Published:Updated:

ஈரோடு: கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - இடைத்தேர்தல் திமுக கூட்டணிக்கு டஃப்பானதா?

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
News
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப்பூசல், அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்க்கத் தயாராக இருக்கும் லோக்கல் தி.மு.க-வினர் எனத் தங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என்று அ.தி.மு.க முகாமில் எதிர்பார்க்கப்பட்டது.

ஈரோடு: கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - இடைத்தேர்தல் திமுக கூட்டணிக்கு டஃப்பானதா?

காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப்பூசல், அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்க்கத் தயாராக இருக்கும் லோக்கல் தி.மு.க-வினர் எனத் தங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என்று அ.தி.மு.க முகாமில் எதிர்பார்க்கப்பட்டது.

Published:Updated:
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
News
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க, தனது கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கியது. த.மா.கா சார்பில் யுவராஜா போட்டியிட்டார். அதேபோலவே, தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு சீட்டை ஒதுக்கியிருந்தது. அதன்படி, காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்ட திருமகன் 67,300 வாக்குகளும், த.மா.கா வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 58,396 வாக்குகளையும் பெற்றனர். அதன்படி, வெறும் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்

2016 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க சார்பில் தென்னரசும், 2011-ல் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க வேட்பாளர் சந்திரகுமாரும் வெற்றி பெற்றனர். அதன்படி, அ.தி.மு.க கோட்டையாகக் கருதப்படும் ஈரோடு கிழக்குத் தொகுதியை த.மா.கா-வுக்குக் கொடுத்ததை, லோக்கல் அ.தி.மு.க-வினர் விரும்பவில்லை. இதனால், உள்ளடியில் இறங்கிய அ.தி.மு.க-வினரால், இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

பொதுவாகவே இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. ஆனாலும், நேரடியாக களமிறங்கி, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, இன்றுவரை நிறைவேற்றாமல் இருக்கும் மகளிருக்கான உரிமைத் தொகை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணித்தது எடப்பாடி தரப்பு.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அதேபோல, காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப்பூசல், அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்க்கத் தயாராக இருக்கும் லோக்கல் தி.மு.க-வினர் எனத் தங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என்று அ.தி.மு.க முகாமில் எதிர்பார்க்கப்பட்டது. இதனால், ஆளும் தி.மு.க-வுக்கு டஃப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், ``எங்கள் தரப்பிலிருந்தும் வேட்பாளரை இறக்குவோம்" என்று பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது, தி.மு.க கூட்டணிக்குச் சாதகமான சூழ்நிலையை தற்போது ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரக்கப்படுகிறது.

இது குறித்து ஈரோடு வட்டார அ.தி.மு.க-வினர் நம்மிடம் பேசுகையில், ``ஈரோடு கிழக்குத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டைதான் என்றாலும், ஆளுங்கட்சியை எதிர்த்து வெற்றி பெறுவது சாதாரண காரியமில்லை. இருப்பினும், காங்கிரஸுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று தேர்தல் வேலையைத் தெம்பாகத் தொடங்கினோம். ஆனால், எங்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த முடியாது என்பதால், பா.ஜ.க-வை ஓ.பி.எஸ் தூண்டி விடுகிறார். அவர்கள் நின்றாலும் பிரச்னை இல்லைதான்.

ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்
ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

ஆனால், ஓர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், அது ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும். அதேபோல, பா.ஜ.க தனித்து நிற்கவில்லை என்றாலும், எங்கள் தேர்தல் பணியிலுள்ள நுட்பங்கள், ஓ.பி.எஸ் அணியினருக்கும் தெரியும். அதை வைத்து தி.மு.க வெற்றியைத் தடுப்பதைக் காட்டிலும், மும்மடங்கு, எங்கள் வெற்றியைத் தடுக்க ஓ.பி.எஸ் அணி வேலை செய்யும். அது ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை வலுப்படுத்தும். இந்தப் பிரச்னை எதுவும் இல்லையென்றால், ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படும்" என்றனர்.