பாஜக?!

சசிகலா - அதிமுக - பாஜக

நயினார் நாகேந்திரனின் சசிகலா கருத்து, பொன்னையனின் அதிருப்தி என அ.தி.மு.க-பா.ஜ.க இடையே நிலவும் அரசல் புரசல் பாலிடிக்ஸ் மக்கள் மன்றத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன..?

அதிமுக-வை ஆட்டம் காணவைக்க, சசிகலாவை வளைக்கப் பார்க்கிறதா பாஜக?!

நயினார் நாகேந்திரனின் சசிகலா கருத்து, பொன்னையனின் அதிருப்தி என அ.தி.மு.க-பா.ஜ.க இடையே நிலவும் அரசல் புரசல் பாலிடிக்ஸ் மக்கள் மன்றத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன..?

Published:Updated:
சசிகலா - அதிமுக - பாஜக

``அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்த்துவிட்டால் அந்தக் கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பா.ஜ.க-வுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவர் வருகை பா.ஜ.க-வினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அ.தி.மு.க-வில் சேர்க்காவிட்டால், பா.ஜ.க-வில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்" என்று பா.ஜ.க சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், இந்தப் பேட்டியின்போது, அவர் சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் `சின்னம்மா' எனக் கூறியிருந்தார்.

நயினாரின் இந்தக் கருத்து குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``பா.ஜ.க-வுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது, அவரின் தனிப்பட்ட கருத்து. இது தனி ஒரு மனிதன் முடிவெடுக்கக்கூடிய விஷயம் கிடையாது. இது போன்ற நிகழ்வு நடக்குமேயானால், அது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைக்குழுவின் ஆலோசனைப்படியே முடிவெடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அ.தி.மு.க பின்னுக்குத் தள்ளப்படுவதாகத் தமிழ்நாட்டில் மறைமுக பிரசாரம் நடந்துவருகிறது” என்று சமீபத்தில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என அண்ணாமலை கூறியிருந்தாலும், மாநில அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், ``சசிகலா பலம் நிரூபிக்கப்படாதவர். அவர் பலத்தை நிரூபித்த பிறகுதான் அரசியலில் `ப்ளஸ்', `மைனஸ்' எனத் தீர்மானிக்க முடியும்” என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர், ``கொடியங்குளம் சம்பவம், பொன்னமராவதி சம்பவம், வெங்கடேஷ் பண்ணையார் என்கவுன்ட்டர் போன்ற பல சம்பவங்கள் சசிகலாவுக்கு எதிராக இருக்கின்றன. அதனால், தனக்கு மக்கள் சக்தி இருக்கிறது என அவர் நிரூபித்தால்தான் அவருக்கு அரசியல் அரங்கில் மரியாதை. மற்றபடி அரசியல் விவரம் இல்லாதவர்கள்தான் அவரை பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஊழல் வழக்கில் குற்றவாளி என அவருக்கான எதிர்ப்பு இருப்பதால், அவரால் அ.தி.மு.க-வுக்குள்ளும், பா.ஜ.க-வுக்குள்ளும் நுழைய முடியாது. இப்போதைய சூழலில் சசிகலாவின் அரசியல் பலம் பூஜ்யம்தான். அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மக்களைச் சந்தித்து தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும். கடந்த கலங்களில், சசிகலா இருந்ததால் வாங்குவங்கி பாதிக்கும் என்கிற அடிப்படையில்தான் பா.ஜ.க தலைமை அ.தி.மு.க கூட்டணிக்குள் வருவதற்கு விரும்பவில்லை. அப்படியிருக்கும்போது, பா.ஜ.க-வில் சசிகலாவைச் சேர்ப்பதற்கன வாய்ப்புகள் மிகக் குறைவு" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் தராசு ஸ்யாம்.

`` `மக்கள் மன்றத்தில் தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி பா.ஜ.க-தான். அ.தி.மு.க கிடையாது’ என்ற அண்ணாமலையின் கருத்துக்கும், பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது,`அண்ணாமலை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். நீங்கள் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று அ.தி.மு.க தலைவர்களிடம் சொல்லப்பட்டதற்கும் பதிலடியாகத்தான் பொன்னையன் பேசியிருக்கிறார். எடப்பாடி, ஓ.பி.எஸ் சம்மதமில்லாமல் அவர் அப்படிப் பேசியிருக்க முடியாது. ஏனென்றால், இதை இப்படியேவிட்டால், நமக்குதான் ஆபத்து. நம்ம இடத்தை பா.ஜ.க கபளீகரமாக்கும் என்கிற அடிப்படையில்தான் பொன்னையன் தலைமைக் கழகத்தில் வைத்துப் பேசியிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

வருகிற மக்களவைத் தேர்தலில் `நாங்கள் 25 இடங்களில் வெற்றி பெறுவோம்' என்கிறார் அண்ணாமலை. பத்து இடங்களில் ஜெயிக்க வேண்டும் என்றால்கூட இருபது இடங்களில் நிற்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் இருபது இடங்கள் எப்படிக் கொடுப்பார்கள். கலைஞர் 1996-ல் த.மா.கா-க்குக் கொடுத்த இருபது இடங்கள்தான் அதிகபட்சம். மூப்பனார் மாதிரியான பெரிய தலைவர், ரஜினி மாதிரியான பெரிய வாய்ஸ் எல்லாம் அப்போது இருந்தது, அதனால் அது சாத்தியமானது. பா.ஜ.க அந்த மாதிரியான இடத்துக்கு ஒன்றரை ஆண்டுக்குள் வர வேண்டுமென்றால், அ.தி.மு.க-வை முழுக்க பலவீனப்படுத்திவிட்டு வேறு தலைவர்கள் எல்லோரையும் உள்ளுக்குள் கொண்டுவந்து, ரஜினி மாதிரியான ஒரு வாய்ஸ் கிரியேட் செய்தால்தானே வர முடியும்... அண்ணாமலையின் நகர்வுகளும் அப்படிதான் தெரிகின்றன. ஏனெனில் பா.ஜ.க நடத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அ.தி.மு.க-வை அழைப்பதில்லை, அவர்களும் போவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை என்றாலும், தேசிய அளவில் தொடர்வோம் என்றார்கள். அப்படியென்றால் கூட்டணியில் இருக்கிறோம் என்கிற அர்த்தம் கிடையாது. அது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான கூட்டணியாகக்கூட தொடரலாம்.

தராசு ஸ்யாம்
தராசு ஸ்யாம்

அ.தி.மு.க ஒன்றுபட்டிருக்க வேண்டும். சசிகலா, தினகரன் எல்லோரையும் சேர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துவது பா.ஜ.க-தான். ஆனால், அ.தி.மு.க தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பா.ஜ.க-வின் செயல் திட்டங்களில் சாதியப் பின்னணி ஃபார்முலாவும் ஒன்று. சசிகலா தனிநபராக இருந்தால் செல்வாக்கு இருக்காது. ஆனால், அவரை அ.தி.மு.க-வுக்குப் போட்டியாக மாற்றினால் முக்குலத்தோர் செல்வாக்கு வரும் என்று பா.ஜ.க கருதலாம். இதை வைத்தே நயினார் நாகேந்திரன் பேசியிருக்கலாம். இந்தியாவின்ராஜதானி டெல்லி. அதன்படி பா.ஜ.க நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும். அதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் தராசு ஸ்யாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism