Published:Updated:

தினகரன் ஒதுக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள்: ஆடு புலி ஆட்டம் முடிந்துவிட்டதா? #OnThisDay

இரட்டை இலை

தினகரனை எடப்பாடி தரப்பு ஒதுக்கிவைத்து இன்றோடு சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? தினகரன் மீண்டும் தலையெடுப்பாரா?

தினகரன் ஒதுக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள்: ஆடு புலி ஆட்டம் முடிந்துவிட்டதா? #OnThisDay

தினகரனை எடப்பாடி தரப்பு ஒதுக்கிவைத்து இன்றோடு சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? தினகரன் மீண்டும் தலையெடுப்பாரா?

Published:Updated:
இரட்டை இலை

தினகரன் குடும்பத்தை எடப்பாடி ஒதுக்க முடிவுசெய்த நாள் இன்று!

2017 ஏப்ரல் 18-ம் தேதி. ஆம், இதே நாளில் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திற்குப் பிறகுதான் ''கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து தினகரன் குடும்பத்தை ஒதுக்குகிறோம்'' என அறிவிக்கிறார்கள்.

சசிகலா , தினகரன்
சசிகலா , தினகரன்

இன்றோடு சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார் சசிகலா. முதல்வர் பதவியை நோக்கி சசிகலா முன்னேற... தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். 2017 பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் கூடியது. அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் ஆவதற்காக பன்னீர்செல்வம், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 48 மணி நேரத்தில், திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 'தர்மயுத்தம்' தொடங்கினார். 'அவமானப்படுத்தப்பட்டேன். கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்'' என்று சொல்லி சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். இதனால் சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க பிரிந்தது.

தர்மயுத்தம்
தர்மயுத்தம்

கூவத்தூரில் எடப்பாடியை முதல்வராகத் தேர்வுசெய்துவிட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார் சசிகலா. 'ஆட்சிக்கு எடப்பாடி... கட்சிக்கு டி.டி.வி. தினகரன்' எனத் திட்டம் வகுத்துக் கொடுத்துவிட்டுப் போனார். தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியையும் சசிகலா தந்தார். அதன்பின், தினகரன் தலைமையில் செயல்பட்டது அ.தி.மு.க. இன்னொரு பக்கம், பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருந்தார்.

தினகரன் ஒதுக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள்: ஆடு புலி ஆட்டம் முடிந்துவிட்டதா? #OnThisDay

ஜெயலலிதா இறந்ததால் காலியான ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் வேட்பாளர் ஆக... உடனே பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளர் ஆக்கப்பட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால் தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கும் அளித்தது தேர்தல் ஆணையம்.

சசிகலா, பன்னீர்
சசிகலா, பன்னீர்

தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றால், அவர் அடுத்து முதல்வர் ஆக முற்படுவார் என்பது தெரிந்தும், அவருக்காக எடப்பாடி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மட்டுமல்ல, மொத்த அமைச்சரவையும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரனுக்காக ஓட்டு கேட்டார்கள்.

தினகரனுக்கு ஓட்டு கேட்ட எடப்பாடி
தினகரனுக்கு ஓட்டு கேட்ட எடப்பாடி

இந்த நேரத்தில்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித் துறை 2017 ஏப்ரல் 7-ம் தேதி சோதனை நடத்தியது. நாலரை கோடி ரூபாய் ரொக்கம், 86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அள்ளினார்கள்.

சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆதாரங்களுடன் தப்பி ஓடியவரைப் பிடித்தார்கள். ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தற்கான ஆதாரம் சிக்கியது. இதனால், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்கும் தினகரன்
தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்கும் தினகரன்

அதுவரையில் தினகரனுக்கு விசுவாசியாக இருந்தவர்கள், எங்கே தடம் மாற ஆரம்பித்தார்கள்? அதற்கு விதை போட்டது மத்திய அரசு நடத்திய ரெய்டு. 2017 ஏப்ரல் 7-ம் தேதி, விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி தரப்பை வளைக்க ஆரம்பித்தது மத்திய அரசு.

அதுவரையில் பி.ஜே.பி-யை விமர்சித்துக்கொண்டிருந்தவர்கள், அதன்பிறகு அவர்களைப் பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலை ஏற்பட தினகரனும்கூட காரணம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சசிகலா குடும்பத்தில் உள்ள சிலரின் எதிர்ப்பையும் மீறி தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டதாகப் புகார் எழுந்தது.

ஆர்.கே.நகர்
ஆர்.கே.நகர்

பி.ஜே.பி அரசின் நெருக்கடி எடப்பாடி ஆட்சிக்கு ஏற்பட்டது. பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது அவருக்கு ஆதரவாக இருந்தது, பி.ஜே.பி. பன்னீர் நினைத்த நேரத்தில் எல்லாம் மோடியைப் போய் பார்க்க முடிந்தது. இவ்வளவு நெருக்கம் இருந்தபோதும் பன்னீரால் எடப்பாடி ஆட்சியை எதுவும் செய்ய முடியவில்லை. கடைசியில், எடப்பாடி ஆட்சியை பி.ஜே.பி-தான் பணியவைத்தது.

