Published:Updated:

அமித் ஷா மீது வருத்தத்தில் இருக்கிறாரா மோடி?

மோடி
மோடி

சமீபத்தில் வருமான வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுங்கட்சி வி.ஐ.பி-க்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலரும் இடம்பெற்றுள்ளார்களாம்

''ஏதோ பூடகமாகச் சொல்வதுபோல் தெரிகிறதே..!''

"அதேதான். 'சென்னையில் முதல்வரின் வீட்டை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்த முதல்வர் அப்படியே டெல்லிக்குப் பறந்து விட்டார்' என்று சொல்லியிருந்தீர் (25.12.19 தேதியிட்ட ஜூ.வி இதழ்). ஆனால், அவர் அங்கிருந்து சென்னை வந்திருக் கிறார். இங்கே உள்ள வேலைகளையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் என்கிறார்களே."

''தமிழக பா.ஜ.க தலைமைப் பதவி பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள். ஜனவரி மாதம், அகில இந்திய அளவிலான தலைவர் பொறுப்புக்கு நட்டா தேர்வுசெய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக ஜனவரி 5-ம் தேதி பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் சென்னை வருகிறார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் இரண்டு நாள்கள் கழித்து மாநிலத் தலைவர் யார் என அறிவிப்பார்களாம்.'' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2MA9zVz

சூடாக ஃபில்டர் காபி வந்தது. அதை உறிஞ்சிக் குடித்த கழுகார், "விரைவில் தமிழக அரசியல் புள்ளிகள் சிலரைக் குறிவைத்து வருமானவரித் துறை ரெய்டு நடத்தப்போகிறதாம். அதில் ஆளுங்கட்சிப் புள்ளிகள் சிலரும் சிக்கலாம் என்கிறார்கள். சமீபத்தில் வருமான வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுங்கட்சி வி.ஐ.பி-க்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலரும் இடம்பெற்றுள்ளார்களாம். பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றதும் நடவடிக்கை தொடங்கும் என்கிறார்கள்'' என்றார்.

அமித் ஷா மீது வருத்தத்தில் இருக்கிறாரா மோடி?

"வழக்கமாக நடப்பதுதான். கடைசியில் கிடப்பில் போட்டுவிடுவார்கள். அது கிடக்கட்டும். மோடி-அமித் ஷா இடையே உரசல் என்கிறார்களே?"

" `கடந்த சில நாள்களாகவே அமித் ஷா மீது மோடி வருத்ததில் இருக்கிறார்' என்ற தகவல் டெல்லி மீடியா வட்டாரத்தில் வட்டமடிக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை பிரதமர் `வேண்டாம்' என்று சொல்லியும், அமித் ஷா பிடிவாதமாக அறிவித்துவிட்டாராம். இதில்தான் அமித் ஷாவிடம் கொஞ்சம் காட்டமாகப் பேசிவிட்டாராம் மோடி. அதற்குப் பிறகுதான் ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்த போது, குடிமக்கள் பதிவேடு பற்றி அமைச்சர வையில் இன்னும் நாங்கள் விவாதிக்கவில்லை' என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.''

- கழுகார் திரட்டிய தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: "ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள் கலைப்பு!" - தி.மு.க அதிரடித் திட்டம் https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-jan-1st

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

சரிகிறதா சாம்ராஜ்ஜியம்?

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் கணிசமான மாநிலங்களில் வீறுகொண்டு எழுந்த பா.ஜ.க-வுக்கு இப்போது சரிவுக்காலம். அப்போது ஏழு மாநிலங்களில் அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, 2018-ம் ஆண்டு 21 மாநிலங்களில் அந்தக் கட்சி கோலோச்சியது. நிலைமை இப்போது அப்படியல்ல. 2018-ம் ஆண்டு இறுதியிலிருந்து இப்போது வரை அந்தக் கட்சி ஐந்து மாநிலங்களில் தங்களது அதிகாரத்தைப் பறிக்கொடுத்திருக்கிறது. `அகண்ட பாரதம்' என்கிற சாம்ராஜ்ஜியக் கனவை நோக்கி நகரும் பா.ஜ.க-வுக்கு, இது சரிவின் தொடக்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமித் ஷா மீது வருத்தத்தில் இருக்கிறாரா மோடி?

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, பா.ஜ.க ஆகிய கட்சிகளைக்கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக நிதிஷ்குமாரின் கட்சி வாக்களித்தது. ஆனால், கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரான பிரசாந்த் கிஷோர் மற்றும் பொதுச்செயலாளர் பவன் கே.வர்மா ஆகியோர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நிதிஷ்குமாரின் நிலைப்பாடும் மாறியிருக்கிறது. `பீகாரில் என்.ஆர்.சி-யை அமல்படுத்த மாட்டோம்' என்றிருக்கிறார் நிதிஷ். இந்தப் பிளவு, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம். டெல்லியிலும் நிலைமை மோசமாக இருக்கிறது. டெல்லியில் வலுக்கும் போராட்டங்களே அதை உணர்த்துகின்றன. - விரிவான கட்டுரைக்கு > சரிகிறதா சாம்ராஜ்ஜியம்? https://www.vikatan.com/news/policies/discussion-about-bjp-defeat-in-assembly-elections

அடுத்த கட்டுரைக்கு