Published:Updated:

#2021 CM FOR OPS: `கிராம மக்களின் சார்பாக..!’ - பரபரப்பு போஸ்டர்... பின்னணியில் யார்?

போஸ்டர்
போஸ்டர்

`தேனி முழுவதும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களுக்குக் காரணம், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத் குமார்தான்’ என்று தேனியில் பேசப்பட்டுவருகிறது.

இன்று காலை, தேனி மாவட்டத்தின் பெரியகுளம், போடி, தேனி ஆகிய பகுதிகளில் `பளிச்’சிடும் போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. அந்த போஸ்டர்களில், `அம்மா ஆசி பெற்ற என்றென்றும் மக்கள் முதல்வர் OPS’, `ஏழை எளியோரின் எளிய முதல்வர் OPS ஐயா’, `தமிழகத்தின் நிரந்த முதல்வர் OPS ஐயா’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தன. கூடவே, ’#2021 CM FOR OPS’ என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருந்தது.

போஸ்டர்
போஸ்டர்
`6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்!’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஓ.பி.எஸ்?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே அமைந்துள்ள `கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக...’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களை யார் ஏற்பாடு செய்தது என விசாரித்ததில், ஓ.பி.எஸ் மகன், தேனி எம்.பி ரவீந்திரநாத் குமாரின் உதவியாளர் கிருஷ்ணா என்பவரின் சொந்த ஊர் கெஞ்சம்பட்டி எனத் தகவல் கிடைத்தது. கிருஷ்ணாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் ஊரில் இல்லை. வெளியூரில் இருக்கிறேன். எனக்கும் போஸ்டருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஊர் மக்கள்தான் போஸ்டர் அடித்துள்ளனர்” என்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு!
போஸ்டர்
போஸ்டர்

கெஞ்சம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டியிடம் போனில் பேசினோம். ``தேனி முழுவதும் 300 போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறோம். போடியில்தான் அதிக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அறிவிக்க வேண்டும். அவர்தான் அடுத்த முதல்வர். அதுதான் எங்கள் ஆசை. எங்கள் ஆசையை வெளிப்படுத்தத்தான் போஸ்டர் அடித்தோம்’’ என்றார்.

பெரியகுளத்தில் கிழிக்கப்பட்ட போஸ்டர்
பெரியகுளத்தில் கிழிக்கப்பட்ட போஸ்டர்
`தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS' - தேனியை அதிர வைத்த போஸ்டர்கள்

இதற்கிடையில், ஓ.பி.எஸ் வீடு இருக்கும் பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்ட இரண்டு போஸ்டர்களை யாரோ கிழித்திருந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர்கள் சிலர் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என மாறி மாறி ஆலோசனை செய்துவரும் நிலையில், `மறைமுகமாக, ஓ.பி.எஸ்தான் தனது மகன் மூலம் போஸ்டர் அடிக்க வைத்திருக்கிறார்’ என்றே கட்சியினர் கிசுகிசுக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க தரப்பில் இருவர் பெயரிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், `கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் வெற்றியை ஈட்ட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய நேரம் இது.

சிறு சலசலப்புக்கும் இடம் தராமல், நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல் ஒன்றுபட்டு உழைத்திட கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு