Published:Updated:

அதிர்ச்சி வைத்தியத்துக்கு தயாராக எடப்பாடி... 'பாய்ச்சல்' முடிவில் பன்னீர்..?

எடப்பாடி
எடப்பாடி

இந்த முறை ஆளுநர் தரப்பில் சற்றே கடுமை காட்டப்பட்டதாம். சந்திப்பின்போது, 'சென்னையில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு என்னதான் செய்துவருகிறது?

கோபத்தில் எடப்பாடி... அமைச்சர்கள் சிலருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்!

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரைச் சந்தித்ததில் ஏதேனும் முக்கிய செய்தி இருக்கிறதா?'' என்று கழுகாரிடம் கேட்டோம்.

" 'வழக்கமான சந்திப்புதான்' என்கிறார்கள். ஆனால், கொரோனா தீவிரமாகப் பரவுவது தொடர்பாக இந்த முறை ஆளுநர் தரப்பில் சற்றே கடுமை காட்டப்பட்டதாம். சந்திப்பின்போது, 'சென்னையில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு என்னதான் செய்துவருகிறது? இப்படியான சூழலில் சுகாதாரத்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பது குறித்தும் தகவல்கள் வருகின்றன' என்று ஆளுநர் தரப்பில் கடும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாம். அப்போது, 'விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவோம்' என்று மட்டும் முதல்வர் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.''

''அமைச்சர்கள்மீது முதல்வர் கோபமாக இருக்கிறார் போலிருக்கிறது?''

''சில நாள்களுக்கு முன்னர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் சிலர், 'ஆகஸ்ட் மாதம் சின்னம்மா சிறையிலிருந்து வந்துவிடுவார். அதற்குப் பிறகு அண்ணன் சில அதிரடிகளை அரங்கேற்றப் போகிறார்' என்று கோட்டை வட்டாரத்தில் கொளுத்திப்போட... தகவல் அப்படியே முதல்வர் தரப்புக்குச் சென்றுள்ளது. கோபமடைந்த முதல்வர் தரப்பு, பிரச்னை ஓரளவு தணிந்த பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவிருக்கிறதாம்!''

அதிர்ச்சி வைத்தியத்துக்கு தயாராக எடப்பாடி... 'பாய்ச்சல்' முடிவில் பன்னீர்..?

''ஓஹோ!''

''சென்னையில் ஈ.சி.ஆர் பகுதியில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பில் இடம் வாங்கிவருகிறார்கள். அந்த இடங்களுக்குள் பிரபல மூன்று எழுத்து நிறுவனத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் புகுந்து வில்லங்கம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம். 'புதிதாக யார் இடம் வாங்கினாலும், போலி ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னை செய்து பெரும் தொகையைக் கறந்துவிடுகிறார்' என்கிறார்கள். இதற்கு அந்தப் பகுதியின் முக்கிய காக்கியும் உடந்தையாக இருக்கிறாராம்."

''சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றுவது குறித்து தலைமையிலிருந்து உத்தரவிடப்பட்டு, இடையே அது கேன்சல் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் சுற்றுகிறதே?" - கழுகார் அளித்த விரிவான தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்க.. > முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர் https://bit.ly/3dJsNU7

சசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்?

தமிழகத்தின் துணை முதலமைச்சர், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் வசம் பவர்ஃபுல் பதவிகள் இருந்தாலும், அந்த பவரை அவரால் பயன்படுத்த முடியவில்லை. சமீபத்தில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார் ஓ.பி.எஸ். அப்போது அவரைச் சந்திக்கச் சென்றவர்களிடம் தனது மனக்குமுறல்களைக் கொட்டியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான ஒருவர், ''அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதால், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிப்பதற்கான வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார். அதற்காகக் கட்சியின் கட்டமைப்புகளை மாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். ஏற்கெனவே கட்சியின் அடிமட்டப் பதவியாக இருந்த ஊராட்சிச் செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மாற்றம் நடக்கப்போகிறது. இந்த நடவடிக்கைகளில் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. நடப்பதையெல்லாம் அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

அதிர்ச்சி வைத்தியத்துக்கு தயாராக எடப்பாடி... 'பாய்ச்சல்' முடிவில் பன்னீர்..?

அணிகள் இணைப்பின்போது, 'ஆட்சிக்கு பழனிசாமி, கட்சிக்கு பன்னீர்செல்வம்' என்றுதான் பேசப்பட்டது. ஆனால், சில காலம் மட்டுமே அதைக் கடைப்பிடித்தனர். ஆட்சியில் மட்டுமல்லாமல் கட்சியிலும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்துகிறார் எடப்பாடி. பல மாதங்களாகப் பன்னீருக்கு இந்த வருத்தம் இருந்தது. ஆனால், 'ஆட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்' என அமைதியாக இருந்துவிட்டார். இனியும் அமைதியாக இருந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதனால் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்'' என்றார்.

- ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலப் புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பரிதாப நிலைக்குத் தள்ளியிருக்கிறது காலம். ''எந்த சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினாரோ... அதே சசிகலாவின் தலைமையைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்துவிட்டார் ஓ.பி.எஸ்'' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஓ.பி.எஸ் வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தபோது கிடைத்த மேலும் சில தகவல்களை முழுமையாக வாசிக்க... இங்கே க்ளிக் செய்க... > சசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்? https://bit.ly/3f3MMgq

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு