Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: அன்புமணி `அக்னி டாட்டூ' சர்ச்சை; ``தமிழக பா.ஜ.க-வின் நயன்தாரா!''

கார்த்தியாயினி - அன்புமணி
கார்த்தியாயினி - அன்புமணி

'கமலாலயமே கதி' என்று கிடந்த வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கும் மாநிலச் செயலாளர் நாற்காலி பகிரப்பட்டுள்ளது.

வன்னியர் சமுதாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் அக்னிக் கலசத்தைத் தன் வலது கை புஜத்தில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

சமீபத்தில் நடைபெற்ற பா.ம.க இணையவழிக் கூட்டத்தில், அன்புமணியே அக்னி டாட்டூவை வெளிப்படையாகக் காட்டினார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதால், தொண்டர்கள் உணர்ச்சிவசத்தில் ஆரவாரம் செய்கிறார்கள்.

இதை கவனித்த, தருமபுரி தொகுதி எம்.பி-யான செந்தில்குமார் (தி.மு.க) ட்விட்டரில் ராமதாஸையும் அன்புமணியையும் கடுமையாக விமர்சித்து கருத்துகளை எழுதிவருகிறார். ''சின்ன வயசில் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் தழும்பு இருக்கும். உங்கள் பெற்றோர் சாதி மறுப்பு, சமூகநீதி சொல்லிக் கொடுக்கலைனா மனதிலுள்ள அசுத்தம் இப்படித்தான் பெரிய தழும்பாகக் கையில் வரும். இந்தச் சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம் மருத்துவரே'' என்று செந்தில்குமார் பதிவிட்டிருந்த 'ட்வீட்' பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அன்புமணி
அன்புமணி

''அக்னிக் கலசத்தை 'தழும்பு' என்று சிறுமைப்படுத்தி விமர்சனம் செய்த செந்தில்குமார், வன்னியர் சமுதாயத்தின் துரோகி. இதற்குக் காரணமான மு.க.ஸ்டாலினை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது'' என்று குறிப்பிட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வன்னியர் சங்கம் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.

தி.மு.க., பா.ம.க இடையேயான மோதல் முற்றியிருப்பதால், அந்த மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்த விரிவான பார்வையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2CCu2HD > அன்புமணி கையில் அக்னி டாட்டூ... - சர்ச்சை கிளப்பிய தி.மு.க எம்.பி! https://bit.ly/2CCu2HD

''தமிழக பா.ஜ.க-வின் நயன்தாரா!''

திராவிடக் கட்சிகளால் தூக்கியெறியப்பட்டவர்களுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது, தமிழக பாரதிய ஜனதா.

'கமலாலயமே கதி' என்று கிடந்த வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கும் மாநிலச் செயலாளர் நாற்காலி பகிரப்பட்டுள்ளது. கார்த்தியாயினியுடன் சேர்த்து ஒன்பது பேர் மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சுவாரஸ்யம் என்னவென்றால், கார்த்தியாயினியை 'தமிழக பா.ஜ.க-வின் நயன்தாரா' என்று வர்ணிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது, பொதுத்தளத்தில் கேலிக்கூத்தாகவும் மாறியிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில், 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்த பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவையே கலங்கடித்து, சிக்கலில் மாட்டிக்கொண்டவர்தான் இந்த கார்த்தியாயினி. வேலூர் மேயராக இருந்த கார்த்தியாயினி, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நீதிபதி குன்ஹா வைக் கண்டித்து மாமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றினார்.

கார்த்தியாயினி
கார்த்தியாயினி

பிறகு, நீதிபதியைக் களங்கப்படுத்திய குற்றத் துக்காக, பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்து கார்த்தியாயினிக்குத் தலையில் குட்டுவைத்தது நீதிமன்றம்.

- இவர் பா.ஜ.க-வில் ஐக்கியமான பின்னணியுடன், 'நயன்தாரா' என்று அழைக்கப்படுவது தொடர்பாக அவர் கூறியதை உள்ளடக்கிய செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2Ejlk1n > ''தமிழக பா.ஜ.க-வின் நயன்தாரா!'' - கமலாலயத்தைக் கலக்கும் கார்த்தியாயினி https://bit.ly/2Ejlk1n

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு