Published:Updated:

`கறுப்புக்கொடி... காரை மறித்து போராட்டம்..!'- கம்பத்தில் பதறிய ரவீந்திரநாத் குமார்

ரவீந்திரநாத்குமாரின் காரை மறிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்.
ரவீந்திரநாத்குமாரின் காரை மறிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்.

இஸ்லாமிய அமைப்பினர், திடீரென சாலை நடுவே வந்து ரவீந்திரநாத்குமாரின் காரை மறித்தனர்.

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழாவை தேனி முழுவதும் அ.தி.மு.க-வினர் கொண்டாடிவருகிறார்கள். ஆண்டிபட்டி, சின்னமனூர் வரிசையில் இன்று கம்பத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டது.

ரவீந்திரநாத்குமாரின் காரை மறிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்.
ரவீந்திரநாத்குமாரின் காரை மறிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்.

முன்னதாக, ரவீந்திரநாத்குமார், பணிகள் முடிந்து தயார் நிலையில் இருக்கும் மதுரை - உசிலம்பட்டி இடையேயான அகல ரயில் பாதையைப் பார்வையிடச் சென்றார். உடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இருந்தார். நாளை நடைபெறவிருக்கும் சோதனை ஓட்டம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் ரவி. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கம்பத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவுக்கு வந்தார்.

கம்பம் நகருக்குள் ரவீந்திரநாத்குமாரின் கார் நுழைந்ததும், சாலை இருபுறமும் கறுப்புக்கொடியுடன் நின்றிருந்த இஸ்லாமிய அமைப்பினர், திடீரென சாலை நடுவே வந்து ரவீந்திரநாத் குமாரின் காரை மறித்தனர். கார் முன்னே நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். காரின் முன் பக்கம் கைகளால் வேகமாகத் தட்டினர். அவர்களைத் தடுத்த காவல்துறையினர், அனைவரையும் குண்டுக் கட்டாகத் தூக்கி, சாலையில் ஓரத்துக்கு கொண்டுவந்து ரவீந்திரநாத் குமாரின் காரை செல்ல வழி செய்தனர். இதனால், ஒரு கணத்தில் பதற்றமடைந்தார் ரவீந்திரநாத் குமார்.

`விலைபோகும் ஒன்றியக் கவுன்சிலர்கள்!' - பெரும்பான்மை கிடைத்தும் தேனி தி.மு.க திணறல்
ரயில்வே பணிகளை பார்வையிடும் ரவீந்திரநாத்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
ரயில்வே பணிகளை பார்வையிடும் ரவீந்திரநாத்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட தேனி ஊராட்சித் தலைவர்!- பழிவாங்கினாரா ஓ.பி.எஸ்?

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``தேனியில் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கம்பம் பகுதியில் ஒரு அ.தி.மு.க நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அதில் எம்.பி கலந்துகொள்கிறார் என்றால், அதற்கு ஏற்றாற்போல பாதுகாப்பு அம்சங்களை காவல்துறை திட்டமிட வேண்டும். எம்.பி கார் வருகிறது சாலை ஓரத்தில் போலீஸார் நிற்கின்றனர்.

அவர்களுக்குப் பின்னால் இருந்து கறுப்புக் கொடியோடு எம்.பி காரை மறிக்கின்றனர். அப்படியென்றால், அவர்கள் நின்றுகொண்டிருப்பது போலீஸாருக்குத் தெரியுமா? இதெல்லாம் ஒருபுறம் என்றால், தனிப்பிரிவு போலீஸார், தனிப்பிரிவு சி.ஐ.டி ஆகியோர் என்ன செய்துகொண்டிருந்தனர். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என முன்னரே அறிவுறுத்தியிக்கலாமே. இவை அனைததுக்கும் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு