Published:Updated:

ஸ்டாலின்: மணிமண்டப அறிவிப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்தான் பின்னணியா?! - ஓர் அலசல்

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வட தமிழகத்தில் இருக்கும் இருபெரும் சமூகங்களைக் குறிவைத்து சரியான நேரத்தில் முதல்வர் கொடுத்திருக்கும் அறிவிப்புகளை உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடத்தான் வேண்டும்.

திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர் முதல்வரும் அமைச்சர்களும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் `தியாகத் திருநாள்’ என கொண்டாடப்படும்; அயோத்திதாசருக்கு வட சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும்; 1987-ல் வன்னியர் இட ஒதுக்கீடு கோரி போராடி உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம்... எனப் பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்ற அறிவிப்புகள் இந்தக் கூட்டத்தொடரில் ஏராளம். இந்த மணிமண்டப அறிவிப்புகளின் பின்னால் சமூக அக்கறை இருக்கிறது. அதேநேரம், அந்தச் சமூகங்கள் அதிகம் வாழும் வட தமிழகத்தை மையப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலை மனதில்வைத்தும் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.

அயோத்திதாசர்
அயோத்திதாசர்

அவர்களிடம் பேசினோம். ``வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக பாமக உள்ளிட்ட வன்னியர் சமூகக் கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும் போராடியிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கோரிக்கை பிரதானமாக கோரப்பட்டதே தவிர, 1987-ல் இட ஒதுக்கீடு கேட்டு சாலைமறியல் செய்தபோது போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பெரிதாக எழவில்லை. கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. ஆட்சி மாறியபோதும் திமுக அந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. தற்போது கோரிக்கை எழாதபோதும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவை சர்ச்சை:  துரைமுருகன் விளக்கம்... எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! - திமுக Vs அதிமுக!

மீதமிருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒன்பது மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வன்னியர் சமூகம் அதிகமுள்ள மாவட்டங்கள். பொதுவாகவே திமுக-வுக்கு காலங்காலமாக வன்னியர் சமூகம்தான் முதுகெலும்பாக நின்றிருக்கிறது. எனினும், கருணாநிதி மீதான நம்பிக்கை தன்மீதும் ஏற்பட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அதேநேரம், இந்த ஒன்பது மாவட்டங்களில் ஏழில் பாமக வலுவாக காலூன்றியிருக்கிறது. அந்தக் கட்சி அதிமுக-வுடன் கூட்டணியில் இருப்பதால், அதன் பலம் அதிமுக-வுக்குச் சாதகமாக அமையக்கூடும். அதனால்தான், பாமக-வுக்கும், அதிமுக-வுக்கும் செக் வைக்கும்விதமாக 21 பேருக்கு மணிமண்டபம் கட்டப்படும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர்.

அதிமுக - பாமக
அதிமுக - பாமக

மேலும், இந்த ஒன்பது மாவட்டங்களிலும் பட்டியலின மக்களும் கனிசமாக வசிக்கிறார்கள். வன்னியர் சமூகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற தோற்றம் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அறிவார்ந்த முறையில் சிந்தித்து அயோத்திதாசருக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலை மையமாகவைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார் ஸ்டாலின்!” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News Today: `இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 போராளிகளுக்கு மணிமண்டபம்!’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் இது குறித்துக் கேட்டபோது, ``தமிழுக்குத் தொண்டாற்றியவர்களையும், சுதந்திரத்துக்குத் தொண்டாற்றியவர்களையும் கௌரவிப்போம் எனத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அதைத்தான் செய்திருக்கிறார் முதல்வர். இதை சாதியுடன் இணைப்பது நியாயமேயில்லை. அப்படிப் பார்த்தால் வ.உ.சி., காமராஜர் எனப் பலதரப்பட்ட தலைவர்களுக்கும் கௌரவம் அளித்திருக்கிறோம், அதையும்கூட சாதியுடன் ஒப்பிடுவீர்களா? நீங்கள் சொல்வதுபோலவே எடுத்துக்கொண்டாலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இந்த ஒன்பது மாவட்டங்களையும் பாருங்கள். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் திமுகதானே ஜெயித்திருக்கிறது. நெல்லை, தென்காசியில் மட்டும் தலா ஒரு தொகுதியில் அதிமுக வென்றிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எங்களுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்த இந்த ஒன்பது மாவட்ட மக்கள், ஆளுங்கட்சியாக அமர்ந்து இவ்வளவு சாதனைகளைப் புரிந்திருக்கிறோமென்றால் வெற்றியைக் கொடுக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

1989-90 காலகட்டத்தில் வன்னியர் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு அளித்து எம்.பி.சி கோட்டாவை கருணாநிதி அமைத்தபோது, உயிர்நீத்த 21 பேரின் குடும்பங்களுக்கும் அரசுப் பணி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு கருணாநிதியும் இசைவு தெரிவித்தார். இதைக் கோடிட்டுக் காட்டித்தான் `ஞாபக சக்தியில் கலைஞரின் பிள்ளை கலைஞராகவே இருக்கிறார்’ என்று துரைமுருகன் பாராட்டினார்.

`அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்'- 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அயோத்திதாசருக்கு மணிமண்டபம் வட சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னையில் எந்த ஒரு தேர்தலும் இல்லையே. திருவள்ளுவருக்கும் கூடத்தான் அறிவிப்புகள் செய்திருக்கிறோம், அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? அதனால், இந்த அறிவிப்புகள் எல்லாம் தலைவர்களின் செயல்பாடுகளுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம். இதனை தேர்தலோடும், ஜாதியோடும் ஒப்பிடுவது தவறு!” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு