சினிமா
Published:Updated:

எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!

ஜீவஜோதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீவஜோதி

வழக்கு நடந்துக்கிட்டிருந்த காலத்துல இருந்தே ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேரணுங்கிற எண்ணம் இருந்துச்சு.

தன் கணவரின் கொலைக்காக மிகநீண்ட சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்றவர் ஜீவஜோதி. வாழ்வின் பெரும்பகுதியை வழக்கு, விசாரணையெனக் கழித்த ஜீவஜோதி, தற்போது தஞ்சாவூரில் வசிக்கிறார். சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவருக்கு, உடனடியாக மாவட்டத் துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!

“திடீரென அரசியல் பிரவேசம்... பி.ஜே.பியை ஏன் தேர்வு செஞ்சீங்க?”

“வழக்கு நடந்துக்கிட்டிருந்த காலத்துல இருந்தே ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேரணுங்கிற எண்ணம் இருந்துச்சு. ஆனாலும், என் கணவர் கொலைக்கு நீதி கிடைச்சபிறகுதான் எல்லாம்னு இருந்தேன். நிறைய காலத்தை இழந்துட்டேன். இதுதான் பொருத்தமான நேரம்னு நினைக்கிறேன். அதுமட்டு மல்லாம, பாதிக்கப் பட்ட நிறைய பெண்கள் என்கிட்ட உதவிகேட்டு வர்றாங்க. தனி மனுஷியா நின்னு அவங்களுக்கு எந்த உதவியும் செய்யமுடியாது. அரசியல்ல இருக்கிறது ஒரு பலம். நான் ஜெயலலிதா அம்மாவுக்கு நிறைய நன்றிக்கடன்பட்டிருக்கேன். கடுமையான மன அழுத்தத்துல இருந்த நேரத்துல அவங்கதான் நம்பிக்கையா இருந்தாங்க. வழக்குக்கும் நிறைய உதவிகள் செஞ்சாங்க. இப்போ, நான் உயிரோட இருக்கிறதுக்கே அவங்கதான் காரணம். ஆனா அ.தி.மு.க மேல ஈடுபாடு வரலே. இப்போ இருக்கிற தலைவர்களில் மோடிதான் நம்பிக்கையா இருக்கார். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தயங்காம முடிவெடுக்கிறார். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார். அதனால அந்தக் கட்சியில் சேர்ந்தேன்.”

எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!

“வழக்கு நடந்த காலங்களை எப்படிக் கடந்து வந்தீங்க?”

“இப்போ நினைச்சாலும் பதற்றமாத்தான் இருக்கு. ராஜகோபால் மேல வழக்கு பதிவு செஞ்சு விசாரணை ஆரம்பிக்கிறதுக்குள்ள நிறைய பிரச்னைகளைச் சந்திச்சேன். ரெண்டு பெரிய மனிதர்கள் சமாதானம் பேசினாங்க. ‘பெரிய தொகை தர்றோம்... சாட்சி சொல்ல வராதே’ன் னாங்க. அதுக்கு நான் சம்மதிக்காததால, மிரட்ட ஆரம்பிச்சாங்க. வெளியில நடமாடவே பயமா இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா தைரியத்தை வளர்த்துக் கிட்டேன். தப்பு பண்ணின மனுஷங்களே தைரியமா நடமாடுறப்போ நமக்கென்ன வந்திடும். இன்னொரு பக்கம் தப்பு தப்பா செய்திகளைப் பரப்புனாங்க. உடைஞ்சுபோற சமயத்துல குடும்பத்துல உள்ளவங்கதான் ஆதரவா இருந்தாங்க. ஆரம்பத்துல நிறைய அழுதேன். ஒரு கட்டத்தில அழுது பயனில்லைன்னு தெரிஞ்சுக் கிட்டேன். அழுகிறதை மொத்தமா விட்டுட்டு கோபத்தையும் வைராக்கியத்தையும் வளர்த்துக் கிட்டேன். ஒருவேளை, நான் சாட்சி சொல்லப் போகாம இருந்திருந்தா வாழ்க்கை வளமா இருந்திருக்கும். ஆனா, இப்படி தைரியமா உங்க முன்னாடி நிக்கமுடியாது. மனசாட்சி உறுத்திக்கிட்டே இருக்கும். இப்பவும்கூட என்னைப் பலபேரு மோசமா பேசத்தான் செய்றாங்க. ஆனா, அதையெல்லாம் கடந்துபோகப் பழகிட்டேன்...”

எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!
எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!

“நீங்கள் எதிர்பார்த்த நீதி் கிடைச்சதா நினைக்கிறீங்களா?”

“உண்மையைச் சொல்லணும்னா நான் எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை. ரொம்பக்காலம் போராடி யிருக்கேன். பணத்தை வெச்சு எல்லாத்தையும் வளைக்கப் பார்த்தாங்க. உச்சநீதிமன்றம் வரைக்கும் வழக்கைக் கொண்டு போனாங்க. ஆனா, குற்றம் செஞ்சவர் ஜெயிலுக்குப் போகவேயில்லை. ‘ஒருநாள்கூட உங்களால ஜெயில்ல இருக்க முடியாதா’ன்னு நீதிபதியே கேட்டாரு. 18 வருஷப் போராட்டம்... வாழ்க்கையோட கால்பாகத்தை நீதி வாங்குற துக்காக இழந்திருக்கேன். குற்றம் செஞ்சது உண்மைன்னு உறுதி செய்யப்பட்டிருக்கு. ஆனா, தப்பு செஞ்சவர் தண்டனையே அனுபவிக்க லேங்ககிறதை ஏத்துக்க முடியலே. பாதிக்கப்பட்ட என்னோட இடத்துல இருந்து பாத்தாதான் இந்த வேதனை புரியும்.”

எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!
எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!
எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!

“இப்போ வாழ்க்கை எப்படி இருக்கு?”

“இப்போதான் வாழ்க்கைமேல நம்பிக்கை வந்திருக்கு. இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர் கணவர் தண்டபாணி. எல்லா கஷ்டங்களிலிருந்தும் என்னை மீட்டது அவர்தான். பையன் பேரு பவின் கிஷோர். அவன்தான் இப்போ உலகமா இருக்கான். எழாம் வகுப்பு படிக்கிறான். அம்மாவும், தம்பியும் கூட இருக்காங்க. எல்லாத்தையும் மறந்து தஞ்சாவூர்ல வந்து செட்டிலானப்போ பிழைப்புக்கு என்ன செய்றதுன்னு கேள்வி வந்துச்சு. எனக்கு டெய்லரிங் தெரியும். சின்னதா டெய்லரிங் ஷாப் ஆரம்பிச்சோம். இப்போ அது பெரிசா வளர்ந்திருக்கு. கல்யாணப் பெண்களுக்கான ஜாக்கெட், டிரஸெல்லாம் தச்சு, பல ஊர்களுக்கு அனுப்புறோம். 15 பேர் வேலை செய்றாங்க. என் வீட்டுக்காரர், மசாலாப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றார். என் அப்பா ராமசாமி பேர்ல தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில, ஓர் அசைவ உணவகம் நடத்துறோம். அதை என் அம்மா பார்த்துக்கிறாங்க. அரசியல் வேற... பரபரப்பா வாழ்க்கை ஓடுது.”

எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!
எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!
எதிர்பார்த்த நீதி எனக்குக் கிடைக்கலை!

“அரசியல்ல இறங்கிட்டீங்க... அடுத்து?”

“எந்தத் திட்டமும் இல்லை. தலைவர்கள் வழிநடத்துறபடி செயல்படுவேன். தருகிற வேலைகளை ஏத்துக்கிட்டு செய்வேன். பாதிக்கப்பட்டவங்களுக்குப் பக்கபலமா இருப்பேன்.”