Published:Updated:

பி.கே டீம், உதயநிதியின் தனி டீம் பரிந்துரைகள்... புத்தாண்டில் தி.மு.க புதுக்கூட்டணி?!

உதயநிதி
உதயநிதி

சீட்களின் எண்ணிக்கை இவை அனைத்தையும் கவனிப்பது உதயநிதி தரப்புதான் என்கிறார்கள் உடன்பிறப்புகள். 'ஐபேக்' போன்றே தனியாக ஒரு டீமை வைத்திருக்கிறார் உதயநிதி

தி.மு.க-வுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கும் `ஐபேக்' நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அப்போது தி.மு.க கூட்டணியில் தற்போதிருக்கும் கட்சிகளின் பலம், பலவீனங்கள் ஆராயப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற இடங்களையும், தோல்வியடைந்த இடங்களையும் பட்டியலிட்டு, அவற்றை அக்குவேறு ஆணிவேராக அலசி, புள்ளிவிவரங்களைக் கொட்டியிருக்கிறது ஐபேக் டீம்.

அதன்படி 2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா இருந்தபோதே, தி.மு.க நேரடியாகப் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்தான் அதிக அளவில் தோல்வியடைந்திருக்கிறது. `எனவே, வரும் தேர்தலில் 200 தொகுதிகள் வரை உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்' என்று சொன்ன ஐபேக், `தேசியக் கட்சிகளைத் தவிர, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கு தனிச்சின்னம் கிடையாது; அவர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்' என்றும் சொல்லியிருக்கிறதாம்...

...சீட்களின் எண்ணிக்கை இவை அனைத்தையும் கவனிப்பது உதயநிதி தரப்புதான் என்கிறார்கள் உடன்பிறப்புகள். 'ஐபேக்' போன்றே தனியாக ஒரு டீமை வைத்திருக்கிறார் உதயநிதி. ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்குச் செல்வாக்கு உள்ளது, கூட்டணிக்கு எந்தத் தொகுதியை ஒதுக்கலாம், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற அனைத்து விவரங்களையும் அந்த டீமே பரிந்துரைக்கிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில், இளைஞரணியைச் சேர்ந்த 50 பேருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி நினைக்கிறார். தி.மு.க வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக அமர்ந்தாலும், நிழல் முதல்வராக உதயநிதியே செயல்படுவார் என்கிறார்கள். அமைச்சர்கள் யார் என்பது வரை கிச்சன் கேபினெட் தரப்பே முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

பி.கே டீம், உதயநிதியின் தனி டீம் பரிந்துரைகள்... புத்தாண்டில் தி.மு.க புதுக்கூட்டணி?!

- தமிழக சட்டசபைத் தேர்தல் வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. தி.மு.க-வையும் அதன் தலைமையிலான கூட்டணியையும் நாடே உற்று கவனிக்கிறது. ஆனால், அதே கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்று கேட்டால், கட்சியின் மூத்த நிர்வாகிகளே கமுக்கமாக தலையைக் குனிந்து கொள்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் இப்போது கூட்டணியிலிருக்கும் சில கட்சிகள் வெளியேறலாம்; வெளியேயிருக்கும் சில கட்சிகள் உள்ளே வரலாம்.

இணக்கமான கட்சிக் கொள்கை, நட்புணர்வு, நம்பகத் தன்மை, நியாய, தர்மங்கள் இவற்றைத் தாண்டி 'லாப, நஷ்ட'க் கணக்குகளே நடப்பு அரசியலைத் தீர்மானிக் கின்றன. அந்தவகையில், தி.மு.க-வில் அநேகமாக, புத்தாண்டில் புதுக்கூட்டணி உருவாகலாம் என்பதே இப்போதைய நிலவரம்.

> பிக் பிளான் 'பி.கே' | உள்ளே... வெளியே | "வெண்ணெய் திரளும்போது சட்டியை உடைப்பதா?" | கிச்சன் கேபினட் ஆதிக்கம் | மாந்திரீகம் முதல் தாந்திரீகம் வரை... இப்படி பல தகவல்களை உள்ளடக்கிய முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2Ix2Psx > எக்ஸ்ட்ரா லக்கேஜ்! - கழற்றிவிடப்படும் கட்சிகள்... தி.மு.க புதுக்கணக்கு https://bit.ly/2Ix2Psx

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு