Published:Updated:

வைரலாகும் அறிக்கை: நா.த.க-விலிருந்து நீக்கப்பட்டாரா `சாட்டை’ துரைமுருகன்... உண்மை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்
கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்

நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அவதூறாகப் பேசி விமர்சனம் செய்ததாகப் புகார் எழுந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அவதூறாகப் பேசி விமர்சனம் செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழக காவல்துறையினர், இன்று அதிகாலை நாங்குநேரியில் வைத்து சாட்டை துரைமுருகனைக் கைதுசெய்தனர்.

தலைவர்கள் பற்றி அவதூறுப் பேச்சு; நாங்குநேரியில் தடுத்து நிறுத்தம் - சாட்டை துரைமுருகன் கைதான பின்னணி
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரை முருகன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரை முருகன்

இந்தக் கைது விவகாரம் ஊடகங்களில் வெளியான சில மணிநேரங்களில், `சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்' என்ற அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. 11.10.2021 என இன்றைய தேதியிடப்பட்ட அந்த அறிக்கையில் `திருச்சி மாவட்டம், திருச்சி மேற்குத் தொகுதியைச்சேர்ந்த அ.துரைமுருகன், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவர் கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். அவரின் கருத்துகளுக்கு இனி நாம் தமிழர் கட்சி பொறுப்பேற்காது. அவருடன் நாம் தமிழர் உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கையெழுத்துடன் இடம்பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் அறிக்கை
சமூக வலைதளங்களில் வைரலாகும் அறிக்கை

சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்படும் இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, இந்த அறிக்கை இப்போது வெளியானது அல்ல என்பதும், சாட்டை துரைமுருகன் இப்போது கட்சியில் இல்லை என்பதும் தெரியவந்தது. அதாவது, கடந்த மார்ச் (2021) மாதமே சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் எனவும், அப்போது வெளியான அறிக்கைதான் தற்போது தேதி எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுவருகிறது என்ற தகவலும் உறுதியாகியிருக்கிறது. மேலும், நேற்று நடந்த நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் ஒரு சிறப்பு அழைப்பாளராகவே அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு