Published:Updated:

2,000 கோடி ரூபாய் சொத்து விவகாரம்:`சசிகலாவுக்கு செக்!’- உற்சாகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கோஷ்டிகள்!

சசிகலா

``மறைந்த ஜெயலலிதாவை அட்டாக் பண்ணும் நோக்கில், அவருடைய வாரிசுதாரர்கள் என்கிற அடிப்படையில் நோட்டீஸின் பிரதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.’’

2,000 கோடி ரூபாய் சொத்து விவகாரம்:`சசிகலாவுக்கு செக்!’- உற்சாகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கோஷ்டிகள்!

``மறைந்த ஜெயலலிதாவை அட்டாக் பண்ணும் நோக்கில், அவருடைய வாரிசுதாரர்கள் என்கிற அடிப்படையில் நோட்டீஸின் பிரதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.’’

Published:Updated:
சசிகலா

சசிகலாவின் வருகை விவகாரம் தமிழக அரசியலில் கிராஃப் ஏறி, இறங்கி வருகிறது. அக்டோபர் 8-ம் தேதி நிலவரப்படி அவருக்கு இறங்குமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். ``மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு ஏராளமான ரெய்டுகளை நடத்தி, நிறைய ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. அதையெல்லாம் அரசியல்ரீதியாக எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். `சசிகலா விடுதலை’, `பி.ஜே.பி-யுடன் டீல் முடிந்துவிட்டது’ என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில்தான், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் போயஸ் கார்டனிலுள்ள சசிகலாவுக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட 65 சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.

கொடநாடு எஸ்டேட்டில் நோட்டீஸ்
கொடநாடு எஸ்டேட்டில் நோட்டீஸ்
கே.அருண்

அடுத்து எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் இருவரின் பனிப்போர் முடிந்த நாளான அக்டோபர் 7-ம் தேதியன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் தொடர்புடைய 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றை வருமான வரித்துறை முடக்கியது. இவையெல்லாம் தானாகவே துறைரீதியான நடவடிக்கை என்று சொல்லப்பட்டாலும், முடக்கப்பட்ட காலகட்டம், அரசியல் சூழ்நிலைகளை கவனிக்கும்போது தானாக நடந்ததாகத் தெரியவில்லை. சசிகலாவை ஆதரிக்கும் கட்சிப் பிரமுகர்களுக்குக் காட்டப்படும் ரெட் சிக்னல் போலத்தான் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பி.ஜே.பி-யின் ஆதரவு சசிகலாவுக்கு இல்லை என்பதை சிம்பாலிக்காக உணர்த்தியிருக்கிறார்கள். சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு சேனல்களில் பி.ஜே.பி மேலிடத் தலைவர்களிடம் தூது போனார்கள். அவையெல்லாம் வொர்க்-அவுட் ஆகவில்லை என்பதைத்தான் வருமான வரித்துறையின் நடவடிக்கை காட்டுகிறது. சசிகலாவைப்போலவே அ.தி.மு.க-விலுள்ள அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களின் இடத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றிப் பாதுகாத்துவருகிறது'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

 இளவரசி
இளவரசி

தற்போதைய நடவடிக்கை பற்றி மன்னார்குடியிலுள்ள சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் பேசினோம். ``ஆகஸ்டு 31-ம் தேதியன்று, ஒன்பது இடங்களிலுள்ள, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது வருமான வரித்துறை. எங்களுடைய கேள்வி இதுதான்.`அந்த கம்பெனிகளில் சசிகலா ஷேர் வைத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதாகக் குற்றம்சாட்டுவது எப்படி?’

பினாமி என்று சசிகலாவை எப்படிச் சொல்கிறார்கள்? சட்டரீதியாக இதை நாங்கள் சந்திக்க முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.ஜே.பி-யின் அரசியல் காய்நகர்த்தலுக்கு யாராவது முரண்டுபிடித்தால், ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் விஸ்வரூபம் எடுக்கும் என்பதற்கு தற்போதைய வருமான வரித்துறை நடவடிக்கைகள் உதாரணம். தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்ற வேண்டுமானால், அதற்கு இடையூறாக இருக்கும் அரசியல் பிரமுகர்கள் மீது எந்த நேரமும் பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகிய துறைகள் பாயலாம். இது ஒன்றும் புதிதல்ல. மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும்கூட இதே பாணியைப் பலமுறை கையாண்டிருக்கிறது.

சுதாகரன்
சுதாகரன்

அக்டோபர் 7-ம் தேதியன்று மீண்டும் கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதாகச் சொல்கிறார்கள். அவற்றின் உரிமையாளர் என்று சுதாகரனையும் இளவரசியையும் காட்டுகிறார்கள். இதனுடன் சசிகலாவையும் தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால், நகலை தீபா, தீபக் ஆகிய இருவருக்கும் அனுப்பியிருக்கிறார்கள். ஏன் இவர்களுக்கு அனுப்பினார்கள்? அப்படியானால், மறைந்த ஜெயலலிதாவை அட்டாக் பண்ணும் நோக்கில், அவருடைய வாரிசுதாரர்கள் என்கிற அடிப்படையில் நோட்டீஸின் பிரதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.

`சுதாகரனும் இளவரசியும் ஜெயலலிதாவின் பினாமிகள். இருவரும் சொத்துகளின் உரிமையாளர்களாக அடையாளம் காட்டப்பட்டிருந்தாலும், பினாமிகள்' என்று வருமான வரித்துறையினர் முடிவு செய்திருக்கிறாரகள். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா உயிருடன் இல்லை. அதனால், அவரை உச்ச நீதிமன்றமே விட்டுவிட்டது. ஆனால், வருமான வரித்துறை ஜெயலலிதாவைக் குற்றவாளி என்ற கோணத்தில் தற்போது நடவடிக்கை எடுத்துவருகிறது. இதையெல்லாம் நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்றார்.

சிறுதாவூர் பங்களா
சிறுதாவூர் பங்களா
வி.ஸ்ரீனிவாசுலு

சொத்து முடக்கப்பட்டது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``எந்த நேரமும் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிற அதிகாரம் வருமான வரித்துறைக்கு சட்டப்படி வழங்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா 1991-96 காலகட்டங்களில் தமிழக முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு. ஜெயலலிதா தரப்பினர் சசிகலா, சுதாகாரன், இளவரசி பெயர்களில் பல சொத்துகளை வாங்கியிருக்கிறார்கள். அப்படி வாங்கப்பட்ட சொத்துகளில் கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களாவும் வருகின்றன. ஜெயலலிதாவின் பணத்தை வைத்துதான் இரண்டு சொத்துகளும் வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

எனவேதான், தற்போது பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் நாங்கள் அந்த இரண்டு சொத்துகளையும் முடக்கியிருக்கிறோம் இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. துறைரீதியான நடவடிக்கையின் ஒரு கட்டம்தான் இது. எங்கள் குற்றச்சாட்டை எதிர்த்து எதிர்த்தரப்பினர் நிச்சயமாக நீதிமன்றம் போவார்கள். அப்போது பல உண்மைகள் வெளிவரும்'' என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism