Published:Updated:

`நீ தான் தினமும் ஜெயலலிதா சமாதியை மலர்களால் அலங்கரிக்கணும்!'- இளைய மகனிடம் பணியை ஒப்படைத்த ஓபிஎஸ்

ந.பொன்குமரகுருபரன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி கேட்பாரற்று, தூசிபடிந்து இருப்பதை, கடந்த 28-ம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதனைப் படித்துவிட்டு, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஒரு தீர்வை முன்வைத்திருக்கிறார்.

விகடன் செய்தி எதிரொலியாக அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி
விகடன் செய்தி எதிரொலியாக அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி

சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். சமாதியின் பின்புறம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி உள்ளது. சுமார் 50 கோடி ரூபாயில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுவரும் நிலையில், அவரது சமாதியின் மேல் வெறும் சிமென்ட் பூசப்பட்டு, பெயருக்கு நான்கைந்து ரோஜா மலர்களை வைத்துவிட்டுச் செல்வது நமது கவனத்துக்கு வந்தது.

``ஒரு கூடை பூவைக்கூடவா வைக்க முடியாது?" - ஜெயலலிதா சமாதியில் கொதிக்கும் தொண்டர்கள்
ஜெ. சமாதியைச் சுத்தம் செய்து மரியாதை செய்யும் தீபக்
ஜெ. சமாதியைச் சுத்தம் செய்து மரியாதை செய்யும் தீபக்
ஜெ. சமாதியில் நினைவிடப் பணி நடைபெறுகிறது
ஜெ. சமாதியில் நினைவிடப் பணி நடைபெறுகிறது

தனது பிறந்தநாளில் ஆசி பெறுவதற்காக ஜெ. சமாதிக்குச் சென்ற, அவரது அண்ணன் மகன் தீபக், சமாதியில் தூசி படிந்து, மலர்கள் கருகிப் போய் கவனிப்பாரற்று இருந்ததை நம்மிடம் தெரிவித்தார். நமது நேரடி விசிட்டிலும் இதனை அறியமுடிந்தது. அங்கு வந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், “கருணாநிதியின் சமாதியைத் தினமும் மலர்களால் அலங்கரிக்கின்றனர். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் தலைவியாகப் போற்றப்படும் அம்மாவின் சமாதியை அநாதையாகப் போட்டுள்ளனர். தினமும் மலர் அலங்காரம் செய்வதற்கு கட்சியில் பணமா இல்லை? எங்களை அனுமதித்தால்கூட, தினமும் எங்களால் இயன்ற அளவுக்கு மலர்மாலைகளால் பூஜித்துவிடுவோம்” என்று கொந்தளித்தனர்.

கட்சியிலிருந்தே இரண்டு பேரைப் பணியமர்த்தி, தினமும் மலர் அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். அம்மாவுக்குச் செய்வதைவிட வேறென்ன பெருமை இருக்கப்போகிறது?" என்றார்.
ஜெயபிரதீப்

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி விகடன் இணையதளத்தில் நாம் வெளியிட்ட இச்செய்தி, அ.தி.மு.க. வட்டாரங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்ஸின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. மிகவும் மனவருத்தமடைந்த ஓ.பி.எஸ்., உடனடியாக ஜெ. சமாதிக்குத் தினமும் மலர் அலங்காரம் செய்யும்படியும், அதற்கான செலவுகளைத் தாமே ஏற்பதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சமாதியைப் பார்வையிட்டு, மலர் அலங்காரம் செய்த ஜெயபிரதீப்
ஜெயலலிதா சமாதியைப் பார்வையிட்டு, மலர் அலங்காரம் செய்த ஜெயபிரதீப்

ஜெ. சமாதியைத் தினமும் அலங்கரிப்பதற்கான பணியை மேற்பார்வையிடுமாறு, தனது இளைய மகன் ஓ.பி.ஜெயபிரதீப்பிடம் ஒப்படைத்துள்ளார், ஓ.பி.எஸ். இதனைத் தொடர்ந்து நேற்று, ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த ஜெயபிரதீப், உடனடியாகச் சமாதியைச் சுத்தம் செய்யவைத்து, மின்னல் வேகத்தில் மலர்களால் அலங்கரித்துவிட்டார்.

இதுகுறித்து ஜெயபிரதீப்பிடம் பேசினோம். "ஜெயலலிதாவின் சமாதியில் பூ அலங்காரம் செய்வது வழக்கம்தான். கவனிப்பாரற்ற நிலையில் நினைவிடம் இல்லை. கட்டடப் பணிகள் நடைபெறுவதால், வெளிநபர்களை அனுமதிக்காமல் இருந்தனர். தற்போது கட்சியிலிருந்தே இரண்டு பேரைப் பணியமர்த்தி, தினமும் மலர் அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். ஜெயலலிதாவுக்குச் செய்வதைவிட வேறென்ன பெருமை இருக்கப்போகிறது" என்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதி

ஒருநாளைக்கு 60 கிலோ பூக்களைக் கொண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதி அலங்கரிக்கப்படுகிறது. எட்டுப் பணியாளர்கள் மூன்று மணிநேரத்தில் அலங்காரப் பணியை முடித்துவிடுகின்றனர். இதற்காக, ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதே போன்றதொரு அலங்காரத்தை இனி தினமும் ஜெ. சமாதியில் எதிர்பார்க்கலாம். விகடன் செய்தி எதிரொலியாக, அ.தி.மு.க. தலைமையே நேரடியாக களமிறங்கி, ஜெயலலிதாவின் சமாதிக்கும், தொண்டர்களின் உணர்வுக்கும் உரிய மரியாதை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.