மோடியுடன் எடப்பாடி
மோடியுடன் எடப்பாடி

2017 ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசுக்கு ஒத்துப்போகும் முடிவை எடுத்தது எடப்பாடி தரப்பு. அடுத்த நாள் ஏப்ரல் 18-ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''கட்சியைக் காப்பாற்றுவதற்காக சசிகலா அணியை விலக்கி வைக்கிறோம். கட்சியைக் காப்பாற்றவும் இரட்டை இலையை மீட்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். இனி, எக்காலத்திலும் தினகரன் குடும்பத்தைச் சேர்க்கவே மாட்டோம்.. வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமென்றால், டி.டி.வி. தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒட்டு மொத்த விருப்பம். அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடுத்த முடிவு'' என்றார்.

தினகரனுடன் எடப்பாடி
தினகரனுடன் எடப்பாடி

''துணை பொதுச்செயலாளர் தினகரனுக்குத் தெரியாமல் கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லை'' என்று சொன்னார் வெற்றிவேல். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. எடப்பாடி, தினகரன், பன்னீர் என அ.தி.மு.க மூன்று பிரிவுகள் ஆகின. இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தினகரன் மீது பாய்ந்தது.

இரட்டை இலையை முடக்கக் காரணமாக இருந்தது பன்னீர்செல்வம். அதனை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் சிக்கியவர் தினகரன். ஆனால், 'இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தினகரனை ஒதுக்கிவைக்கிறோம்' என எடப்பாடி தரப்பு சொன்ன காரணம் முரணாக இருந்தது. பன்னீர் மீது பாய வேண்டியவர்கள் பயத்தின் காரணமாக தினகரன் மீது பாய்ந்தார்கள்.

தினகரன் ஒதுக்கப்பட்டு இன்றோடு மூன்றாண்டுகள்: ஆடு புலி ஆட்டம் முடிந்துவிட்டதா? #OnThisDay

உடனே எதிர்வினை ஆற்றிய தினகரன், ''யாருக்கோ அவர்கள் பயப்படுகிறார்கள்'' என்றார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறையில் சில காலம் இருந்துவிட்டுத் திரும்பிய தினகரன், தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். தினகரனை ஒதுக்கிய எடப்பாடி, பன்னீரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள பி.ஜே.பி-யால் நிர்பந்திக்கப்பட்டார்.

''எடப்பாடி ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது'' எனச் சொன்ன பன்னீருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் எடப்பாடி. 2017 ஆகஸ்ட்டில் பன்னீரை கட்சியில் சேர்த்துக்கொண்டார்கள். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளான ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் 7 மாதங்களுக்குப் பிறகு இணைந்தன. துணை முதல்வர் ஆனார் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடி பன்னீர் இணைப்பு
எடப்பாடி பன்னீர் இணைப்பு

இத்தனையும் பார்த்துக்கொண்டு தினகரன் சும்மா இருப்பாரா? பழி தீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராகத் திரும்பினார்கள். உடனே அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 பேரும் எம்.எல்.ஏ பதவிகளைப் பறிகொடுத்து நின்றார்கள். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நேரத்தில்தான் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரித் துறை மாபெரும் ரெய்டு நடத்தியது.

அதைச் சமாளித்த நேரத்தில்தான், ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்குள் இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு அளித்தது தேர்தல் ஆணையம். அ.தி.மு.க வரலாற்றில் முதன்முறையாக சுயேச்சையான தினகரனிடம் தோற்ற வரலாறு எழுதப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆகி, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மூஞ்சியில் கரியைப் பூசினார் தினகரன்.

தினகரன்
தினகரன்

அதன் பிறகு, அ.தி.மு.க-வை கைப்பற்ற முயன்ற தினகரனின் முயற்சி பலிக்கவில்லை. 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தனியாகச் செயல்பட்டுவந்தார். அவர் நடத்திய கூட்டங்களுக்கு அதிகமான தொண்டர்கள் திரண்டார்கள். அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவெடுக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது பொய்த்துப்போனது. 5.38 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது.

பன்னீர், தினகரன், எடப்பாடி
பன்னீர், தினகரன், எடப்பாடி

அ.தி.மு.க-வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்கிற வாதம் வலுவிழந்தது. தென் மாவட்டங்களைத் தாண்டி பெரிய வாக்கு சதவிகிதத்தை வட மாவட்டங்களில் பெற முடியவில்லை. 95 சதவிகித அ.தி.மு.க தொண்டர்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய தினகரனால், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஓரிரு தொகுதிகள் தாண்டி வேறெங்கும் பெரியதாகப் பிரிக்க முடியவில்லை.

OPS EPS
OPS EPS

தினகரனை ஒதுக்கிவைத்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், தினகரனின் ஆட்டம் முடிந்துவிட்டதா? அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தெரிந்துவிடும்.