Published:Updated:

'ரஜினியின் 'பாட்ஷா' மேடைப்பேச்சுக்கு என்னிடம் ஜெ. காட்டிய கோபம்!" - ஆர்.எம்.வீ பகிர்வுகள்

விழா முடிந்து மறுநாள் காலையிலேயே, போயஸ் தோட்டம் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன். அங்கே ஜெயலலிதா இல்லை. இன்டர்காமில்தான் பேசினார்.

r m veerappan
r m veerappan

தந்தை பெரியாரின் உதவியாளர், எம்.ஜி.ஆரின் 'சத்யா மூவீஸ்' நிர்வாகி, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் முன்னணி அமைச்சர், ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளர், ரஜினியின் முதல் அரசியல் பேச்சுக்கு மேடையமைத்துக் கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். 94வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் மூத்த அரசியல் தலைவரைச் சந்தித்தேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2nnxXjw

"புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை தான் என் சொந்த ஊர். படிக்கிற காலத்திலேயே கலைத்துறைமீது ஈடுபாடு. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு டி.கே.எஸ். நாடகக் குழுவில், நடிகராக இணைந்தேன். கூடவே நாடக நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டேன். 1945-ல் பெரியார் அறிமுகம் கிடைத்து, அவரின் உதவியாளரானேன். அப்போதுதான் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் எனப் பெரிய தலைவர்களோ டெல்லாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது'' என்றவர், எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான நெருக்கத்தைப் பற்றிப் பேசும்போது மட்டும் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்.

"இணை, நட்பு, தோழமை, பாசம் என ஒவ்வொரு உறவுக்கும் பெயர்கள் உண்டு. ஆனால், 1953-ல் எம்.ஜி.ஆரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தபிறகு அவரோடு இணைந்து பயணித்த காலகட்டத்தை, நாங்கள் இருவரும் அண்ணன் - தம்பியா, தோழமையா, நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

அதன்பிறகு, அமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன், கட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டேன்

ரஜினிகாந்த் நடித்து வெளியான 'பாட்ஷா'தான், சத்யா மூவீஸின் கடைசிப் படம்'' என்றவர், சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர ஆரம்பித்தார். "பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவின்போது, 'தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது' என்ற பொருள்பட ரஜினிகாந்த் பேசிவிட்டார். அமைச்சர் பொறுப்பில் இருந்த நானும்கூட இதைச் சாதாரண ஒரு பேச்சாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. விழா முடிந்து மறுநாள் காலையிலேயே, போயஸ் தோட்டம் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன். அங்கே ஜெயலலிதா இல்லை. இன்டர்காமில்தான் பேசினார்.

'என்ன... நேத்து ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கிறார்... நீங்க மேடையில் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்களா? அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கிறார். நீங்க அதைக் கேட்டுக்கிட்டிருந்தீங்க... நீங்கதான் யார் என்னை அட்டாக் பண்ணிப் பேசினாலும் ரசிப்பீங்களே... உங்களுக்கு எம்.ஜி.ஆரைப் பாராட்டினாதானே பிடிக்கும்...' என்று ஆவேசமாக வெடித்தவர், என் பதிலுக்குக் காதுகொடுக்காமல், ரிஸீவரை வைத்துவிட்டார். அதன்பிறகு, அமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன், கட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டேன்."

r m veerappan
r m veerappan

- அதன்பின் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள், ரஜினியுடன் வலுவான தொடர்பும், அவரது அரசியல் நகர்வும், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருடனான மறக்க முடியாத தருணங்கள் என அனைத்தையும் மனம் திறந்து ஆர்.எம்.வீரப்பன் பகிர்ந்தவற்றை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > “எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா?” வெடித்த ஜெயலலிதா https://www.vikatan.com/news/politics/exclusive-interview-with-r-m-veerappan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான

325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |