Election bannerElection banner
Published:Updated:

சசிகலா, சுதாகரன், இளவரசிக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி

சசிகலா
சசிகலா

பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான 200 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது, பல்வேறு சொத்துகள், பணப் பரிமாற்றம் ஆகியவை குறித்த ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் வருமான வரித்துறையினர், பினாமி பெயர்களில் பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

அந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே போயஸ் கார்டனில் சசிகலா கட்டிவரும் புதிய கட்டடம் உள்ளிட்ட ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் முடக்கினர். 77 நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டிருந்த சொத்துகளும் அப்போது முடக்கப்பட்டிருந்தன.

`ஆர்.டி.ஐ-யில் என்னைப் பற்றிய தகவல்களை வழங்கக் கூடாது!’- கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

இந்தநிலையில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட சொத்துகளும் அடக்கம். இது தொடர்பான சம்மன் கர்நாடகா சிறையிலிருக்கும் சசிகலா உள்ளிட்டோருக்கு நேற்று கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுதாவூர் பங்களா
சிறுதாவூர் பங்களா

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில், வருமான வரித்துறை அவரது சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு