Published:Updated:

`கைவிடப்படும் `அமராவதி’; ஆந்திராவுக்கு 4 தலைநகரங்கள்?’ - ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி

andhra chief minister
andhra chief minister

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் எண்ணமான அமராவதியை ஆந்திர தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தை நீண்டகாலமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் அம்மாநிலத்துகான பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில், அமராவதியை மாநிலத்தின் தலைநகராக அமைப்பதற்கான அனைத்து திட்டங்களையும் கைவிட்டு, அதற்குப் பதிலாக மாநிலத்தை உள்ளடக்கிய 4 பகுதிகளைத் தலைநகராக உருவாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பான திட்டத்தை மத்திய அரசிடம், ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாக, பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி டி.ஜி.வெங்கடேசன் கூறியுள்ளார்.

jagan mohan reddy
jagan mohan reddy

வடக்கு கடற்கரை மண்டலத்தைச்சேர்ந்த விஜயநகரம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா, தெற்கு கடலோரத்தில் உள்ள குண்டூர் மற்றும் கடப்பா ஆகிய நான்கு இடங்களையும் தலைநகராக மாற்றுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 4 தலைநகரங்களுக்கும் பிரதிநிதிகளாக, 5 துணை முதல்வர்களை இந்த ஆண்டுக்குள் ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இதன்மூலம், பரவலாக்கப்பட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு துணைமுதல்வர்கள் உறுதியாக இருப்பார்கள் என அவர் நம்புகிறார். முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் எண்ணமான அமராவதியை ஆந்திர தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தை நீண்டகாலமாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது.

அம்மாநில அமைச்சர் போட்ஸா சத்யநாராயணா, அண்மையில் பேசுகையில், ``அமராவதி மாநிலத்தின் தலைநகராக இருப்பது பாதுகாப்பற்றது. ஏனெனில், அது வெள்ளபாதிப்புகளுக்குள்ளாகும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கான பல மடங்கு தொகை செலவிட வேண்டியிருக்கும்” என்று கூறியிருந்தார்.

YSR congress chief
YSR congress chief

முன்னாள் தெலுங்கு தேசம் கட்சி 28,000 விவசாயிகளிடமிருந்து 33,000 ஏக்கர் நிலத்தை பெற்று மாநிலத் தலைநகரை உருவாக்குவோம் என்றும், அதன் வளர்ச்சியிலிருந்து வரும் பணத்தை ஆண்டுதோறும் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறிக் கூறி ஒப்பந்தம் போட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அந்த அமராவதி தலைநகராக்கும் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் அது அம்மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே, ``மாநிலத் தலைநகரை உருவாக்க 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதில் 38,000 கோடி தெலுங்கு தேசம் அரசாங்கத்தால் செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். கடந்த மாதம், உலக வங்கி மற்றும் ஏசியன் இன்ஃபிராஸ்ட்ரக்சர் இன்வஸ்மென்ட் வங்கி அமராவதி திட்டத்துக்கு 500 மில்லியன் டாலர் பணத்தைக் கடனாகக் கொடுக்கும் திட்டத்தை ரத்து செய்தது.

Chandrababu Naidu
Chandrababu Naidu

ஆந்திர பிரதேசம் 2.59 லட்சம் கோடி பொதுக்கடனைப் பெற்று, ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாயை சேவைக்கட்டணமாகச் செலுத்தி வருகிறது. அமராவதி திட்டத்தை கைவிடுவது அங்கிருக்கும் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ராயலசீமா போன்ற மற்ற பகுதியில் உள்ள மக்கள் புதிய தலைநகர் திட்டத்தை வரவேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள ஜெகன்மோகன் ரெட்டி முன்னெடுக்க உள்ள இந்தத் திட்டம் தொடர்பாக வாக்கெடுப்புகள் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு