Published:Updated:

`நான் ஆல்ரெடி பி.ஜே.பி-யில் சேர்ந்திட்டேன்; நானாக எதையும் சொல்லக் கூடாது!’- ஜீவஜோதி #Video

ஜீவஜோதி
ஜீவஜோதி

``ஆல்ரெடி பி.ஜே.பி-யில் சேர்ந்துட்டேன். இருந்தாலும் முறைப்படி சின்னதா பார்மாலிட்டிஸ் ஒன்று செய்யலாம் என பேசிக்கொண்டிருக்கின்றனர். அது முறைப்படி எல்லாம் நடக்கட்டும் அப்புறம் அதைப்பற்றி விரிவாகப் பேசலாம்'' என்றார்.

சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தியவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில் நீதியைப் பெறுவதற்காக அவர் நடத்திய போராட்டங்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் உதவி செய்தார். தற்போது தஞ்சாவூரில் புதிதாக ஹோட்டல் ஒன்றைத் திறந்த கையோடு தமிழக பா.ஜ.க-விலும் தீவிரமாகச் செயல்பட இருக்கிறார் ஜீவஜோதி. இந்த நிலையில், அவரை சந்தித்துப் பேசினோம்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

முதலில் ஃபேஷன் டைலரிங்.. தற்போது ஹோட்டல் தொழிலும் இறங்கியுள்ளீர்கள்?

மகளிர் தையலகம் சின்னதாக தொடங்கியதுதான். ராஜகோபால் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இதற்குப் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைத்தவர் அப்போதைய அசிஸ்டென்ட் கமிஷனர் ராமச்சந்திரன் அய்யாதான். சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த டைலரிங் இடப்பற்றாக்குறையால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தற்போது 40 பேர் வேலை செய்யும் அளவில் வளர்ந்து நிற்குது.

எல்லாரும் செய்வதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணி ஆரி உலகம் எனப்படும் ஃபேஷன் டைலரிங் என்கிற மணப்பெண்களுக்கான பிரத்யேக உடைகள் தயாரித்து வருகிறோம். இந்த வகை உடைகள் சென்னையில் பிரபலமாகப் போய்கிட்டு இருக்கு. இங்கு செய்வதற்கு ஆள் இல்லை. தஞ்சாவூரில் தொடங்கும்போது முதலீடு, வேலையாட்கள், அவர்களின் சம்பளம் என ரொம்ப கஷ்டப்பட்டு பலவற்றை சமாளித்து ஆரம்பித்தோம். சென்னையில் இது தொடர்பாக நிறைய தெரிந்துகொண்டேன். என் கணவர் மற்றும் குடும்பத்தினர் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.

வேலையாட்களுக்கு தனியாக வீடு எடுத்து தங்கவைத்து, நல்ல சம்பளம் கொடுத்து இதை நடத்திவருகிறேன். இதில் நல்ல பெயர் வாங்கியதால் நார்மலான உடைகள் தைக்க மாட்டோம் என பலர் நினைத்துக்கொண்டனர். ஆனால், அப்படியில்லை; நார்மலான உடைகளும் தைத்துத் தருகிறோம். மணப்பெண்ணுக்கான பிரத்யேக ஆடைகள் தைப்பதற்கு உரிய யூனிட் இல்லாததால் பல பெண்கள் கமிஷன் அடிப்படையில் ஆர்டர் பெற்று எங்களிடம் தருகிறார்கள். அவற்றையும் செய்து தருகிறேன். இதற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

அப்பா பெயரில் ஹோட்டல் தொடங்கியுள்ளீர்கள்?

என் அம்மாவோட ஆசைக்காக சிறிய அளவில் ஹோட்டல் தொடங்கினேன். நல்லா போய்கிட்டு இருந்தது. ஆனால், இடவசதி உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தது. அம்மா அசைவ உணவுகளை விரும்பி பிரமாதமாக சமைப்பாங்க. அதனால் அப்பா பெயரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே பெரிய அளவில் தொடங்கியிருக்கேன். அதற்கு ரொம்ப நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கணவருடன் ஜீவஜோதி
கணவருடன் ஜீவஜோதி

சரவணபவன் ராஜகோபால் தண்டனையை அனுபவிக்காமல் இறந்தது பெரிய வருத்தம் எனக் கூறியிருந்தீர்களே?

இந்த வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். தீர்ப்பு தாமதமாக வந்தாலும் வரவேற்கக்கூடிய, சிறப்பான தீர்ப்பு கிடைத்தது. தமிழக காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் என்றைக்கும் நன்றி சொல்லக்கூடிய தீர்ப்பு. ராஜகோபாலைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் தற்போது உயிருடன் இல்லை அதனால் அதைப் பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது.

ஜெயலலிதாவை ரொம்பப் பிடிக்கும் என பல இடங்களில் பேசி வந்தீர்களே?

ஜெயலலிதா அம்மாவின் அழகு, நடிப்பு எனக்கு சின்ன வயசில் இருந்தே அனைத்தையும் பிடிக்கத் தொடங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். விவரம் தெரிந்த பிறகு அரசியல், அப்புறம் அவரின் ஆளுமை என தன்னையறியாமல் அவரை இன்னும் பிடிக்கத் தொடங்கியது. அப்புறம் என்னுடைய வழக்கில் அவர் எந்த அளவுக்கு சப்போர்ட்டாக இருந்து உதவி செய்தாங்க என எல்லோருக்கும் தெரியும். அதனால் அவங்க மீது பெரிய மரியாதை உண்டு. ரொம்பப் பிடிக்கும்.

பி.ஜே.பி-யில் சேரப் போறதாக பரபரப்பாக பேச்சு அடிபடுகிறதே?

ஆல்ரெடி பி.ஜே.பி-யில் சேர்ந்துட்டேன். இருந்தாலும் முறைப்படி சின்னதா பார்மாலிட்டிஸ் ஒன்று இருக்கு செய்யலாம் என பேசிக்கொண்டிருக்கின்றனர். அது முறைப்படி எல்லாம் நடக்கட்டும் அப்புறம் அதைப்பற்றி விரிவாகப் பேசலாம்.

கருப்பு.முருகானந்தம்தான் பி.ஜே.பி-யில் சேர்வதற்கு காரணமா?

கருப்பு.முருகானந்தம் அண்ணன் என் கணவருக்கு பழக்கம் அவர் மூலமாக சேர்ந்தேன்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

தனியாக பா.ஜ.க-வில் சேரும் நீங்கள் விழா நடத்துவீர்களா?

`அதை அண்ணன் கிட்டதான் கேட்க வேண்டும். நீங்க எதையாவது கேட்டு நானாக எதையும் சொல்லக் கூடாது’ என சிரித்தபடியே பேட்டியை முடித்தார்.

`நான் ஆல்ரெடி பி.ஜே.பியில் சேர்ந்து விட்டேன்!’- ஜீவஜோதி சிறப்பு பேட்டி #Jeevajothi #BJP #Politics

Posted by Vikatan EMagazine on Tuesday, December 17, 2019
அடுத்த கட்டுரைக்கு