அலசல்
Published:Updated:

சசிகலா ஒரு...

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

ஓவியம்: மேரி

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சசிகலா குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் அடித்த ஒருவரி, அதிரடி கமென்ட்டுகள் இங்கே!

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்!

மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது!

அ.தி.மு.க தொண்டன் இந்தக் கொள்ளைக் கும்பலை ஒருபோதும் ஏற்க மாட்டான்!

அ.தி.மு.க என்ற யானைமீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!

சசிகலா போன்ற கொசு, ஈக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்!

சசிகலா ஒரு தீயசக்தி, சசிகலா ஒரு மாயை, சசிகலா வெறும் பில்ட்-அப்தான்!

தி.மு.க-வின் ‘பி’ டீம்தான் சசிகலா! சசிகலா ஒரு நிராகரிக்கப்பட்ட சக்தி!

சசிகலா புரட்சித்தாய் இல்லை, ஊழல்தாய்! அம்மா அம்மாதான்... மற்றவரெல்லாம் சும்மாதான்!

ஜெயலலிதா வீட்டுக்குப் பணிசெய்ய வந்தவர்தான் சசிகலா!

அம்மா இருந்தபோதே ஓரங்கட்டப்பட்டவர்தான் சசிகலா!

நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன?

சசிகலா ஒரு...

சசிகலா, கடலில் கரைத்த பெருங்காயம்போலக் காணாமல்போவார்!

கடல் வத்தி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வத்தி செத்ததாம்!

செஞ்சிக்கோட்டையில் ஏறியவனெல்லாம் ராஜா தேசிங்கு ஆகிவிட முடியாது!

வானத்திலிருந்து குதித்த அவதாரம்போலத் தன்னை, `புரட்சித்தாய்’ என்கிறார் சசிகலா!

கொஞ்சம்விட்டால், `அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன்’ என்பார் சசிகலா!

அ.தி.மு.க என்ற எஃகு கோட்டையை எந்தக் கரையானாலும் அழிக்க முடியாது!