Published:Updated:

திமுக கைக்குச் சென்றனவா வீடியோக்கள்?! - பாஜக-வுக்கு செக் வைக்கும் வியூகமா?

கமலாலயம்
கமலாலயம்

பாஜக நிர்வாகி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், பாஜக-வுக்கு செக் வைக்கும் வேலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சி இறங்கியிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாஜக நிர்வாகி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், பாஜக-வுக்கு செக் வைக்கும் வேலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சி இறங்கியிருப்பது தமிழக பாஜக-வுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக
பாஜக

தமிழக பாஜக நிர்வாகியாக இருந்த கே.டி.ராகவன் குறித்து சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக பாஜக தலைமை இது குறித்துத் தொடர் விசாரணையை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். வீடியோவை வெளியிட்ட மதன் பாஜக-விலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

ராகவன் விவகாரம்: `அண்ணாமலையுடன் பேசியதாக சில ஆடியோக்கள்!’ - அடுத்த வீடியோ வெளியிட்ட மதன்

இந்தநிலையில், தன்னை அண்ணாமலை நீக்கியது தவறு என்றும், அவரின் ஒப்புதல்படியேதான் வீடியோவை வெளியிட்டதாக மதன் ஆடியோ இணைப்புகளுடன் வீடியோ வெளியிட, அடுத்த பரபரப்பு பாஜக-வுக்குள் ஏற்பட்டது. இது குறித்து அண்ணாமலை தரப்பும் சில விளக்கங்களைக் கொடுத்துவருகிறது. ராகவன் தவிர மேலும் சில பாஜக தலைவர்களுக்கு வீடியோ விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மதன் கூறியிருப்பதால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்துவருகிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க தரப்பின் மூவ்களைத் தொடர்ந்து கண்காணித்துவந்தது தமிழக உளவுத்துறை. அண்ணாமலைக்கும் மதனுக்கும் இடையே விரிசல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியும் இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக பாஜக நிர்வாகிகள் குறித்த வீடியோக்கள் திமுக தலைமையின் கைக்குச் சென்றுவிட்டதாக இன்று காலை முதல் திமுக தரப்பில் பேச்சு எழுந்திருக்கிறது. உளவுத்துறை மூலம் இந்த வீடியோக்களைக் கைப்பற்றியுள்ள தி.மு.க தலைமை அதைவைத்து எதிர்காலத்தில் பாஜக-வுக்கு செக் வைக்கக்கூடும் என்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அதேசமயம் மதனுக்கு எதிராக பாஜக-வினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவரும் நிலையில் திமுக-வின் இந்த மூவ் எதற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் பாஜக-வினர் மத்தியில் எழுந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு