Published:Updated:

`சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சந்தேகங்களை எழுப்புகிறது!’ - ஜவாஹிருல்லா

பேரா.ஜவாஹிருல்லா
பேரா.ஜவாஹிருல்லா

`வருகிற 27-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். இந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது’ - ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சியின் தென்கிழக்கு மண்டலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ம.ம.க-வின் நிலைப்பாடு பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பேரா.ஜவாஹிருல்லா
பேரா.ஜவாஹிருல்லா

செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ``அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்கு எதிராகவே மத்திய, மாநில அரசுகள் திட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சசிகலா: `நுரையீரல் தொற்று; கடும் நிமோனியா காய்ச்சல்!’ - மருத்துவ அறிக்கை

மதுரையில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளே அதற்கு உதாரணம். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி மாசி வீதிகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் குண்டும் குழியுமாக இருக்கிறது.

பொதுக்குழுக் கூட்டம்
பொதுக்குழுக் கூட்டம்

இந்தத் திட்டத்தின் செயல்பாடு பற்றி தொகுதி எம்.பி-யும், திட்ட ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவருமான சு.வெங்கடேசனிடம்கூட தகவல் தெரிவிப்பதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் 14 இடங்களில் நடந்துவரும் வேலைகள் அரைகுறையாக இருக்கின்றனன.

பேரா.ஜவாஹிருல்லா
பேரா.ஜவாஹிருல்லா

வருகிற 27-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். இந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அவர் வெளியே வருவது தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கு பாதிப்பை உண்டாக்கும். வெளி மாநில முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் திடீரென்று தமிழகத்தில் அரசியல் செய்ய வந்தால், இங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு