Published:Updated:

`ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்!’ - சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

சசிகலா

``2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் 1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள்.’’

`ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்!’ - சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

``2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் 1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள்.’’

Published:Updated:
சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவுக்கு இன்று (31.8.20) ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்த சசிகலா அதிர்ந்துபோய்விட்டாராம். அடுத்த வருடம் பிப்ரவரியில் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வர வேண்டும். சிறை நன்னடத்தை விதிகளின்கீழ் தண்டனைக் கால சலுகை, நீதிமன்றம் அறிவித்த அபதாரத் தொகை செலுத்த வேண்டிய பாக்கி என்றெல்லாம் சம்பிரதாயங்கள் ஒருபுறமிருக்க, சீக்கிரமே வெளியே வந்துவிடுவார் என்று சசிகலா தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு பா.ஜ.க மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அப்படி எண்ணத் தோன்றவில்லை.

காரணம், தமிழகத்தின் நடந்த, நடக்கவிருக்கும் ரெய்டுகள் அனைத்தையும் வருமான வரித்துறையின் டைரக்டர் ஜெனரல் (விசாரணை) அலுவலக அதிகாரிகள்தான் நடத்துவார்கள். இதற்கான அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்குகிறது. தற்போது டைரக்டர் ஜெனரலாக இருப்பவர், அடுத்த சில நாள்களில் பதவி உயர்வு பெற்று, மாற்ற்றலாகிப்போகிறார். அதற்கு முன்னர், கடந்த 28-ம் தேதியன்று சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து, அவை முடக்கபட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அந்தச் சொத்துகள் உள்ள குறிப்பிட்ட பகுதி பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கங்களுக்கும் நோட்டீஸ் போயிருக்கிறது.

சசிகலா
சசிகலா

சம்பந்தப்பட்ட பினாமி கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதேபோல் பினாமி சொத்துகள் தொடர்பாக சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது,`எனக்கும் அந்தச் சொத்துகளுக்கும் தொடர்பில்லை' என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக, தற்போது வேறு சில சொத்துகளைச் சுட்டிக்காட்டி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள. இதேபோல், மேலும் அடுத்தடுத்து பினாமி சொத்துகளைச் சுட்டிக்காட்டி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

`திடீரென ஏன் இந்த நோட்டீஸ்... இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?’ என்று அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இது பற்றி பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சசிகலா மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டபோது, நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அவை யாவும், பினாமி பெயரில் சசிகலா வாங்கியதாக வருமான வரித்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவுச் சட்டத்தின் கீழ் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக சசிகலாவுக்கும் பினாமி பிரமுர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அந்தச் சொத்துகள் இருக்கும் ஏரியாவிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கும் அதே நோட்டீஸ் வந்துள்ளது. உதாரணமாக, சென்னை, சென்னை புறநகரில் சொத்துககளை 'ஸ்ரீ ' என்று தொடங்கும் பினாமி கம்பெனியைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சசிகலாவின் உறவினர்கள். குறிப்பிட்ட அந்த கம்பெனிக்கு பெரிய பிஸினஸும் கிடையாது.

சசிகலா
சசிகலா

அந்த நிறுவனத்தின் பேனரில் வாங்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை இப்போது வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். போயஸ்கார்டனில், ஜெயலலிதா வீட்டுக்கு அருகே பிரபல கம்பெனி ஒன்றுக்குச் சொந்தமான 10 கிரவுண்ட் நிலத்தையும் எப்படியோ வாங்கியிருக்கிறார்கள். தாம்பரம், ஆலந்தூர், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏரியாக்களில் உள்ள இடங்களை வருமான வரித்துறையினர் முடக்கியிருக்கிறார்கள்.

அதேபோலவே, 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் 1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள். பெரம்பூரில் பிரபல சினிமா தியேட்டர், கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள பிரபல ரிசார்ட் உள்ளிட்ட ஒன்பது சொத்துகள் இருப்பதையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக, சசிகலா தரப்பில் மேல்முறையீட்டுக்குப் போயிருக்கிறார்கள். இருந்தாலும், அந்தச் சொத்துகளை தற்போது முடக்கியிருக்கிறார்கள். பத்திரப் பதிவுத்துறையினர் யாராவது இதற்கு உடந்தையாக இருந்தார்களா என்கிறரீதியிலும் விசாரித்துவருகிறார்கள் '' என்றார்கள்.

சசிகலா தரப்பில் அவரின் ஆதரவு பிரமுகர்களிடம் பேசியபோது, ``இவையெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். சசிகலா நிரபராதி என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிப்பார்'' எனபதோடு முடித்துக்கொண்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism