Published:Updated:

'மோர்பி கேபிள் பாலம் விபத்து' - குஜராத் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குஜராத்: அறுந்து விழுந்த கேபிள் பாலம்

மோர்பி மேம்பால விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது ஒருபுறம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் இதைவைத்து ஆதாயம் தேடிவருவதாகக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

'மோர்பி கேபிள் பாலம் விபத்து' - குஜராத் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மோர்பி மேம்பால விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது ஒருபுறம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் இதைவைத்து ஆதாயம் தேடிவருவதாகக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

Published:Updated:
குஜராத்: அறுந்து விழுந்த கேபிள் பாலம்

கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், காங்கிரஸ் 77 இடங்களைப் பெற்றது. இந்த ஆண்டு குஜராத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. இதற்கிடையில் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதன் காரணமாக குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல், நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், வரும் 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக குஜராத் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

குஜராத் பாலம் விபத்து
குஜராத் பாலம் விபத்து

இதை உணர்ந்த பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏராளமான, கவர்ச்சிகரமான திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுவருகின்றன. இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்த முறை குஜராத் தேர்தலில் பாஜக-வுக்கு பல்வேறு சவால்கள் நிலவிவருகின்றன. குறிப்பாக, நெசவுத் தொழில்களில் ஏற்பட்ட பெரும் நஷ்டம், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மீள முடியாத நிலை போன்றவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

போதாக்குறைக்கு மோர்பி பால விபத்து பாஜக-வுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் அரசியல் கட்சிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டிவருகின்றன என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

`பராமரிப்பு நிறுவனம் எஃப்.சி வாங்காமலேயே பாலம் திறக்கப்பட்டது; புனரமைத்ததில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன’ என காங்கிரஸும் ஆம் ஆத்மியும் குற்றம்சாட்டிவருகின்றன. ஏற்கெனவே பஞ்சாப் வெற்றி, டெல்லி மாடல் வளர்ச்சி, பாஜக-வுக்கே போட்டியாக இந்துத்துவா அரசியலை முன்னிலைப்படுத்தி ஆம் ஆத்மி பிரசாரத்தில் ஈடுபட்டு, பாஜக-வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவந்தது.

தற்போது மோர்பி பால விபத்துக்கு ஆளும் அரசுதான் முக்கியக் காரணம் என்று விமர்சித்துவருகிறது ஆம் ஆத்மி. இது மக்களிடத்தில் பாஜக மீது ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பற்ற வைத்திருக்கும் வெடி புஸ்வாணமாக இருக்குமா அல்லது அணுகுண்டாக இருக்குமா என்பது தேர்தல் முடிவின்போது தெரியவரும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "குஜராத்தில் ஏற்கெனவே மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. பாஜக 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருப்பதாலும், மோடியும் 10 ஆண்டுகளாக முதல்வராக இல்லாத காரணத்தாலும் ஆளும் அரசுக்கு எதிரான மனநிலையில்தான் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கிராமப் பகுதிகளில் வலுவான பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றன. 2017 தேர்தலில் ஆம் ஆத்மி 29 இடங்களில் நின்றது. ஆனால், ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

பிறகு சூரத், காந்தி நகர் நகராட்சித் தேர்தல்களில் நின்று வெற்றிபெற்றது. அது அவர்களுக்கு ஒருவிதமான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. பலவிதமான மக்கள் போராட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதனால் பாஜக-வுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் ஆம் ஆத்மியை பாஜக-வின் 'பி' டீம் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துவருகிறது.

காங்கிரஸுக்கு முழுவதும் செல்வாக்கு போய்விட்டது என்று ஆம் ஆத்மி கூறுகிறது. இதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. முடிந்த தேர்தலில் 79 இடங்களை காங்கிரஸ் பிடித்தது. 21 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி பாஜக-வுக்குச் சென்றுவிட்டனர். பிரதமர் சமீபத்தில் நான்கு முறை குஜராத்துக்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்திருக்கிறார்.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி

இந்த நிலையில் தற்போது பாலம் இடிந்து விழுந்தது நிச்சயம் ஒரு பேசுபொருளாக இருக்கும். முன்னதாக மேற்கு வங்கத்தில் தேர்தல் சமயத்தில் பாலம் ஒன்று விழுந்தபோது பிரதமர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எதிர்க்கட்சிகள் இதே விஷயத்தைக் கையில் எடுக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் கண்டிப்பாக இந்த விபத்தும் அரசியலாக்கப்படும்.

ஏற்கெனவே கெஜ்ரிவால், ஊழல் காரணமாகத்தான் பாலம் உடைந்தது என்று பேச ஆரம்பித்துவிட்டார். தேர்தலின்போது ஆம் ஆத்மி இதைப் பயன்படுத்தும். ராகுல் காந்தி அரசியலாக்க விரும்பவில்லை என்று சொன்னாலும், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் இதைக் குறிப்பிட்டு பிரசாரம் செய்ய வாய்ப்பிருக்கிறது" என்றார்.