Published:Updated:

``மனசுக்குள்ள நிறைய ஒன்லைன்ஸ் ஓடுது!" - மனம் திறக்கும் தீபா

தீபா
தீபா

லாக்டௌன் தந்த மாற்றமா இல்லை அரசியலை விட்டு வெளியேறியதால் வந்த ஜென் நிலையா தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் அதிர அதிர சிரித்தபடி செம கூலாக பதில் சொல்கிறார் தீபா. அவருடனான பேட்டியிலிருந்து...

``லட்சோப லட்ச(!) தொண்டர்கள் ஆதரவோட ஒரு கட்சியை ஆரம்பிச்சீங்க. அந்தக் கட்சியோட பேராச்சும் இப்ப ஞாபகம் இருக்கா?"

"ஹாஹா... எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை. எப்படிங்க மறப்பேன்? ஆனா, அந்தப் பெயரை சும்மா வைக்கல. பதினைஞ்சு பேர் வெவ்வேற பெயர்களைப் பரிந்துரை செஞ்சு அதுல நான் டிக் பண்ணின பேருங்க அது!"

``இப்பவும் நினைச்சா ஆச்சர்யப்பட வைக்கிற அளவுக்கு உங்க அத்தையுடனான மலரும் நினைவுகள் ஏதாச்சும் இருக்கா?"

"நிறைய இருக்குங்க. என் பேர்கூட அவங்க வெச்சதுதான். சின்னவயசுல நிறைய பேசுவாங்க. 'ஏய் இந்த ஹேர்க்ளிப் நல்லா இருக்கே... எங்கே வாங்குனே?'ன்னுகூட கேப்பாங்க. 91-ல அவங்க சி.எம் ஆனப்போ நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூப்பிட்டுப் பேசுவாங்க."

தீபா, மாதவன்
தீபா, மாதவன்

``இப்ப உள்ள அரசியல் சூழலை கவனிக்கிறீங்களா? 2021 தேர்தல் முடிவு யாருக்கு சாதகமா இருக்கும்? உங்களுக்கு ஆபர் எதுவும் வருதா?"

"நீங்க வேற... என்னோட வாழ்க்கையில ஒரு ரெண்டு வருஷத்தை வீணாக்கிட்டோம்னு நினைச்சுட்டு இருக்கேன். பச்சைக் காக்கா பறக்குதுன்னா ஆமா பறக்குதுன்னு சொல்லத் தெரியாது எனக்கு! அதனால எனக்கு இனி அரசியலே போதும்டா சாமின்னு முடிவெடுத்துட்டேன். அப்புறம் நீங்க கேட்குறதால கட்சிகளைப் பத்திப் பொதுவா சொல்றேன். அ.தி.மு.க-ல வெளிப்படைத்தன்மை இல்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கவே இல்லை. கமல் கட்சி பற்றி இந்தத் தேர்தல்லதான் என்னன்னு தெரியும். அவ்ளோதான் நான் கவனிச்சதுல பேசமுடியும்."

``லாக்டௌன்ல ஸ்ட்ரெஸ்ஸைத் தவிர்க்க என்ன படம் பார்த்தீங்க?"

"என்னைப் பத்தி வந்த ட்ரோல்ஸ் பார்த்தேன். நகைச்சுவையா இருந்தா ரசிக்க வேண்டியதுதானே! க்ளாசிக் மூவீஸ் நிறைய பார்த்தேன். வெப் சீரிஸ்லாம் அலர்ஜிங்க. ஓடிடி-ல ரிலீஸான படம் எல்லாத்தையும் இனிமேதான் பார்க்கணும்.

நிறைய புக்ஸ் படிச்சேன். ரெண்டு வருஷமா வறண்டுபோயிருக்குற கிரியேட்டிவிட்டி இப்ப தோண ஆரம்பிச்சிருக்கு. மனசுக்குள்ள நிறைய ஒன்லைன்ஸ் ஓடுது. நிறைய எழுதணும்னு பிளான் போட்டு வெச்சிருக்கேன். சமைக்கிறது, சாப்பிடுறதுன்னு இருந்தேன் அதனால ஒர்க் அவுட் பண்ணணும். இனிமேதான் வெளில டிராவல் பண்ணணும். என்னோட 2.0 வெர்ஷன் நிச்சயம் ஆச்சர்யமா இருக்கும்!"

தீபா
தீபா

``ஒருநாள் தூங்கி எந்திரிச்சா வீட்டுவாசல்ல கரைவேட்டிக்காரங்க நீங்க அரசியலுக்கு வரணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்க. என்ன பண்ணுவீங்க..?"

"தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கங்கன்னு சொல்வேன். (சிரிக்கிறார்) சும்மா சொன்னேன். அட்வைஸ் பண்ணி அன்பா அனுப்பி வைப்பேன்!"

> ``ஜெயலலிதாவோட அண்ணன் மகளான உங்களை அப்போலோ வாசல்ல பார்த்து ஷாக் ஆன ஆட்களில் நானும் ஒருவன். உங்களை உள்ளே விடாமத் தடுத்து நிறுத்துனதுதான் நீங்க ஒரு அரசியல்வாதியா உருவாக முதல் காரணமா?"

> ``உங்களை யாராச்சும் மிரட்டினாங்களா...?"

> ``நீங்க இப்படிச் சொன்னதும் வீட்டுக்கு முன்னாடி நின்ன கூட்டம் சும்மாவா விட்டுது?"

> ``இதைத் தோல்வின்னு சொல்லலாமா?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "அரசியலால நிம்மதி போச்சு!" - What next தீபா? https://bit.ly/2GEXAWu

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு