Published:Updated:

கடைசி அஸ்திரமாக ரஜினியை மட்டும் பா.ஜ.க நம்புவது ஏன்?

முன்பு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நம்பினார்கள். பிறகு விஜயகாந்த் பின்னால் போனார்கள். அ.தி.மு.க ஆட்சியைப் பின்னணியில் இயக்கும் அதிகாரமும் பெற்றார்கள். ஆனாலும்கூட தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியவில்லை.

பா.ஜ.க
பா.ஜ.க

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜ.க-வுக்கு 17.16 கோடிப் பேர் வாக்களித்தனர். இதனால் 282 எம்.பி-க்கள் பா.ஜ.க-வுக்குக் கிடைத்தனர். கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தினால், அடுத்த தேர்தலில் 300 எம்.பி-க்கள் கிடைப்பார்கள் எனக் கச்சிதமாகக் கணக்குப் போட்டது பா.ஜ.க. அதன்படி 'மிஸ்டுகால் உறுப்பினர்' திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதற்காக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவைக்கு வந்த அமித் ஷா, ''பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும்'' என நிர்வாகிகள் மத்தியில் சொன்னார்.

அதன் பிறகு நடைபெற்ற 2016 சட்டசபைத் தேர்தலிலும், பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. பா.ஜ.க வாங்கிய மொத்த ஓட்டுகள் 12.28 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு பா.ஜ.க-வில் சேர்க்கப்பட்ட 24 லட்சம் உறுப்பினர் களில், பாதிப்பேர்கூட பா.ஜ.க-வுக்கு ஓட்டுப் போடவில்லை. பிறகு எப்படி தமிழகத்தில் தாமரை மலரும்?

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், ஆர்.கே.நகரில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் எம்.என்.ராஜா வாங்கிய வாக்குகள் 2,928. ஜெயலலிதா மறைவால், அதே ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் பெற்ற வாக்குகள் 1,417. பொதுத் தேர்தலைவிட இடைத்தேர்தலில், பா.ஜ.க-வின் ஓட்டுகள் இன்னும் சரிந்துபோனது. நோட்டாவோடு போட்டியிடும் அளவுக்குப் புதிய சரித்திரம் படைத்தது அந்தக் கட்சி.

கடைசி அஸ்திரமாக ரஜினியை மட்டும் பா.ஜ.க நம்புவது ஏன்?

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க-வுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.84. அதற்கு முந்தைய 2011 சட்டசபைத் தேர்தலில் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.22. அதாவது ஐந்தாண்டுகளில் 0.62 சதவிகிதம்தான் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி உயர்ந்தது.

முன்பு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நம்பினார்கள். பிறகு விஜயகாந்த் பின்னால் போனார்கள். அ.தி.மு.க ஆட்சியைப் பின்னணியில் இயக்கும் அதிகாரமும் பெற்றார்கள். ஆனாலும்கூட தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியவில்லை. இப்போது ரஜினியின் தயவைப் பெரிதும் நம்பியிருக்கிறது அந்தக் கட்சி. அதற்கேற்ப ரஜினியின் கருத்துக் களும் பெரும்பாலும் பா.ஜ.க ஆதரவு கொண்டவையாகவே இருக்கின்றன.

- ஜூ.வி 2020 சிறப்பிதழில் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி எழுதியுள்ள அரசியல் அலசலை விரிவாக வாசிக்க > தமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை? http://bit.ly/387CoRB

''ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவருக்காக பா.ஜ.க-வின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்'' என முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார் அமித் ஷா. தமிழகத்தில் பா.ஜ.க-வின் செல்வாக்கு இனிமேலும் உயரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. கடைசி அஸ்திரமாக பா.ஜ.க நம்புவது ரஜினியை மட்டும்தான்.

கடைசி அஸ்திரமாக ரஜினியை மட்டும் பா.ஜ.க நம்புவது ஏன்?

''2021-ல் அதிசயம் நிகழும்'' எனச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். பா.ஜ.க-வுக்கும் அந்த அதிசயம் நிகழுமா... தாமரை மலருமா???

... `நிரந்தர எதிரிகளும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை' - அரசியல் ஆத்திச்சூடியின் அடிப்படை வாசகங்கள் இவை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காதவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது பா.ஜ.க. பெரியார், அண்ணா வழியில் சென்ற திராவிடக் கட்சிகள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவே தொடக்கத்தில் தயங்கின. ஆனால், முதல்முறையாக அதை உடைத்து தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு உயிர் மூச்சு தந்தவர் ஜெயலலிதா! அப்போதும் அந்தக் கட்சியால் தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை. இப்போதும் அந்தக் கட்சி திராவிடக் கட்சிகளையோ அல்லது எவரேனும் ஒரு கவர்ச்சி பிம்பத்தையோ 'தூக்கிச் சுமக்க வர மாட்டார்களா?' என்றே காத்துக்கிடக்கிறது.

ஏன் இந்த நிலைமை?

- ஜூ.வி 2020 சிறப்பிதழில் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி எழுதியுள்ள அரசியல் அலசலை விரிவாக வாசிக்க > தமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை? https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-bjp-growth-in-tamil-nadu

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9