Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: எடப்பாடியின் 'சாணக்கியத்தனம்', முத்துக்குமாரசாமி வழக்கு, பறிபோகிறதா ராஜராஜன் சிலை?

எடப்பாடி
எடப்பாடி

தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் குரலுக்கு ஒரு மதிப்பு இருந்தது. எடப்பாடி அரசின் முயற்சிகள் எல்லாமே 'ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கணும்' என்பதாகவே இருக்கின்றன

ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்குப் பிறகு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த முதல்வர், எடப்பாடிதான். ஆனால், சேலம் - சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு அவரின் சொந்த மாவட்டத்திலிருந்தே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் பின்வாங்க வில்லை. நிலங்களில் போலீஸ் படையுடன் அதிகாரிகள் இறங்குவது, விவசாயிகளை விரட்டி விரட்டி கைதுசெய்வது என கொடுங்காட்சிகள் அரங்கேறின. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம், அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் ஆகிய இரண்டையும் ஒடுக்குவதற்கு எடப்பாடி அரசு எடுத்தது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசு எடுத்ததில்லை. 'எப்போது இறுக்கம் காட்ட வேண்டும், எப்போது இறங்கி வர வேண்டும்' என்பது ஜெயலலிதாவுக்குத் தெரிந்திருந்தது.

ஜூ.வி பைட்ஸ்: எடப்பாடியின் 'சாணக்கியத்தனம்', முத்துக்குமாரசாமி வழக்கு, பறிபோகிறதா ராஜராஜன் சிலை?

ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துவந்த உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின்திட்டம், நீட் தேர்வு போன்ற எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளித்தது எடப்பாடி அரசுதான். தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் குரலுக்கு ஒரு மதிப்பு இருந்தது. எடப்பாடி அரசின் முயற்சிகள் எல்லாமே 'ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கணும்' என்பதாகவே இருக்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதை மத்திய அரசு நிராகரித்த விஷயத்தைக்கூட வெளியில் சொல்லாமல் வைத்திருந்தார்கள். இப்போதுகூட குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறும்போது, 'மக்கள்தொகை கணக்கெடுப்பில் தாய்மொழி, தாய் மற்றும் தந்தை பிறந்த இடம், பிறந்த தேதி போன்றவற்றை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்' என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலுமே 'ஆதரவு' அல்லது 'எதிர்ப்பு' என உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், நடுவில் புகுந்து போவதையே தன் சாணக்கியத்தனமாக நினைக்கிறார் எடப்பாடி.

... இந்த மூன்று ஆண்டுகளை ஓட்டினார் எடப்பாடி? உண்மையில் அவர், சாதனைபுரிந்த ஆளுமையா... சறுக்கிய தலைமையா? - முழுமையான அலசல் கட்டுரையை வாசிக்க > மூன்று ஆண்டுகள் எடப்பாடி ஆட்சி எப்படி? - சாதனை ஆளுமையா... சறுக்கிய தலைமையா? https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-edappadi-palanisamy-3-year-governance

முத்துக்குமாரசாமி வழக்கு என்னாச்சு?

ஐந்து வருடங்களுக்கு முன்பு நெல்லையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் விசாரணைக்கு வராமல் கிடப்பில் இருப்பது, அவரின் குடும்பத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் உள்ள வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றிய முத்துக்குமாரசாமி, 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நெல்லை வேளாண்மைத் துறையில் காலியாக இருந்த ஏழு டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் வசூல் செய்து கொடுக்குமாறு அமைச்சரும் உயரதிகாரியும் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது...

முத்துக்குமாரசாமி
முத்துக்குமாரசாமி

ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் கட்டம் கட்டப் பட்ட 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளப்பட்டு விட்டார். அதோடு, அவருடைய குடும்பத் திருமண விழாவை படாடோபமாகக் கொண்டாடி னார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அ.தி.மு.க பிரமுகர்கள் என்று பலரும் கலந்துகொண்டு அசத்தியிருக்கின்றனர். இத்தகைய சூழலில், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கில் தமிழக அரசுக்கு எப்படி ஆர்வம் இருக்கும் என்கிற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து நிற்கிறது!

- முத்துக்குமாரசாமியின் உறவினரும் வழக்கறிஞருமான பிரம்மாவிடம் பேசியபோது கிடைத்த 'அப்டேட்' தகவல்களை முழுமையாக அறிய க்ளிக் செய்க... > வருடங்கள் ஐந்து ஆச்சு... முத்துக்குமாரசாமி வழக்கு என்னாச்சு? https://www.vikatan.com/news/judiciary/muthukumarasamy-suicide-case-issue

பறிபோகின்றனவா ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள்?

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழக முதலமைச்சர் உட்பட அமைச்சர் பெருமக்கள் பலரும் கலந்துகொள்ளாததே பெரும்சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், குஜராத்திலிருந்து ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள் மீட்டுவரப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு வாதங்களை சரியாக முன்வைக்கவில்லை என்று புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது.

 ராஜராஜ சோழன், லோக மாதேவி
ராஜராஜ சோழன், லோக மாதேவி

பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் பட்டத்து இளவரசியான லோக மாதேவி சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயின. இந்தச் சிலைகளை சாராபாய் ஃபவுண்டேஷன் மியூசியத்திலிருந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டு வந்தனர். இதையடுத்து, 'சிலைகள் எங்களுடையவைதான்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சாராபாய் ஃபவுண்டேஷன். அந்த வழக்கில்தான், 'தமிழக அரசு அழுத்தமான வாதங்களை முன்வைக்கவில்லை; குஜராத் மியூசியத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறது' என்று குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

- விரிவான செய்திக்கு > பறிபோகின்றனவா ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள்? - வழக்கில் அலட்சியம் காட்டும் அரசுத் தரப்பு https://www.vikatan.com/social-affairs/judiciary/gujarat-raja-raja-chozhan-and-amman-statues-recovery-case-issue

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு