Published:Updated:

'தி.மு.க-விடம் 20-க்கு மேல் எதிர்பார்க்க முடியாது' - 'மாற்று ஏற்பாடு' முனைப்பில் காங்கிரஸ்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள் நலமுடன் இருந்தால் மட்டுமே நமக்கு பாதிப்பு இருக்காது' என்று வாரிசுகள் தலைமைக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். தலைவரும் அதை ஆமோதிக்கும் மனநிலையில் இருக்கிறாராம்

தி.மு.க கையில் எடுத்த இட ஒதுக்கீடு விவகாரத்தால் அந்தக் கட்சியின் இமேஜ் உயர்ந்துள்ளதா?''

''அவர்கள் போட்ட கணக்குப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தி, உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பும் பெற்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் பா.ஜ.க தரப்பு கொஞ்சம் அப்செட்தான்.

குறிப்பாக, இதற்குப் பதிலடி கொடுப்பதில் சில சிக்கல்களும் பா.ஜ.க தரப்புக்கு இருந்துள்ளது. 'நாடு முழுவதுமுள்ள பிராந்தியக் கட்சிகள் தி.மு.க-வைப் போன்று இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகிவிடும்' என்று மத்திய அரசு யோசிக்கிறதாம். அதனால், தி.மு.க-வுக்கு எதிராக சித்தாந்தப் பிரசாரத்தை முடுக்கிவிடச் சொல்லியிருக்கின்றனர்.''

"...சீட் விவகாரத்தில் தி.மு.க ஏக கெடுபிடி காட்டுகிறதுபோலவே?''

''ம்! ஏற்கெனவே `இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்' என்கிற குமுறல் கட்சியின் சீனியர்களிடம் இருக்கிறது. `இப்போது 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே அதிக சீட் வழங்கப்படும்' என்கிற செய்தி ஒருபுறம் கசிகிறது. அதைத் தாண்டி, `உடல்நலத்துடன் உள்ளவர்களுக்கே சீட்' என்று முடிவு எடுக்கவுள்ளார்களாம்.

'அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள் நலமுடன் இருந்தால் மட்டுமே நமக்கு பாதிப்பு இருக்காது' என்று வாரிசுகள் தலைமைக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். தலைவரும் அதை ஆமோதிக்கும் மனநிலையில் இருக்கிறாராம். 45 வயதுக்குள் உள்ளவர்களுக்கு சீட் என்பது இந்த அடிப்படையில் உருவானதுதான் என்கிறார்கள்.”

''கட்சி கலகலத்துவிடுமே?''

''அது அவர்கள் பாடு. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் டெல்லி மேலிடப் பிரமுகருடன் பேசியிருக்கிறார். 'நமக்கு இருபது சீட்டைத் தாண்டி தி.மு.க-விடம் எதிர்பார்க்க முடியாது. மாற்று ஏற்பாட்டையும் வைத்துக்கொள்ளலாம். ராகுலிடம் சொல்லி ரஜினியுடன் நட்பை பலப்படுத்தச் சொல்லுங்கள்' என்றிருக்கிறார். தலைமைக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தாரம் அந்த மேலிடப் பிரமுகர்.''

''ஓ...''

''தமிழக அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குப் பேர் போனவர். அவரது அரசியல் மூவ்களைக் கண்டு தலைமையே அச்சப்படுகிறதாம். மத்தியிலுள்ள கஜானா பிரமுகர் வீட்டுச் சமையல்காரர் முதல் வேலையாட்கள் வரை இவர் ஏற்பாட்டில்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி அணியில் அமைச்சராக இருந்துகொண்டே பரப்பன அக்ரஹாரா சிறைக்குள்ளும் ஆட்களை வைத்து உதவிகளைச் செய்துவருகிறாராம். இந்த நெட்வொர்க்கைப் பார்த்து ஆளும்தரப்பே சற்று மிரண்டுதான் போயிருக்கிறது'' என்றார் கழுகார்.

வேலுமணி, அம்மன் அர்ச்சுனன், பழனிசாமி
வேலுமணி, அம்மன் அர்ச்சுனன், பழனிசாமி

''அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றனவே?''

- இதுகுறித்து கழுகார் பகிர்ந்த உள்ளரசியல் தகவல்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க https://bit.ly/2VRp3JV > மிஸ்டர் கழுகு: பதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க... https://bit.ly/2CZ6DjS

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு