Published:Updated:

`ஜெயலலிதாதான் இன்ஸ்பிரேஷன்!' -தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமான ஜீவஜோதி

தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஜீவஜோதி.

சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை நடத்தியவர். இவர் விரைவில் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும் முக்கியப் பதவி கிடைக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவிவருகிறது.

 ஜீவஜோதி
ஜீவஜோதி

பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தார் ஜீவஜோதி. தற்போது ரஹ்மான் நகரில் வசித்து வரும் ஜீவஜோதி, பவின் என்ற பெயரில் அசைவ ஹோட்டலை நடத்தி வந்தார். அந்த ஹோட்டலையும் பின்னாளில் நிறுத்திவிட்டார். தற்போது, ஆரி உலகம் என்கிற பெயரில் மகளிர் தையலகம் ஒன்றை நடத்தி வருவதுடன் மணப்பெண்களுக்கான ஆடை டிசைனிங் பணிகளையும் கவனித்து வருகிறார்.

ஆடை வடிவமைப்பில் கொடிகட்டிப் பறந்து வரும் ஜீவஜோதி, பா.ஜ.க-வில் சேரவிருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜீவஜோதியின் தையலகம்
ஜீவஜோதியின் தையலகம்

இதுகுறித்து ஜீவஜோதி தரப்பில் விசாரித்தோம். ``அவரின் கணவர் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த உதவியை ஜீவஜோதியால் என்றைக்கும் மறக்க முடியாது. அவருடைய ஆளுமைத்திறனைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதிப்பார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், `அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார்' எனக் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசிவந்தனர். மகளிர் தையலகத்தின் மூலம் தயாராகும் ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இதன்மூலம், நல்ல வருமானமும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஹோட்டல்
ஹோட்டல்

இப்போது தன்னுடைய அப்பா ராமாசாமியின் பெயரில் தஞ்சாவூர் திருச்சி சாலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே அசைவ ஹோட்டல் ஒன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கிறார். இதை ஜீவஜோதியின் அம்மாவும் தம்பியும் கவனிக்க உள்ளனர். தன் அம்மாவுக்காகவே இந்த ஹோட்டலை வைத்துக் கொடுத்திருக்கிறார். இந்த ஹோட்டலை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்பது அவரின் கனவு.

இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளாகவே முக்கியமான கட்சி ஒன்றில் ஜீவஜோதியைச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்தனர். ஆனால், அப்போதிருந்த சூழ்நிலையில் அவரால் சேர முடியவில்லை. இதற்கிடையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தரப்பினர் ஜீவஜோதியை அணுகிப் பேசியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசினார் ஜீவஜோதி.

ஜீவஜோதி
ஜீவஜோதி

ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இந்த நிலையில் கருப்பு முருகானந்தம் முயற்சியால் விரைவில் பா.ஜ.க-வில் இணைய இருக்கிறார்" என்கின்றனர் விரிவாக.

ஜீவஜோதிடம் பேசினோம். ``தமிழக பா.ஜ.க-வில் இணைய இருப்பது உண்மைதான். கடந்த மாதமே உறுப்பினராகச் சேர்ந்துவிட்டேன். வானதி சீனிவாசன் மேடம் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார். எனது கணவரின் உறவுக்காரர் கருப்பு முருகானந்தம். அவர் முன்னிலையில் வரும் வாரத்தில் கட்சியில் முறைப்படி இணைய உள்ளேன்" என்றார் உற்சாகமான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு