Published:Updated:

திருச்சி: `இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் பட்ஜெட்!' - ஜவாஹிருல்லா விமர்சனம்

ஜவாஹிருல்லா

``கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது” - ஜவாஹிருல்லா

திருச்சி: `இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் பட்ஜெட்!' - ஜவாஹிருல்லா விமர்சனம்

``கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது” - ஜவாஹிருல்லா

Published:Updated:
ஜவாஹிருல்லா

``மத்திய அரசு மக்களுக்கான அரசு அல்ல; கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அப்போ இது யாருக்கான அரசு என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்" என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார் ஜவாஹிருல்லா.

மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம்
மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, ``சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏழு மண்டலங்களாகப் பிரித்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாக இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கோடிஸ்வரர்களுக்கு இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் வகையிலேயே இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. நரேந்திர மோடியின் ஆட்சி மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடிய ஆட்சியாகத்தான் இருக்கிறது.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

செஸ் வரியை விதித்திருக்கிறார்கள். இதனால் மாநில அரசுக்கு வரும் நிதி குறையும். எட்டுவழிச் சாலையை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், இவர்கள் வேண்டுமென்றே அதை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

இதிலிருந்தே தெரிகிறது... இது மக்களுக்கான அரசு அல்ல என்று. மகாத்மா காந்தி வேலை உறுதி வாய்ப்பு திட்டம் குறித்துச் சரியான அறிவிப்பு இல்லை. வேலைவாய்ப்பை அளிக்கும் பட்ஜெட்டாக இது இல்லை. மோடி அரசாங்கம் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகத் திட்டமிட்டு இறங்கியிருக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் முதலாளிகளுக்கான பட்ஜெட்டாகவே இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த கல்யாண ராமன், முகமது நபியை விமர்சித்துப் பேசியிருப்பது தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியிருப்பதாகவே இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறு பேசிவரும் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், ஆளுநர் அது குறித்து எதுவும் பேசாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தி.மு.க கூட்டணியில் கடந்த தேர்தலைவிட மனித நேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism