Published:Updated:

`இது கோட்சேவின் இந்தியாவா, காந்தியின் இந்தியாவா?'

'ரகுபதி ராகவ ராஜாராம்...' என்ற வரியில் இல்லை காந்தியின் தத்துவம். அதற்கு அடுத்து வரும், 'ஈஸ்வர் அல்லா தேரோ நாம்...' என்ற வரியிலேயே இருக்கிறது,

Gandhi
Gandhi

இரண்டு நிகழ்வுகள். இரண்டுமே செப்டம்பர் இருபதாம் தேதி நடந்தவை.

அன்று, டெல்லியில் இருக்கும் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டா டலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார் அமித்ஷா.

அதே நேரத்தில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'இந்த தேசத்தின் ஒருபகுதி மக்கள், இந்த அரசால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது காந்தியின் இந்தியாவா, இல்லை கோட்சேவின் இந்தியாவா?' என்று கண்ணீர் வழிய பேசிக்கொண்டிருந்தார், மெஹ்பூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி. இரவு நிகழ்ச்சி முடிந்ததும், மேடையிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றுவிட்டார் இல்திஜா. ஆனால், அவர் எழுப்பிய கேள்வி, அதே இடத்தில் அப்படியே உறைந்து நிற்கிறது... 'இது கோட்சேவின் இந்தியாவா, காந்தியின் இந்தியாவா?' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2n6BaUJ

சுமார் 25 ஆண்டுகள் இந்தியா மதவன்முறைகள் இல்லாமல் அமைதியாக இருந்தது. அவர் உயிர்த்தியாகம் நமக்கு அளித்த கொடை அது' என்று சொன்னார், ராமச்சந்திர குஹா.

காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவுவிழாக் கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும் சூழலில் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான் இது. அதற்குமுன்னால் நாம் அறியவேண்டியது, காந்தி காண விரும்பிய இந்தியா எது என்று.

இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் போராடியதைவிட, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கவே, காந்தி அதிகம் போராடினார். 'ராம ராஜ்ஜியம்' என்று சொன்னவர் அவர்தான். ஆனால், அவரது ராமன் அயோத்தியின் ராமன் அல்ல. அவரைப் பொறுத்தவரை, ராமன் என்பவன் ஒரு லட்சிய மனிதன் மட்டுமே. சத்தியத்தின் பெயரால் அமைகிற ராஜ்ஜியத்தையே அவர் 'ராமராஜ்ஜியம்' என்று வரையறுத்தார்.

ஆகவே, 'ரகுபதி ராகவ ராஜாராம்...' என்ற வரியில் இல்லை காந்தியின் தத்துவம். அதற்கு அடுத்து வரும், 'ஈஸ்வர் அல்லா தேரோ நாம்...' என்ற வரியிலேயே இருக்கிறது, அவரது தத்துவம். 'காந்தியின் ராமனை, அல்லா என்றும் அழைக்கலாம் ஜீசஸ் என்றும் அழைக்கலாம்' என்று எழுதியவர் வேறு யாருமல்ல, ராமச்சந்திர குஹா! அவரை விடவா காந்தியை அறிந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்?!

Gandhi
Gandhi

ஒரு நேர்காணலில் `காந்தியின் இறப்புக்குப் பிறகு, சுமார் 25 ஆண்டுகள் இந்தியா மதவன்முறைகள் இல்லாமல் அமைதியாக இருந்தது. அவர் உயிர்த்தியாகம் நமக்கு அளித்த கொடை அது' என்று சொன்னார், ராமச்சந்திர குஹா.

காந்தி இந்தியா சுதந்திரம் அடைவதற்காக உயிர் துறக்கவில்லை; மதவெறியர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் உயிர் துறந்தார். அந்த மதச்சார்பற்ற இந்தியாதான் 'காந்தியின் இந்தியா'வாக இருக்கமுடியும்.

- இந்தச் சிறப்புக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > எது காந்தியின் இந்தியா? https://www.vikatan.com/news/literature/which-is-the-india-gandhi-imagined-remembering-the-mahatma

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |