Published:Updated:

`10 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த அறை அது!' -பொன்னாருக்கு அதிர்ச்சி கொடுத்ததா கமலாலயம்?

கம­லா­லயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பொன். ராதா­கிருஷ்ண­னுக்கு ஒதுக்­கப்பட்டி­ருந்த அறை ரத்து செய்­யப்­பட்­டுவிட்­டது. அவர் தற்­போது கட்சிப் பொறுப்பில் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டு வந்த அறையை ரத்து செய்திருக்கும் சம்பவம் கமலாலய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `மாநிலத்தில் பதவியில் இல்லாத ஒருவருக்கு எப்படி அறையை ஒதுக்க முடியும். அவரை உடனடியாக காலி செய்யச் சொல்லுங்கள்' என பொன்னாருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள் ஒரு தரப்பினர். அரசியல் பழிவாங்கும் படலம் அரங்கேறிக்கொண்டிருப்பதாக பொன்னார் ஆதரவாளர்கள் ஆவேசப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

என்னதான் நடக்கிறது கமலாலயத்தில்?

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

வெளி மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு, கட்சியைச் சிறப்பாக வழி நடத்துவதற்காகச் சென்னையில் உள்ள கமலாலயத்தில் அறைகள் வழங்கப்படும். குறிப்பாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அந்த வரிசையில், மாநிலத் தலைவராக இல.கணேசன் பொறுப்பு வகித்த நேரத்தில் அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அந்தநேரத்தில், மாநிலத் தலைவர் பொறுப்பை கவனித்து வந்தார் பொன்னார். அப்போது அவருக்கு கமலா­ல­யத்தில் அறை ஒன்று ஒதுக்கப்­பட்டிருந்த­தது. இல.கணே­ச­னுக்குப் பிறகு பொன்.ராதாகிருஷ்­ணன் மாநி­லத் தலைவராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்­பெற்­றதையடுத்து, மாநிலத் தலைவர் பத­வியை ராஜினாமா செய்­தார். இதை­யடுத்து, தமிழிசை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்­போது தமிழிசை தெலங்கானா ஆளுநராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்­க­ளாக பா.ஜ.க-வின் புதிய மாநிலத் தலைவர் யார் என்ற போட்டி சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகளைவிட உச்சக்கட்டமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, பொன்.ராதா­கிருஷ்­ணன், கம­லா­ல­யத்தில் அடிக்கடி செய்தியாளர்­களைச் சந்தித்துப் பேட்டி அளித்து வருகிறார். சர்ச்சையான சில கருத்துகளைக் கூறியது பா.ஜ.க-வில் உள்ள ஒரு தரப்பினருக்குப் பிடிக்கவில்லை.

பா.ஜ.க அலுவலகம்
பா.ஜ.க அலுவலகம்

இந்த ­நி­லையில், `கம­லா­லயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பொன். ராதா­கிருஷ்ண­னுக்கு ஒதுக்­கப்பட்டி­ருந்த அறை ரத்து செய்­யப்­பட்­டுவிட்­டது. அவர் தற்­போது கட்சி நிர்­வா­கியாக இல்லை. எனவே­தான் அறையைக் காலி செய்­யுங்கள்' என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்­பாக ஜனவரி 15–ம் தேதி அவருக்குத் தக­வல் அனுப்­பப்­பட்­டது. இதை­யடுத்து, அறையைப் பொன்.ராதாகிருஷ்­ணன் காலி செய்­துவிட்டார்' என்கின்றனர் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் சிலர். `பொன்.ராதா­கிருஷ்­ணன் இப்­போது சென்­னைக்கு வந்­தால், மயி­லாப்பூரில் உள்ள அவரது சகோ­தரி வீட்டில் தங்கிக்­கொள்­கி­றார்' என்றும் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாதம் கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை. பா.ஜ.க விதிமுறைப்­படி அமைப்பு பொதுச்­ செயலாளர் மட்டுமே தலைமை­ய­கத்­தில் தங்­கியிருந்து பணியாற்ற வேண்டும். இதன்­படி மாநில அமைப்பு பொதுச்­செ­ய­லாளர் கேசவ விநா­ய­கத்துக்கு கம­லால­யத்தில் ஏற்­கெனவே அறை ஒதுக்­கீடு செய்யப்­பட்­டுள்­ளது. அவர் அங்­கேயே தங்­கியிருந்து பணியாற்றி வரு­கி­றார்.

இல.கணேசன்
இல.கணேசன்

இதுகுறித்து மாநிலப் பொதுச்செயலாளர் கே.எஸ். நரேந்திரனிடம் பேசினோம். ``இதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவர்களுக்குப் பொறுப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு அறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், பொன்னார் உள்ளிட்ட எல்லோரும் அந்த அறைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். புதிய நபர்களுக்குப் பொறுப்பு கொடுக்கும்போது அதை விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். இது வழக்கம். இவரும் அதேபோலத்தான் செய்திருக்கிறார். பொன்னார் மாநிலத் தலைவராக இருந்தபோது அவருக்கு அறை வழங்கப்பட்டது.

கே.எஸ் நரேந்திரன்
கே.எஸ் நரேந்திரன்

மேலும், அவருக்கு மத்தியிலும் பதவி கிடைத்தபோது கட்சியை வளர்ப்பதற்காகவும் மக்களைச் சந்திப்பதற்காகவும் அந்த அறையைப் பயன்படுத்தி வந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது. தற்போது அவருக்கு அலுவலகம் தேவையில்லை என்பதால் அவரேதான் அலுவலகத்தை காலி செய்திருக்கிறாரே தவிர வேறு யாரும் சொல்லி காலி செய்யவில்லை. அவருக்குப் பிடிக்காத ஒரு சிலர் வீண் வதந்திகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்றதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு