Published:Updated:

``காங்கிரஸ் பெரிய கட்சி; சிலர் வெளியேறலாம், வேறு கட்சியிலும் சேரலாம்!" - வேணுகோபால்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

கபில் சிபல் காங்கிரஸிலிருந்து இன்று விலகிய நிலையில், ``காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி. சிலர் கட்சியை விட்டு வெளியேறலாம்" என காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

``காங்கிரஸ் பெரிய கட்சி; சிலர் வெளியேறலாம், வேறு கட்சியிலும் சேரலாம்!" - வேணுகோபால்

கபில் சிபல் காங்கிரஸிலிருந்து இன்று விலகிய நிலையில், ``காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி. சிலர் கட்சியை விட்டு வெளியேறலாம்" என காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

Published:Updated:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் ஜி-23 தலைவர்களுள் ஒருவருமான கபில் சிபல், திடீரென காங்கிரஸிலிருந்து விலகியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 16-ம் தேதியே காங்கிரஸிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கட்சியில் வழங்கிவிட்டதாகக் கூறிய கபில் சிபல், உத்தரப்பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவோடு சுயேச்சையாக இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கபில் சிபல்-ன் விலகல் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேசிய வேணுகோபால், ``காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி. சிலர் கட்சியை விட்டு வெளியேறலாம். வெளியேறியவர்கள் வேறொரு கட்சிகளுக்கும் செல்லலாம். அவர் ஏற்கெனவே கட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கபில் சிபல்
கபில் சிபல்

மேலும் கட்சியின் விழுமியங்களைத் தான் உறுதியாக நம்பியதாக அவருடைய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதைத்தவிர வேறொன்றும் அதில் குறிப்பிடப்படவில்லை. அவருடைய நிலைப்பாட்டை அவர் சொல்லட்டும். பிறகு அதைப்பற்றி நான் கூறுகிறேன். அதுமட்டுமல்லாமல், கட்சியை விட்டு வெளியேறிய யாரையும் நான் குறை சொல்ல மாட்டேன். காங்கிரஸுக்கென பரந்த இடம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அதில் ஒரு பணி இருக்கும்" எனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து பா.ஜ.க-வை சாடிய வேணுகோபால், ``மத்திய அரசானது, அரசியல் எதிரிகளை ஒழிக்க, சி.பி.ஐ, உளவுத்துறை என அனைத்து அமைப்புகளையும் இந்த ஆட்சியில் பயன்படுத்துகிறது. மேலும் அவர்கள், இதுவரை எந்த அரசும் பயன்படுத்தாத முறைகளையெல்லாம் பயன்படுத்தி, மற்ற அரசியல் கட்சிகளை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இதனை முறியடிக்கக்கூடிய வலிமை காங்கிரஸுக்கு உள்ளது, அதற்கான தலைவர்களும் காங்கிரஸில் உள்ளனர்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism