Published:Updated:

கேரளாவில் பதுங்கியுள்ளாரா ராஜேந்திர பாலாஜி? - தீவிர தேடலில் போலீஸார்!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

பண மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய ஏற்கெனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம்பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 17-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதே நாளில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகரில் மேற்கு மாவட்ட அ.தி.முக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோதே முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவலை தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. “சார்… எந்த நேரத்துலயும் போலீஸ்காரங்க உங்களை கைது செய்யலாம்” என வழக்கறிஞர்கள் எச்சரிக்க, ”சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் செய்யுங்க” எனச் சொல்லிவிட்டு விருதுநகரில் இருந்து காரில் புறப்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போலீஸாரிடம் சிக்கிவிடக்கூடாது என முடிவெடுத்த ராஜேந்திர பாலாஜி, தான் வைத்திருந்த ஆண்டிராய்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்து அதை தனது உதவியாளர் ஒருவரிடம் கொடுத்து பேருந்தில் திருச்சிக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, பேசுவதற்கு மட்டுமே உபயோகப்படும் கீ-போர்டு டைப் போன் ஒன்றில் புதிய சிம் கார்டு போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறார். தனது காரில் ஏறிய அவர், திருத்தங்கலில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லாமல், விருதுநகர் டு மதுரை சாலையில் சென்றிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் அவரின் மாறுவேட மாதிரி புகைப்படம்
சமூக வலைதளங்களில் வைரலாகும் அவரின் மாறுவேட மாதிரி புகைப்படம்

ஆனால், மதுரைக்கும் செல்லாமல் முன்னதாகவே திருமங்கலம் சாலையில் திரும்பி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனக்கு நெருக்கமான ஒருவரின் தோட்டத்திற்கு சென்றதாகச் சொல்கிறார்கள். அங்கிருந்து சிறிது நேரத்தில் வேறொரு காரில் ஏறி, தென்காசி சாலையில் பயணம் செய்துள்ளார். பின்னர் அங்கு அவருக்காக காத்திருந்த மற்றொரு காரில் ஏறிச் சென்றுள்ளார். தென்காசியிலிருந்து செங்கோட்டை சென்று அங்கிருந்து திருவனந்தபுரம் போகும் ரூட்டில் சென்றிருக்கிறது அந்தக் கார். ராஜேந்திரபாலாஜியின் வாகனம் கடைசியாக கேரளா மாநிலம் நோக்கி சென்றதாகச் சொல்கிறார்கள் போலீஸார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விடுதிகள், பொது இடங்களில் தங்கினால் போலீஸில் சிக்கி விடுவோம் என்பதால் கேரளாவில் உள்ள ஆயுர்வேத சித்த வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவது போல் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் போலீஸார். இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன்கள், வசந்தகுமார், ரமணா, கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரிடம் சுமார் 15 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஏற்கெனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தனிப்படை போலீஸார் கேரளா மாநிலத்திற்கும் விரைந்துள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

“விருதுநகரில் இருந்தது தப்பிச் சென்ற ராஜேந்திர பாலாஜி, அவரது உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவரது தொடர்பாளர்கள், ஆதரவாளர்கள், அ.தி.மு.க-வில் முக்கியப் புள்ளிகள் என சுமார் 600 போன் எண்களை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவரைக் கைது செய்து விடுவோம்” என்கிறார்கள் போலீஸார். இந்த நிலையில், ராஜேந்திரபாலாஜி மாறு வேடத்தில் சுற்றித் திரிந்தால் அவரை அடையாளம் காணும் விதமாக மொட்டை அடித்தது போலவும், தாடி, முடி வளர்த்த நிலையிலும், பெண் வேடத்திலும் இருப்பது போல புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.