Published:Updated:

ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை: `நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்!'

இன்று நீட் தேர்வு குறித்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையை அரசு வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டமன்றத் தேர்தலின்போதே திமுக-வின் நீட் ரத்து குறித்த பிரசாரம் பெரிதும் கவனிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியமைத்ததும், `நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவோம்' என திமுக அளித்த வாக்குறுதி குறித்த கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத் தொடங்கின. இதற்கிடையில்தான் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்த கமிட்டி ஒன்றை உருவாக்கினர்.

2021-2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்கிற மாணவர் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்த நாள் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் `நீட் விலக்கு சட்ட மசோதா' தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். பல்வேறு மாநில முதல்வர்களையும் நீட் தேர்வுக்கு எதிராக போராட அழைப்புவிடுப்பதாகக் கூறினார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இன்று நீட் தேர்வு குறித்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், `நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். தனிச் சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும்.

ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை
ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை

நீட் ரத்துக்கு சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ சேர்க்கையில் சமூகநீதி உறுதி செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழு அறிக்கையைக் காண...

download
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு